செய்திகள்தமிழ்நாடு

நாகப்பட்டினத்தில் வெல்லப்போவது யார்? – லெட்சுமண பெருமாள்

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி- ஒரு பார்வை
நாகப்பட்டினம், கீழ்வேளூர் (தனி), வேதாரண்யம்,  திருத்துறைப்பூண்டி (தனி), திருவாரூர், நன்னிலம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.
நாகை பாராளுமன்றத் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த முறை இந்திய கம்யுனிஸ்ட் கட்சி வேட்பாளராக செல்வராசு என்பவரும் அதிமுக சார்பில் தாழை ம.சரவணனும் களத்தில் நிற்கின்றனர். இஸ்லாமியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகமுள்ள தொகுதி நாகப்பட்டினம்.
கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் நாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில்தான் வருகிறது. அதிமுக சார்பாக வென்ற தமிமுன் அன்சாரியும் திமுகவிற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தொகுதி வாரியாக வெற்றி விபரம்

நாகப்பட்டினம்: தமீமுன் அன்சாரி மஜக: வெற்றி. வாக்கு :64,903

கீழ்வேளூர்: மதிவாணன். திமுக வெற்றி: வாக்கு :61,999

வேதாரண்யம்: ஓ எஸ் மணியன் அதிமுக வெற்றி: வாக்கு : 60,836

திருத்துறைப்பூண்டி (தனி), ஆடலரசன். திமுக வெற்றி: வாக்கு : 72,127

திருவாரூர்: மு.கருணாநிதி. திமுக வெற்றி. வாக்கு : 1,21,473

நன்னிலம்: ஆர்.காமராஜ். அதிமுக வெற்றி : வாக்கு :1,00,918

தேர்தலில் எந்த அணி வெற்றி பெரும் வாய்ப்பைக் கொண்டுள்ளது என்பதற்கான எனது தரப்பு விஷயங்களை இந்த லிங்கில் சென்று படிக்கலாம்.

2016 சட்டசபை தேர்தலில் அதிமுக அணி பெற்ற வாக்குகள் 4,28,000

2016 சட்டசபை தேர்தலில் திமுக அணி பெற்ற வாக்குகள்      5,14,000

திமுக அணியின்  வெற்றி வாக்கு வித்தியாசம் 86,000 !!!

திமுக அணியில் உள்ள இந்திய கம்யுனிஸ்ட் கட்சி வெல்லும் தொகுதியாக நாகப்பட்டினம் இருக்கும். இயல்பாகவே நாகப்பட்டினம் தொகுதி அதிமுகவிற்கு மிகவும் பலவீனமான தொகுதி ஆகும். அந்தவகையில் பார்த்தால் நாகப்பட்டினம் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி வெல்லும் தொகுதியாக இருக்கும் என்பதே எனது கணிப்பு.

(Visited 68 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close