11-04-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

Related image                                                                             

இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு

விளம்பி வருஷம் பங்குனி மாதம் 28ஆம் நாள், ஏப்ரல் 11ஆம் தேதி வியாழக்கிழமை

ஷஷ்டி திதி 12.40 மணி வரை பிறகு சப்தமி

மிருகசீர்ஷம் நக்ஷத்திரம் காலை 8.40 வரை பிறகு திருவாதிரை

ராகுகாலம் : மதியம் 1.30 – 3.00

எமகண்டம் : காலை 6.00 – 7.30

நல்ல நேரம்: காலை 10.30 – 11.30

சூலம் : தெற்கு

 

ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கான இன்றைய பலன்கள்:

அஸ்வதி:

நண்பர்களால் உதவி கிட்டும். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். திருமணம் தடைப்பட்டவர்களுக்கு திருமணம் கைகூடும். கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். நல்லது சொல்லப் போய் சிக்கலில் முடிய வாய்ப்புள்ளதால் அறிவுரைகள் சொல்வதைத் தவிர்க்கவும். பொதுவில் பேச்சில் கவனம் அவசியம்.

கணபதி வழிபாடு விக்கினங்களைத் தீர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பரணி:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம்.

அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி“மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

கார்த்திகை:

அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக முடியும். நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.மகனுக்கோ மகளுக்கோ திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். நண்பர்களால் உதவி கிட்டும்

முருகனை வழிபட சிக்கல்கள் தீரும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

ரோகிணி:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். பயணங்களில் கவனம் அவசியம். உடல் நலனில் கவனம் அவசியம்.

அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

மிருகசீர்ஷம்:

அலுவலகத்தில் பதவி, ஊதிய உயர்வு குறித்த செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள். பழைய கடன்பாக்கி வசூலாகும். மொத்தத்தில் மனமகிழ்ச்சியான நாள்.

 

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

திருவாதிரை:

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பெரிதாகுமோ என்று பயந்த ஒரு பிரச்சனை பாதிப்பின்றி ஒன்றுமில்லாமல் மறைந்து போய் நிம்மதி தரும். காரிய தாமதங்கள் இருந்தாலும் இறுதியில் காரியங்கள் சிறப்பாக முடியும். பேச்சில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். அரசியல் குறித்து சமூக ஊடகங்களில் வாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் மறையும். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு துன்பங்களைத் தீர்த்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

புனர்பூசம்:

நீண்ட நாள் தொல்லை கொடுத்துவந்த பிரச்சனைகள் தீரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமூக அந்தஸ்து கூடும் நாள். பழைய கடன்பாக்கி வசூலாகும். நண்பர்களால் உதவி கிட்டும். எதிர்கால முன்னேற்றத்துகான திட்டங்களைச் செயல்படுத்த உகந்த நாள்.

தக்ஷிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பூசம்:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். உங்களது நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும் நாள்.

 

ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல்களைத் தீர்க்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் படிப்பது மகிழ்ச்சி தரும்.

 

ஆயில்யம்:

அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளவும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாகப் பேசவும். வாக்கு வாதங்கள் வேண்டாம். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். சமூக ஊடகங்களில் கருத்துச் சொல்வது விவாதிப்பதைத் தவிர்க்கவும்.

 

பெருமாள் வழிபாடு நிம்மதி தரும். விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்லது. திவ்யப்ரபந்த பாடல்கள் (தெரிந்தவற்றை) பாராயணம் செய்வது நலம் பயக்கும். புருஷ ஸூக்தம் பாடமிருப்போர் பாராயணம் செய்யலாம்.

மகம்:

 

பிறருக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகளால் அவர்களுக்கு வெற்றி கிட்டும். உங்கள் மதிப்பு உயரும். அதனால் மன மகிழ்ச்சி ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணவரவு இருக்கும். பொழுதுபோக்கு, கேளிக்கை விஷயங்களில் கலந்து கொள்வீர்கள்.

 

கணபதி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.

 

பூரம்:

 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்கால முன்னேற்றத்துக்கான நல்ல திட்டங்களைத் தீட்டுவீர்கள். பயணத்தில் கவனம் தேவை. ஜாமீன் கொடுப்பது, கடன் கொடுப்பது இதெல்லாம் வேண்டாம். உறவினர் நண்பர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் கவனம் தேவை. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல பிரச்சனைகள் உங்களை நோக்கி வந்தாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது.

 

அம்பாள் வழிபாடு அனைத்து நன்மைகளையும் தரும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதியில் “சென்னியது உன்பொன் திருவடித்தாமரை” எனத் தொடங்கும் ஆறாவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

உத்திரம்:

 

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் மதிப்புக் கூடும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிர்கால முன்னேற்றத்துக்கான திட்டம் ஒன்றை நண்பர் உறவினர் உதவியுடன் நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

ஹஸ்தம்:

 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பயணத்தில் கவனம் தேவை. ஜாமீன் கொடுப்பது, கடன் கொடுப்பது இதெல்லாம் வேண்டாம். உறவினர் நண்பர்களிடையே ஒற்றுமை ஓங்கும். கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். பணவரவு இருக்கும் நாள். கலைஞர்கள் பாராட்டப்படுவார்கள்.

 

அம்பாள் வழிபாடு அல்லல்களைக் குறைக்கும். அபிராமி அந்தாதியில் “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” எனத் தொடங்கும் நான்காவது பாடலைப் பாராயணம் செய்யவும், “ஸுதா ஸிந்தோர் மத்யே” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி எட்டாவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

சித்திரை:

 

தொழிலில் லாபம் இருக்கும். செல்வாக்கு கூடும் நாள். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். எடுத்த முயற்சிகள் கைகூடும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

 

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

ஸ்வாதி:

 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பெரிதாகுமோ என்று பயந்த ஒரு பிரச்சனை பாதிப்பின்றி ஒன்றுமில்லாமல் மறைந்து போய் நிம்மதி தரும். காரிய தாமதங்கள் இருந்தாலும் இறுதியில் காரியங்கள் சிறப்பாக முடியும். பேச்சில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். அரசியல் குறித்து சமூக ஊடகங்களில் வாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் மறையும். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்.

 

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

விசாகம்:

 

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்.

முருகனை வழிபட முத்தான நாளாகும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

 

அனுஷம்:

 

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் மதிப்புக் கூடும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிர்கால முன்னேற்றத்துக்கான திட்டம் ஒன்றை நண்பர் உறவினர் உதவியுடன் நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

 

ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் (கதை அல்லது ஸ்லோகங்கள்) படிப்பது மகிழ்ச்சி தரும்.

கேட்டை:

 

புதிய முயற்சிகளை ஒத்தி போடவும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளவும். சக ஊழியர்களிடம் சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பயணங்களின் போது குறிப்பாக பர்ஸ் விஷயத்தில் கவனம் தேவை.

 

சிவபெருமான் வழிபாடு சிக்கல்களைத் தீர்க்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

மூலம்:

பணவரவு இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். காரிய தாமதம் தடைகள் ஏற்படும்.

 

பிள்ளையார் வழிபாடு பெருமை தரும். விநாயகர் அகவல் படிப்பது, கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பூராடம்:

 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பெரிதாகுமோ என்று பயந்த ஒரு பிரச்சனை பாதிப்பின்றி ஒன்றுமில்லாமல் மறைந்து போய் நிம்மதி தரும். காரிய தாமதங்கள் இருந்தாலும் இறுதியில் காரியங்கள் சிறப்பாக முடியும். பேச்சில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். அரசியல் குறித்து சமூக ஊடகங்களில் வாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் வேண்டாம். உடல் நிலையில் கவனம் தேவை.

அம்பாள் வழிபாடு அனைத்து நன்மைகளையும் தரும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதியில் “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

உத்திராடம்:

 

நீண்ட காலப் பிரச்சனை முடிவுக்கு வரும். எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நல்ல திட்டம் ஒன்று தீட்டுவீர்கள். அதில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கதவு தட்டும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சமூகத்தில் செல்வாக்கு கூடும் நாள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

 

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

திருவோணம்:

 

புதிய முயற்சிகள் தள்ளிப் போடவும். இயந்திர சாதனங்களில் பணியாற்றுவோருக்கு கவனம் தேவை. பயணங்களில் கவனம் அவசியம். நண்பர்கள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். காரிய தாமதங்கள் இருக்கும். மொத்தத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.

அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

அவிட்டம்:

 

பணம் வரும் நாள். பழைய கடன்களைத் தீர்ப்பீர்கள். நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். நினைத்த காரியம் நடந்தேறும். தொழிலில் நல்ல லாபம் கிட்டும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்திடுவீர்கள்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

சதயம்:

 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பெரிதாகுமோ என்று பயந்த ஒரு பிரச்சனை பாதிப்பின்றி ஒன்றுமில்லாமல் மறைந்து போய் நிம்மதி தரும். காரிய தாமதங்கள் இருந்தாலும் இறுதியில் காரியங்கள் சிறப்பாக முடியும். பேச்சில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். அரசியல் குறித்து சமூக ஊடகங்களில் வாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் வேண்டாம். உடல் நிலையில் கவனம் தேவை. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

 

தீயபலன்களின் தாக்கம் குறைய துர்க்கை வழிபாடு அவசியம். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

பூரட்டாதி:

 

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் மதிப்புக் கூடும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிர்கால முன்னேற்றத்துக்கான திட்டம் ஒன்றை நண்பர் உறவினர் உதவியுடன் நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

 

தக்ஷிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

உத்திரட்டாதி:

 

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். விரும்பிய பணிமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள்.

 

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ரேவதி:

 

அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளவும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாகப் பேசவும். வாக்கு வாதங்கள் வேண்டாம். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். சமூக ஊடகங்களில் கருத்துச் சொல்வது விவாதிப்பதைத் தவிர்க்கவும்.

 

பெருமாள் வழிபாடு பிரச்சனைகளைத் தீர்க்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்லது. திவ்யப்ரபந்த பாடல்கள் (தெரிந்தவற்றை) பாராயணம் செய்வது நலம் பயக்கும்.

 

ஸ்ரீ மாத்ரே நம:

சுபம்

𝒮𝒜 𝑅𝒶𝓂𝒶𝓈𝓌𝒶𝓂𝓎
(Visited 58 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *