23-04-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

Related image                                                                               

இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு

ஸ்ரீ விகாரி வருஷம் சித்திரை மாதம் 10ஆம் நாள், ஏப்ரல் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை

சதுர்த்தி திதி மாலை 2.32 மணி வரை பிறகு பஞ்சமி

கேட்டை நக்ஷத்திரம் நாள் முழுவதும்

ராகுகாலம் : மாலை 3.00 – 4.30

எமகண்டம் : காலை 9.00 – 10.30

நல்ல நேரம்: காலை 7.30 – 8.30 ; மாலை 4.30 – 5.30

சூலம் : வடக்கு

ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கான இன்றைய பலன்கள்:

அஸ்வதி:

சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். நண்பர்களால் உதவிகள் கிட்டும். எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து தேவையான பணிகளை முடித்துக் கொள்வீர்கள். வராக்கடன் வசூலாகும். திருமணத்துக்கோ, குழந்தைப் பேறுக்கோ காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்.

பிள்ளையார் வழிபாடு பெருமைகளைச் சேர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பரணி:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்

அம்பாள் வழிபாடு நன்மைகளைப் பெருக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

கார்த்திகை:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உடல் நலனில் கவனம் அவசியம்.

முருகனை வழிபட சிக்கல்கள் விலகி முன்னேற்றம் கைகூடும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

ரோகிணி:

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவர். பணிகளில் பாராட்டுப் பெறுவர். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி கணிசமான முன்பணம் வரும். பயணங்களில் வெற்றி கிட்டும். மகன் அல்லது மகள் உயர்கல்விக்கான முயற்சி சாதகமான முன்னேற்றம் இருக்கும்.

அம்பாள் வழிபாடு அருமையான நாளாக்கும். “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

மிருகசீர்ஷம்:

பயணங்களில் கவனம் தேவை. பணிச்சுமை அதிகரிக்கும். மறதியால் சிக்கல்கள் வர வாய்ப்பிருப்பதால் முக்கியப்பணிகளில் கவனத்துடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்கள் பாதிப்படையவோ, தொலையவோ வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். குடும்ப உறுப்பினர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் கவனம் அவசியம்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களை நீக்கி நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

திருவாதிரை:

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் மதிப்புக் கூடும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வராக்கடன் வசூலாகும். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு துன்பங்களைத் தீர்த்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

புனர்பூசம்:

கடன் கொடுக்க வாங்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்கவும். இயந்திரப்பணியாளர்கள் கவனத்துடன் பணி செய்யவேண்டும். எதிர்பார்த்த பணி ஒன்று நிறைவேறத் தாமதமாகும். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். அரசியல் குறித்து நேரில் விவாதிப்பதோ சமூக ஊடகங்களில் கருத்துக் கூறவோ வேண்டாம்

 

தக்ஷிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பூசம்:

நீண்ட நாள் கவலையளித்த ஒரு விஷயம் குறித்து நல்ல முடிவு பிறக்கும் நாள். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். நண்பர்கள் உதவி கிட்டும்.

 

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ஆயில்யம்:

கடன் கொடுக்க வாங்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்கவும். இயந்திரப்பணியாளர்கள் கவனத்துடன் பணி செய்யவேண்டும். எதிர்பார்த்த பணி ஒன்று நிறைவேறத் தாமதமாகும். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். அரசியல் குறித்து நேரில் விவாதிப்பதோ சமூக ஊடகங்களில் கருத்துக் கூறவோ வேண்டாம்

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

மகம்:

நீண்ட நாள் இழுபறியான ஒரு விஷயம் குறித்து நல்ல முன்னேற்றமான தகவல் வரும் நாள். நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

 

கணபதி வழிபாடு நன்மைகளைத் தரும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.

பூரம்:

வேண்டிய பணி/இடமாற்றம், ஊதிய/ பதவி உயர்வு, மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைத்தல் ஆகிய நல்ல நிகழ்வுகளுக்கு வாய்ப்புண்டு. புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

உத்திரம்:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம்.

 

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ஹஸ்தம்:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்

 

அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

சித்திரை:

பயணங்களில் கவனம் தேவை. பணிச்சுமை அதிகரிக்கும். மறதியால் சிக்கல்கள் வர வாய்ப்பிருப்பதால் முக்கியப்பணிகளில் கவனத்துடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்கள் பாதிப்படையவோ, தொலையவோ வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். குடும்ப உறுப்பினர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் கவனம் அவசியம்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

ஸ்வாதி:

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் மதிப்புக் கூடும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வராக்கடன் வசூலாகும். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

விசாகம்:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம்.

முருகனை வழிபட முன்னேற்றம் வரும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

அனுஷம்:

அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக முடியும். நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் பாராட்டுப் பெறுவர். வேண்டிய பணியிட மாற்றம்/ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற நற்செய்திகள் வர வாய்ப்புண்டு. நண்பர்களால் உதவி கிட்டும்

ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் (கதை அல்லது ஸ்லோகங்கள்) படிப்பது மகிழ்ச்சி தரும்.

கேட்டை:

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பெரிதாகுமோ என்று பயந்த ஒரு பிரச்சனை பாதிப்பின்றி ஒன்றுமில்லாமல் மறைந்து போய் நிம்மதி தரும். காரிய தாமதங்கள் இருந்தாலும் இறுதியில் காரியங்கள் சிறப்பாக முடியும். பேச்சில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். அரசியல் குறித்து சமூக ஊடகங்களில் வாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் வேண்டாம்.
உடல் நிலையில் கவனம் தேவை.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

மூலம்:

சற்றே கவலையான விஷயம் குறித்து நல்ல செய்தி வரும் நாள். நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

பிள்ளையார் வழிபாடு பிரச்சனைகளைத் தீர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பூராடம்:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்

அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

உத்திராடம்:

பணவரவு இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். காரிய தாமதம் தடைகள் ஏற்படும்.

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

திருவோணம்:

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். விரும்பிய பணிமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள்.

அம்பாள் வழிபாடு அல்லல்களைத் தீர்க்கும். “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

அவிட்டம்:

மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். யாருக்கும் ஆலோசனை சொல்ல வேண்டாம். பயணங்களின் போது கவனம் அவசியம். கனரக இயந்திரங்களில் பணியாற்றுவோர் கவனமுடன் இருக்கவும்.

துர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

சதயம்:

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வராக்கடன் வசூலாகும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய நல்ல செய்தி வரும்.

ஸ்ரீ துர்க்கை வழிபாடு நன்மை தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

பூரட்டாதி:

கடன் கொடுக்க வாங்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்கவும். இயந்திரப்பணியாளர்கள் கவனத்துடன் பணி செய்யவேண்டும். எதிர்பார்த்த பணி ஒன்று நிறைவேறத் தாமதமாகும். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். அரசியல் குறித்து நேரில் விவாதிப்பதோ சமூக ஊடகங்களில் கருத்துக் கூறவோ வேண்டாம்

தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் விலகும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

உத்திரட்டாதி:

திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். விற்பனைத் துறையினர் இன்றைய இலக்கை அடைவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். செவ்வனே செய்து பாராட்டுப் பெறும் நாளாக உள்ளது. நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ரேவதி:

அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளவும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாகப் பேசவும். வாக்கு வாதங்கள் வேண்டாம். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். சமூக ஊடகங்களில் கருத்துச் சொல்வது விவாதிப்பதைத் தவிர்க்கவும்.

தீயபலன்களின் தாக்கம் குறைய துர்க்கை வழிபாடு அவசியம். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

ஸ்ரீ மாத்ரே நம:

 

சுபம்

𝒮𝒜 𝑅𝒶𝓂𝒶𝓈𝓌𝒶𝓂𝓎
(Visited 50 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *