கங்கை ஆறு- தெளிந்த நீராக மாறுகின்றது

2014 ம் ஆண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு, கங்கை நதியின் நீரை சுத்திகரிக்கும் துறை ஒன்றை உருவாக்கியது.

இந்த துறையின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் திட்டங்கள் தீட்டப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தாலும், பெரிய அளவிலான ஆக்கப்பூர்வமான பயன்பாடுகள் கிடைக்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியது வந்தன. இந்நிலையில் கங்கை நதி நீர் சுத்தமாகி கொண்டு வருவதாக கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் தலைமையிலான ஒரு வல்லுநர் குழு கடந்த 2 ஆண்டுகளாக கங்கை நதியின் மிகவும் மாசடைந்த 20 கரைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்த ஆய்வில் கங்கை நதியின் ஆஜ்சிஜன் அளவும் ,Ph என்று சொல்லப்படும் அளவீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.இதனால் கங்கை நதி தெளிந்த நீராக மாறிக்கொண்டே இருப்பதாகவும், கங்கை நதியின் நீர் வாழினங்களின் எண்ணிக்கை அளவு கூடிக்கொண்டே இருப்பதாகவும் தெரிகிறது.

 

(Visited 31 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *