மேஜர் முகுந்த் வரதராஜன் பிறந்த தினம் – ஏப்ரல் 12

இந்திய ராணுவத்திற்கு அமைதிக்காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது பெற்ற  மேஜர் முகுந்த் வரதராஜனின் பிறந்த தினம் இன்று.

சென்னையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர் வரதராஜன் – கீதா தம்பதியினருக்கு மகனாக முகுந்த் 1983ஆம் ஆண்டு பிறந்தார். அவரது பாட்டனார் மற்றும் தாய்மாமன்கள் ஆகியோரும் ராணுவத்தில் பணியாற்றியவர்கள்தான். அவர்களைப் பின்பற்றி முகுந்தும் ராணுவப் பணியில் சேரவேண்டும் என்று சிறுவயதில் இருந்தே விரும்பி வந்தார்.

தனது இளங்கலை வணிகவியல் படிப்பை  சந்திரசேகர சரஸ்வதி விஸ்வ வித்தியாலயத்தில் பயின்ற முகுந்த், பத்திரிகைத்துறைக்கான பட்டப்படிப்பை சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் பயின்றார்.

தனது ராணுவப் பயிற்சியை முடித்தபிறகு 2006ஆம் ஆண்டு முகுந்த் ராஜ்புத் படைப்பிரிவில் லெப்டினெண்ட்டாக இணைந்தார். தனது பணிக்காலத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையின் சார்பாக லெபனான் நாட்டிலும் பணிபுரிந்தார்.

தனது கல்லூரித் தோழியான இந்து ரெபேக்கா வர்கீஸை காதல் மணம் புரிந்தார். இந்தத் தம்பதியினரின் ஒரே மகள் அர்ஷேயா

2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் நாள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் மேஜர் முகுந்த் பலிதானமானார். இறப்பதற்கு முன்னர் மூன்று தீவிரவாதிகளை முகுந்த் சுட்டுக் கொண்டார்.

நாட்டிற்காக மிக உயர்ந்த தியாகத்தைச் செய்த முகுந்துக்கு இந்திய அரசு அமைதிகாலத்தில் வழங்கப்படும் அசோக சக்ரா விருது வழங்கி மரியாதை செலுத்தியது. இந்த விருதைப் பெறும் நாலாவது தமிழர் மேஜர் முகுந்த் வரதராஜன்.

நாம் பாதுகாப்பாக வாழ்வதற்காக தங்கள் உயிரையும் பணயம் வைக்கும் மேஜர் முகுந்த் வரதராஜன் போன்ற ராணுவ வீரர்களின் சேவையை நாம் என்றும் நினைவில் கொள்வோம்

(Visited 23 times, 1 visits today)
3+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *