25-04-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

Related image                                                                                

இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு

ஸ்ரீ விகாரி வருஷம் சித்திரை மாதம் 12ஆம் நாள், ஏப்ரல் 25ஆம் தேதி வியாழக்கிழமை

ஷஷ்டி திதி மாலை 4.05 மணி வரை பிறகு ஸப்தமி

பூராடம் நக்ஷத்திரம் நாள் முழுவதும்

ராகுகாலம் : மதியம் 1.30 – 3.00

எமகண்டம் : காலை 6.00 – 7.30

நல்ல நேரம்: காலை 10.30 – 11.30

சூலம் : தெற்கு

ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கான இன்றைய பலன்கள்:

அஸ்வதி:

திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். விற்பனைத் துறையினர் இன்றைய இலக்கை அடைவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். செவ்வனே செய்து பாராட்டுப் பெறும் நாளாக உள்ளது. நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

பிள்ளையார் வழிபாடு பெருமை சேர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பரணி:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பயணங்களின் போது கவனம் தேவை. மேலதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். சக ஊழியர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம்.

அம்பாள் வழிபாடு அல்லல்களைத் தீர்க்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

கார்த்திகை:

குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக முடியும். நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். நண்பர்களால் உதவி கிட்டும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வராக்கடன் வசூலாகும். எதிர்பாராத வகையில் பணம் வரும் நாள்.

முருகனை வழிபட முன்னேற்றம் கைகூடும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

ரோகிணி:

கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். அலுவலகத்தில் பதவி, ஊதிய உயர்வு குறித்த செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நீங்கள் சொன்ன வாக்கு பலித்து பாராட்டப்படுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும். எதிர்காலம் குறித்த நல்ல திட்டம் தீட்டுவீர்கள்.

அம்பாள் வழிபாடு அருமையான நாளாக்கும். “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

மிருகசீர்ஷம்:

நண்பர்களால் உதவி கிட்டும். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பயணங்களில் கவனம் அவசியம். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

 

ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களை நீக்கி நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

திருவாதிரை:

நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். விற்பனைத் துறையினர் இன்றைய இலக்கை அடைவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். செவ்வனே செய்து பாராட்டுப் பெறும் நாளாக உள்ளது

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

புனர்பூசம்:

கடன் கொடுக்க வாங்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்கவும். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். அரசியல் குறித்து நேரில் விவாதிப்பதோ சமூக ஊடகங்களில் கருத்துக் கூறவோ வேண்டாம்

தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீரும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

பூசம்:

நீண்ட நாள் இழுபறியான ஒரு விஷயம் குறித்து நல்ல முன்னேற்றமான தகவல் வரும் நாள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டுப் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். பழைய பாக்கி வசூலாகும்.

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ஆயில்யம்:

உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம். உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் வாக்கு வாதம் வேண்டாம். அவசியமற்ற விஷயங்களில் கருத்துச் சொல்ல வேண்டாம். வாக்கு கொடுப்பது தேவையில்லை. பயணங்களில் எச்சரிக்கை அவசியம்

ஸ்ரீதுர்க்கை வழிபாடு துன்பங்களைத் தீர்த்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

மகம்:

 

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்.

 

கணபதி வழிபாடு நன்மைகள் சேர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.

 

பூரம்:

தொழிலில் லாபம் இருக்கும். செல்வாக்கு கூடும் நாள். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். எடுத்த முயற்சிகள் கைகூடும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமூக அந்தஸ்து கூடும் நாள்.

அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

உத்திரம்:

அலுவலகத்தில் பதவி, ஊதிய உயர்வு குறித்த செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள். பழைய கடன்பாக்கி வசூலாகும். மொத்தத்தில் மனமகிழ்ச்சியான நாள். மகனுக்கோ மகளுக்கோ எதிர்பாராத வகையில் கல்வி/திருமண வாய்ப்பு நல்லபடியாக கைகூடும் நாள்.

 

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

ஹஸ்தம்:

அலுவலகத்தில் நீண்ட நாள்பட்ட சிக்கலைத் தீர்த்து வைத்து மேலதிகாரிகள் பாராட்டைப் பெறுவீர்கள். நண்பர்கள் சக ஊழியர்கள் உதவி கொண்டு கொடுத்த பணியைச் செவ்வனே முடித்து அதிகாரிகள் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். மதிப்பு கூடும் நாள். விளையாட்டுத் துறையினர் சாதனை படைப்பார்கள். தொழில்முனைவோர் முயற்சிகளுக்கு ஊக்கமும் உதவியும் பெறுவார்கள். நல்ல முடிவுகள் எட்டப்படும் நாளாக இருக்கும்.

 

அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

சித்திரை:

கடன் கொடுக்க வாங்க வேண்டாம். எதிர்பார்த்த பணி ஒன்று நிறைவேறத் தாமதமாகும். பேச்சில் கவனம் அவசியம். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்கவும். இயந்திரப்பணியாளர்கள் கவனத்துடன் பணி செய்யவேண்டும். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். பொது நிகழ்வுகள், அரசியல் குறித்து கருத்துக் கூற வேண்டாம்

ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

ஸ்வாதி:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

விசாகம்:

 

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். இயந்திரப்பணியாளர்கள் கவனத்துடன் பணி செய்யவேண்டும். எதிர்பார்த்த பணி ஒன்று நிறைவேறத் தாமதமாகும். உடல் நலனில் கவனம் அவசியம்.

முருகனை வழிபட தடைகள் விலகும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

அனுஷம்:

திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். விற்பனைத் துறையினர் இன்றைய இலக்கை அடைவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். செவ்வனே செய்து பாராட்டுப் பெறும் நாளாக உள்ளது. நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் (கதை அல்லது ஸ்லோகங்கள்) படிப்பது மகிழ்ச்சி தரும்.

கேட்டை:

நண்பர்களால் உதவி கிட்டும். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பயணங்களில் கவனம் அவசியம். உடல் நலனில் கவனம் அவசியம்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

மூலம்:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்.

பிள்ளையார் வழிபாடு பெருமை சேர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பூராடம்:

அலுவலகத்தில் நீண்ட நாள்பட்ட சிக்கல் தீர்ந்து நிம்மதி பெறுவீர்கள். நண்பர்கள் சக ஊழியர்கள் உதவி கொண்டு கொடுத்த பணியைச் செவ்வனே முடிப்பீர்கள். எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். விளையாட்டுத் துறையினர் சாதனை படைப்பார்கள். நல்ல முடிவுகள் எட்டப்படும் நாளாக இருக்கும்.

அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

உத்திராடம்:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்ளவும். பயணங்களின் போது கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம்.

சிவபெருமான் வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

திருவோணம்:

முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகும்.

அம்பாள் வழிபாடு நன்மைகள் சேர்க்கும். “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

அவிட்டம்:

அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வேண்டிய பணி/இடமாற்றம் ஏற்படும். தொழில்துறையினருக்கு நல்ல லாபம் கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி முன்பணம் வர வாய்ப்புண்டு. வக்கீல்கள் வெற்றிவாகைச் சூடுவார்கள். கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.

துர்க்கை வழிபாடு நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

சதயம்:

நண்பர்களால் உதவி கிட்டும். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பயணங்களில் கவனம் அவசியம். பரபரப்பான நாளாகத் தெரிவதால் கவனத்துடன் செயல்படவும்.

ஸ்ரீ துர்க்கை வழிபாடு நன்மை தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

பூரட்டாதி:

 

நண்பர்களால் உதவி கிட்டும். அலுவலகத்தில் பணிகள் சீராக முடியும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். விற்பனைத் துறையினர் இன்றைய இலக்கை அடைவீர்கள். பயணங்களில் கவனம் அவசியம்.

தக்ஷிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் பெருகும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

உத்திரட்டாதி:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ரேவதி:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம்.

தீயபலன்களின் தாக்கம் குறைய துர்க்கை வழிபாடு அவசியம். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

ஸ்ரீ மாத்ரே நம:

 

சுபம்

𝒮𝒜 𝑅𝒶𝓂𝒶𝓈𝓌𝒶𝓂𝓎
(Visited 56 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

Comment (1)

  1. Predictions by Astrologer Ramaswamy is wonderful .
    Apt & exact predictions
    Slokas advised for all stars are really helpful & can be easily followed.
    We are in other state and we are forwarding this to all our tamil groups and everyone saying these predictions are very well matching with them.
    Good work ore India
    Best wishes to Ramaswamy
    We wish to continue this .regards

    0

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *