சார் பேப்பர்! – அம்பானி கொண்டு வருகிறார்

News 18 என்ற பெயரில் நாட்டிலுள்ள அத்தனை மொழிகளிலும் தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கோலோச்சி வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தற்போது First Post என்ற பெயரில் தினசரி செய்தித்தாள் தொடங்குகிறது.

இதற்கான பேச்சு வார்த்தைகள், அனுமதிகள் சட்ட விதிமுறைகள் எல்லாம் தயாரான நிலையில் வரும் ஜனவரி 26, குடியரசு தினத்தில் இருந்து அம்பானி பேப்பர் வீட்டுக்கு வரும். முதலில் ஆங்கிலத்தில் மட்டும் வரவிருக்கும் இந்த செய்தித்தாள் சிறிது சிறிதாக எல்லா மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று ரிலையன்ஸ் அலுவலகத்தில் பேச்சு உள்ளது.

தேசிய அளவில் தொடங்கப்படும் First Post ஆங்கிலச் செய்தித்தாளுக்கு Times of India நிறுவனத்தின் வியாபாரத் தலைவராகவும், News 18ன் ஆலோசகருமான ராகுல் கன்சல் என்பவர் தலைமை ஏற்கிறார்.

ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், லண்டனில் வெளிவரும் டெலிகிராஃப் போன்ற பத்திரிக்கைகளில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் ஸ்வாமி இந்தப் பத்திரிக்கைக்கும் News 18 ஊடகக் குழுமத்திற்கும் ஆசிரியர்குழு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு ஊடகங்கள் பத்திரிக்கைகளில் பணியாற்றி 33 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பி.வி.ராவ் இதன் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார்.

டிவி, இண்டர்நெட், ஜியோ ஃபோன் என்று ஏற்கனவே நம் கையோடு கூடவரும் அம்பானி குழுமம் ஜனவரி 26லிருந்து ”சார் பேப்பர்!” என்றும் தினமும் காலையில் வீட்டுக்குள் வரவுள்ளது.

(Visited 28 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *