செய்திகள்ஜோதிடம்

12-05-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

Related image                                                                                 

 

இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு

ஸ்ரீ விகாரி வருஷம் சித்திரை மாதம் 29ஆம் நாள், மே 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை

அஷ்டமி திதி மாலை 4.48 வரை பிறகு நவமி

ஆயில்யம் நக்ஷத்திரம் காலை 11.15 வரை பிறகு மகம்

ராகுகாலம் : மாலை 4.30 – 6.00

எமகண்டம் : 12.00 – 1.30

நல்ல நேரம்: காலை 6.30 – 7.30 மாலை 3.30 – 4.30

சூலம் : மேற்கு

ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கான இன்றைய பலன்கள்:

அஸ்வதி:

காலை 11.15 வரை:

வேண்டிய பணி/இடமாற்றம், ஊதிய/ பதவி உயர்வு, மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைத்தல் ஆகிய நல்ல நிகழ்வுகளுக்கு வாய்ப்புண்டு. புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

காலை 11.15க்குப் பிறகு:

தொழிலில் லாபம் இருக்கும். செல்வாக்கு கூடும் நாள். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். வக்கீல்கள் வழக்குகளில் வெற்றி வாகைச் சூடுவார்கள். பணவரவு இருக்கும் நாள்.

பிள்ளையார் வழிபாடு பெருமை சேர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பரணி:

காலை 11.15 வரை:

பணம் வரும் நாள். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் நண்பர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

காலை 11.15க்குப் பிறகு:

முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகும்.

அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

கார்த்திகை:

காலை 11.15 வரை:

பணம் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம். காரியத் தடைகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு இருக்கும். உடல் நிலை சோர்வடையும். கவனம் தேவை. அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். அலைச்சல் இருக்கும்.

காலை 11.15க்குப் பிறகு:

அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிட்டும். கடன் பாக்கி வசூலாகும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த நல்ல செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும்.

 

முருகனை வழிபட அல்லல்கள் தீரும், நன்மை பெருகும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

 

ரோகிணி:

காலை 11.15 வரை:

பழைய பாக்கிகள் வசூலாகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு கூடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்துடன் குதூகலமாக நேரம் கழிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். பண வரவு குறித்த நல்ல செய்தி வரும்.

காலை 11.15க்குப் பிறகு:

பயணங்களின் போது கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். பிறர் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். யாருக்கும் வாக்கு/ஜாமீன் கொடுக்க வேண்டாம். குறிப்பாக பேச்சில் கவனம் தேவை. உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.

அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

மிருகசீர்ஷம்:

காலை 11.15 வரை:

பயணங்களில் கவனம் அவசியம். வெளி இடங்களில் சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் ஜாக்கிரதையாக இருக்கவும். அரசியல் விமர்சனம், கருத்து விவாதம் ஆகியவை சிக்கல்களை அதிகரிக்கும்.

காலை 11.15க்குப் பிறகு:

எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நல்ல திட்டம் ஒன்று தீட்டுவீர்கள். அதில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கதவு தட்டும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சமூகத்தில் செல்வாக்கு கூடும் நாள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நலம் சேர்க்கும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

திருவாதிரை:

காலை 11.15 வரை:

வராக்கடன் வசூலாகும். இழுபறியில் இருந்த வேலைகள் நல்ல முடிவுக்கு வந்து பாராட்டுப் பெறுவீர்கள். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். சமூகத்தில் செல்வாக்கு கூடும்.

காலை 11.15க்குப் பிறகு:

முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். விரும்பிய பணிமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

புனர்பூசம்:

காலை 11.15 வரை:

பயணங்களில் கவனம் அவசியம். வெளி இடங்களில் சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் ஜாக்கிரதையாக இருக்கவும். அரசியல் விமர்சனம், கருத்து விவாதம் ஆகியவை சிக்கல்களை அதிகரிக்கும்.

காலை 11.15க்குப் பிறகு:

நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் பாராட்டுப் பெறுவர். வேண்டிய பணியிட மாற்றம்/ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற நற்செய்திகள் வர வாய்ப்புண்டு. நண்பர்களால் உதவி கிட்டும். பண வரவு இருக்கும்.

தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீர்ந்து நலம் பெருகும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

பூசம்:

காலை 11.15 வரை:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது.

காலை 11.15க்குப் பிறகு:

அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணம் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம். காரியத் தடைகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு இருக்கும். உடல் நிலை சோர்வடையும். கவனம் தேவை.

சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கிச் சீரான நாளாக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ஆயில்யம்:

காலை 11.15 வரை:

மறதியால் மனஸ்தாபங்கள் வர வாய்ப்பிருப்பதால் முக்கிய விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். பயணங்களில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் கவனம் அவசியம். அலைச்சல் இருக்கும்.

காலை 11.15க்குப் பிறகு:

அலுவலகத்தில் பதவி, ஊதிய உயர்வு குறித்த செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள். பழைய கடன்பாக்கி வசூலாகும். மொத்தத்தில் மனமகிழ்ச்சியான நாள்.

ஸ்ரீதுர்க்கையை வழிபட நன்மைகள் பெருகும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

மகம்:

காலை 11.15 வரை:

எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள்.நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

காலை 11.15க்குப் பிறகு:

வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்

கணபதி வழிபாடு நன்மைகள் சேர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.

பூரம்:

காலை 11.15 வரை:

பண வரவு குறித்த செய்தி வரும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு கூடும். குடும்பத்துடன் குதூகலமாக நேரம் கழிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். முக்கியப் புள்ளிகள், நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகளை முடித்து நிம்மதி பெறுவீர்கள். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

காலை 11.15க்குப் பிறகு:

நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். விற்பனைத் துறையினர் இன்றைய இலக்கை அடைவீர்கள். கூடுதல் பொறுப்புகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். செவ்வனே செய்து பாராட்டுப் பெறுவீர்கள்.

அம்பாள் வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

உத்திரம்:

காலை 11.15 வரை:

எடுத்த முயற்சிகள் கைகூடும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். செல்வாக்கு கூடும் நாள். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும்.

காலை 11.15க்குப் பிறகு:

எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள்.நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ஹஸ்தம்:

காலை 11.15 வரை:

எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும். சமுதாயத்தில் மதிப்பு உயரும் நாள். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும் நாளாக உல்ளது.

காலை 11.15க்குப் பிறகு:

பயணத்தில் கவனம் தேவை. ஜாமீன் கொடுப்பது, கடன் கொடுப்பது இதெல்லாம் வேண்டாம். உறவினர் நண்பர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் கவனம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடமும் சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி சிறப்புகள் சேர்க்கும்.“தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

சித்திரை:

காலை 11.15 வரை:

யாருக்கும் ஆலோசனை சொல்ல வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பயணங்களின் போது கவனம் அவசியம். மனக்குழப்பங்கள் ஏற்படும் நாளாக இருப்பதால் நன்கு யோசித்துச் செயல்படவும். பெரியோரிடம், குறிப்பாக தாய் தந்தையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

காலை 11.15க்குப் பிறகு:

பயணங்களில் கவனம் அவசியம். வெளி இடங்களில் சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் ஜாக்கிரதையாக இருக்கவும். அரசியல் விமர்சனம், கருத்து விவாதம் ஆகியவை சிக்கல்களை அதிகரிக்கும். அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். கடன் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

ஸ்வாதி:

காலை 11.15 வரை:

அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவி கிட்டும். தொழில்துறையினருக்கு நல்ல லாபம் கிட்டும். கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். வக்கீல்கள் வழக்குகளில் வெற்றி வாகை சூடுவார்கள்.

காலை 11.15க்குப் பிறகு:

உடல் நலனில் கவனம் தேவை. கூரிய பொருட்களைக் கையாள்வதில் மிகுந்த கவனம் தேவை. பெரியோரிடம், குறிப்பாக தகப்பனாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். இயந்திரப் பணியாளர்கள் வேலையில் கவனம் தேவை. அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

விசாகம்:

காலை 11.15 வரை:

அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணம் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம். காரியத் தடைகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு இருக்கும். உடல் நிலை சோர்வடையும். கவனம் தேவை.

காலை 11.15க்குப் பிறகு:

எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும். சமுதாயத்தில் மதிப்பு உயரும் நாள். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும் நாளாக உல்ளது.

முருகனை வழிபட அல்லல்கள் அகன்று நலம் பெறலாம். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

அனுஷம்:

காலை 11.15 வரை:

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களிட்ம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து குதூகலம் ஏற்படும். விற்பனைத் துறையில் உள்ளோர் இன்றைக்கான இலக்கை எளிதில் எட்டுவார்கள். தீடீர் பணவரவுக்கு இடமுண்டு.

காலை 11.15க்குப் பிறகு:

வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். நீண்ட நாள் தொல்லை கொடுத்துவந்த பிரச்சனைகள் தீரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமூக அந்தஸ்து கூடும் நாள். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். விளையாட்டுத்துறையினர் வெற்றி வாகைச் சூடும் நாளாகத் தெரிகிறது.

ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல்களை நீக்கி நல்ல நாளாக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் (கதை அல்லது ஸ்லோகங்கள்) படிப்பது மகிழ்ச்சி தரும்.

கேட்டை:

காலை 11.15 வரை:

எடுத்த முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறைந்து குதூகலம் அதிகரிக்கும். நோய்களின் தாக்கம் குறையும். எதிர்ப்புகள் விலகும். புதுத் தெம்பு ஏற்படும்.

காலை 11.15க்குப் பிறகு:

எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். வேலைகள் வெற்றிகரமாக முடியும்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

மூலம்:

காலை 11.15 வரை:

நண்பர்களால் உதவி கிட்டும். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பயணங்களில் கவனம் அவசியம். உடல் நலனில் கவனம் அவசியம்.

காலை 11.15க்குப் பிறகு:

வராக்கடன் வசூலாகும். சுபச்செலவுகள் ஏற்படும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். இழுபறியில் இருந்த வேலைகள் சுமுகமாக முடியும். சமூகத்தில் செல்வாக்கு கூடும்.

பிள்ளையார் வழிபாடு பிரச்சனைகளைத் தீர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பூராடம்:

காலை 11.15 வரை:

பணவரவு இருக்கும். நீண்டநாள் பாக்கி வசூலாகும். வியாபாரத்தில் லாபகரமான செய்தி வரும். புதிய ஒப்பந்தம் ஒன்றைப் பேசி முடிப்பீர்கள். நல்ல செய்திகள் வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

காலை 11.15க்குப் பிறகு:

குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் பாராட்டுப் பெறுவர். வேண்டிய பணியிட மாற்றம்/ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற நற்செய்திகள் வர வாய்ப்புண்டு. நண்பர்களால் உதவி கிட்டும்

அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

உத்திராடம்:

காலை 11.15 வரை:

பயணங்களில் கவனமாக இருங்கள். உடலில் சிறுசிறு உபாதைகள் வந்து நீங்கும். பணவரவில் சிக்கல்கள் உண்டாகும். விவாதங்களைத் தவிர்ப்பது நிம்மதிக்கு வழிவகுக்கும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை. பேச்சு வார்த்தைகளில் எச்சரிக்கை அவசியம். பொது இடங்களில் மணிப்பர்சில் கவனம் வையுங்கள்.

காலை 11.15க்குப் பிறகு:

நீண்ட நாள் பாக்கி வசூலாகும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கி நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

திருவோணம்:

காலை 11.15 வரை:

பயணங்களால் நன்மை ஏற்படும். நண்பர்கள் உதவி கிட்டும். வேலைக்காகக் காத்திருப்போருக்கு வேலை குறித்த நல்ல செய்தி வரும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். போட்டித் தேர்வுகளில், நேர்முகத் தேர்வுகளில் வெற்றி கிட்டும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது.

காலை 11.15க்குப் பிறகு:

பிறர் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். பயணங்களின் போது கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. அரசியல் கருத்துக்களை நேரிலோ, சமூக வலைத்தளங்களிலோ பேசுவதைத் தவிர்க்கவும்.

அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி சிறப்புகளைச் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

அவிட்டம்:

காலை 11.15 வரை:

உடல் நலனில் கவனம் தேவை. வயதில் மூத்தோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். மறதியால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால் முக்கியப்பணிகளில் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்படவும். உடல் நிலைகுறித்து கவனம் கொள்வது நல்லது.

காலை 11.15க்குப் பிறகு:

உடல் நலனில் கவனம் அவசியம். உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் வாக்கு வாதம் வேண்டாம். அவசியமற்ற விஷயங்களில் கருத்துச் சொல்ல வேண்டாம். வாக்கு கொடுப்பது தேவையில்லை.

ஸ்ரீ துர்க்கை வழிபாடு அல்லல்களை நீக்கி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

சதயம்:

காலை 11.15 வரை:

பணம் வரும் நாள். புதிய ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் நண்பர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். குடும்பத்துடன் சுற்றுலா அல்லது பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்குச் சென்று மகிழ்வீர்கள்.

காலை 11.15க்குப் பிறகு:

எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும். சமுதாயத்தில் மதிப்பு உயரும் நாள். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும் நாளாக உல்ளது.

ஸ்ரீ துர்க்கை வழிபாடு நன்மை தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

பூரட்டாதி:

காலை 11.15 வரை:

கடன் கொடுக்க வாங்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். பயணங்களில் கவனம் அவசியம். இயந்திரப்பணியாளர்கள் கவனத்துடன் பணி செய்யவேண்டும். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். பொது நிகழ்வுகள், அரசியல் குறித்து கருத்துக் கூற வேண்டாம்.

காலை 11.15க்குப் பிறகு:

போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிட்டும். நேர்முகத் தேர்வில் சாதகமான முடிவுகள் இருக்கும். தங்கம், வெள்ளி நகை, பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு திருமணம் கைகூடிவர வாய்ப்புள்ளது. குழந்தைப்பேறு எதிர்பார்த்திருப்போருக்கு நற்செய்தி வரும்.

தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீரும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

உத்திரட்டாதி:

காலை 11.15 வரை:

அலுவலகத்தில் வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். மகனுக்கோ மகளுக்கோ திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றமான செய்தி வரும்.

காலை 11.15க்குப் பிறகு:

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். புண்ணியத் தலங்களுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று நல்லவிதமான முடிவுக்கு வரும். அதனால் பாராட்டுப் பெறுவீர்கள். பணம் வரும் நாள். புதிய ஒப்பந்தம் கைகூடும்.

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ரேவதி:

காலை 11.15 வரை:

அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணம் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம். காரியத் தடைகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு இருக்கும். உடல் நிலை சோர்வடையும். கவனம் தேவை.

காலை 11.15க்குப் பிறகு:

ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் நண்பர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்காலத்திட்டம் ஒன்று தீட்டுவீர்கள்.

ஸ்ரீ துர்க்கை வழிபாடு நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

ஸ்ரீ மாத்ரே நம:

 

சுபம்

𝒮𝒜 𝑅𝒶𝓂𝒶𝓈𝓌𝒶𝓂𝓎

(Visited 28 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close