சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த வேலூர் தவிர்த்து நடந்த 38 தொகுதி லோக்சபா தேர்தலில் 71.90 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த சத்யபிரதா சாஹூ கூறியதாவது: 38 லோக்சபா தொகுதிக்கான தேர்தலில் 71.90 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக தர்மபுரியில் 80.49 சதவீத ஓட்டுகளும், குறைந்த பட்சமாக தென் சென்னையில், 56.34 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளது.
தொகுதி வாரியாக வாக்கு பதிவு சதவீதம் :
திருவள்ளூர் – 71.68 %
வட சென்னை – 63.47%
தென் சென்னை – 56.41 %
மத்திய சென்னை- 59.25%
ஸ்ரீபெரும்புதூர் – 61.61%
காஞ்சிபுரம் – 73.82%
அரக்கோணம் – 76.64%
கிருஷ்ணகிரி- 75.59%
தர்மபுரி 80.49%
திருவண்ணாமலை – 77.51%
ஆரணி – 78.80%
விழுப்புரம்- 78.22%
கள்ளக்குறிச்சி – 78.38%
சேலம் – 77.33%
நாமக்கல் -79.98%
ஈரோடு – 72.67%
திருப்பூர் – 72.93%
நீலகிரி – 73.70%
கோவை- 63.99%
பொள்ளாச்சி- 70.78%
திண்டுக்கல் – 75%
கரூர்- 79.11%
திருச்சி- 68.89%
பெரம்பலூர் – 78.70%
சிதம்பரம் – 77.72%
மயிலாடுதுரை-73.56%
நாகப்பட்டினம் – 76.49%
தஞ்சாவூர்- 72.46%
சிவகங்கை – 69.34%
மதுரை – 65.34%
தேனி – 74.75%
விருதுநகர் – 72.01%
ராமநாதபுரம் – 67.85%
தூத்துக்குடி – 69.03%
தென்காசி – 70.98%
திருநெல்வேலி – 66.68%
கன்னியாகுமரி – 69.62%