RGக்கு ஐம்பது கோடி – காங்கிரஸின் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம்

மத்திய அரசின் அமலாக்கத்துறை தன் விசாரணையில் உள்ள ஆகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கிறிஸ்டியன் மிஷல் என்ற ஆயுத பேர் தரகரை பிடித்து விசாரித்து  வருகிறது. கடந்த வியாழனன்று தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  இடைக்கால குற்றப்பத்திரிகையில் சில அதிரடி தகவல்கள் இடம் பெற்றன.

கிறிஸ்டியன் மிஷல் கொடுத்த தகவல் அடிப்படையில் திருமதி. காந்தி என்பவருக்கு ஊழலில் தொடர்பிருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்திலையில் வேறு சில தரகர்களின் பெயரை மிஷல் சொன்னதன் பேரில் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் சுஷன் குப்தா என்ற தரகர் தன் குறிப்பேட்டில் RG என்ற பெயரை எழுதி வைத்துள்ளார்.

RG என்பது யார் என்ற கேள்விக்கு ரஜத் குப்தா என்று சொல்லியிருக்கிறார் சுஷன். ரஜத் குப்தாவிடம் விசாரித்த போது தாம் சுஷனிடம் 2007 முதல் சில பணப்பரிமாற்றங்கள் செய்தது உண்மை என்றும் ஆனால் இந்த ₹50 கோடியை 2004 முதல் 2016 வரை வாங்கியவர் பற்றி சுஷன் தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சொல்லிவிட்டார்.

RG யார், திருமதி காந்தி யார் என்பது பற்றி ஆதாரபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய மிஷல், சுஷன் உள்ளிட்ட தரகர்களை மேலும் விசாரிக்க மேலும் தீவிர விசாரணைக்கு அமலாக்கத்துறை உட்படுத்தவிருக்கிறது. அப்போது சில கட்சிகள் நபர்களுக்கு தலைவலி ஆரம்பமாகும் என்று தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 13 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *