இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு
ஸ்ரீ விகாரி வருஷம் வைகாசி மாதம் 1ஆம் நாள், மே 15ஆம் தேதி புதன்கிழமை
ஏகாதசி திதி காலை 9.50 வரை பிறகு த்வாதசி
உத்திரம் நக்ஷத்திரம் காலை 6.30 வரை பிறகு ஹஸ்தம்
ராகுகாலம் : மதியம் 12.00 – 1.30
எமகண்டம் : காலை 7.30 – 9.00
நல்ல நேரம்: காலை 9.30 – 10.30 மாலை 4.30 – 5.30
சூலம் : வடக்கு
ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கான இன்றைய பலன்கள்:
அஸ்வதி:
முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். ஆடைகள், ஆபரணங்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகும்.
பிள்ளையார் வழிபாடு பெருமை சேர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
பரணி:
பண வரவு குறித்த செய்தி வரும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு கூடும். குடும்பத்துடன் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
கார்த்திகை:
அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். நீண்ட நாள் வாட்டிய பிரச்சனை முடிவுக்கு வந்து நிம்மதி பெறுவீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிட்டும். கடன் பாக்கி வசூலாகும். வக்கீல்கள் வழக்குகளில் வெற்றி வாகை சூடுவார்கள்.
முருகனை வழிபட அல்லல்கள் தீரும், நன்மை பெருகும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.
ரோகிணி:
புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும். சண்டை சச்சரவுக்கு வாய்ப்புள்ளதால் பேச்சுவார்த்தைகளில் அதிக கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். யாருக்கும் ஆலோசனை கூறவேண்டாம்.
அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
மிருகசீர்ஷம்:
நீண்ட காலப் பிரச்சனை முடிவுக்கு வரும். எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நல்ல திட்டம் ஒன்று தீட்டுவீர்கள். அதில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கதவு தட்டும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சமூகத்தில் செல்வாக்கு கூடும் நாள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நலம் சேர்க்கும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
திருவாதிரை:
அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
புனர்பூசம்:
அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். யாருக்கும் ஆலோசனை சொல்ல வேண்டாம். கனரக இயந்திரங்களில் பணியாற்றுவோர் கவனமுடன் இருக்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பயணங்களின் போது கவனம் அவசியம்.
தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீர்ந்து நலம் பெருகும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
பூசம்:
அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வேண்டிய பணி/இடமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி முன்பணம் வர வாய்ப்புண்டு. வக்கீல்கள் வெற்றிவாகைச் சூடுவார்கள்.
சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கிச் சீரான நாளாக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
ஆயில்யம்:
பயணங்களில் கவனம் தேவை. காரியத் தடை, பேச்சுவார்த்தைகளில் இழுபறி, அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். கவனம் அவசியம். விலை உயர்ந்த பொருட்கள் பாதிப்புக்குள்ளாகவோ, களவு போகவோ வாய்ப்புள்ளதால் உடைமைகளில் கவனம் தேவை. வாக்குவாதம் வேண்டாம்.
ஸ்ரீதுர்க்கையை வழிபட நன்மைகள் பெருகும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
மகம்:
எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். குடும்பத்துடன் புண்ணியத் தலங்களுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று நல்லவிதமான முடிவுக்கு வரும். அதனால் பாராட்டுப் பெறுவீர்கள். பணம் வரும் நாள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி லாபத்துக்கு அடிகோலும்.
கணபதி வழிபாடு நன்மைகள் சேர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.
பூரம்:
நண்பர்களால் உதவிகள் கிட்டும். எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து தேவையான பணிகளை முடித்துக் கொள்வீர்கள். வராக்கடன் வசூலாகும். கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும் நாள்.
அம்பாள் வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
உத்திரம்:
எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் விரும்பிய பணி/இட மாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று நல்லவிதமான முடிவுக்கு வரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு தேடி வரும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் வியாபாரம் பெருகும். பணவரவு இருக்கும்.
சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
ஹஸ்தம்:
அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவி கிட்டும். தொழில்துறையினருக்கு நல்ல லாபம் கிட்டும். கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். வக்கீல்கள் வழக்குகளில் வெற்றி வாகை சூடுவார்கள்.
அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி சிறப்புகள் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
சித்திரை:
நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். விற்பனைத் துறையினர் இன்றைய இலக்கை அடைவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். செவ்வனே செய்து பாராட்டுப் பெறும் நாளாக உள்ளது
ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
ஸ்வாதி:
முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகும்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
விசாகம்:
பிறர் பிரச்சினைகளில் தலையிடவேண்டாம். வாக்கு வாதம் யாரிடமும் வேண்டாம். உடல் நிலையில் சிறு சிறு உபாதைகள் ஏற்படும். அலைச்சல் இருக்கும், ஆனால் எடுத்த பணி நிறைவேறி நிம்மதி பெறுவீர்கள். பொதுவில் கவனம் தேவையான நாள்.
முருகனை வழிபட அல்லல்கள் அகன்று நலம் பெறலாம். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.
அனுஷம்:
பணம் வரும் நாள். பழைய கடன்களைத் தீர்ப்பீர்கள். நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். நினைத்த காரியம் நடந்தேறும். தொழிலில் நல்ல லாபம் கிட்டும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்திடுவீர்கள். வக்கீல்கள் வெற்றிவாகைச் சூடுவார்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.
ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல்களை நீக்கி நல்ல நாளாக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் (கதை அல்லது ஸ்லோகங்கள்) படிப்பது மகிழ்ச்சி தரும்.
கேட்டை:
அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக முடியும். நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் பாராட்டுப் பெறுவர். வேண்டிய பணியிட மாற்றம்/ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற நற்செய்திகள் வர வாய்ப்புண்டு. நண்பர்களால் உதவி கிட்டும்
ஸ்ரீதுர்க்கை வழிபாடு நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
மூலம்:
எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும். சமுதாயத்தில் மதிப்பு உயரும் நாள். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும் நாளாக உல்ளது.
பிள்ளையார் வழிபாடு பிரச்சனைகளைத் தீர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
பூராடம்:
முக்கியப்பணிகளில் கவனத்துடன் செயல்படவும். பயணங்களில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் கவனம் அவசியம். அலைச்சல் இருக்கும். வாக்கு வாதம் செய்யவேண்டாம். ஜாமீன், கடன் இவற்றில் இருந்து விலகி இருக்கவும்.
அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
உத்திராடம்:
முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் மதிப்புக் கூடும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிர்கால முன்னேற்றத்துக்கான திட்டம் ஒன்றை நண்பர் உறவினர் உதவியுடன் நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.
சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கி நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
திருவோணம்:
புதிய முயற்சிகள் வேண்டாம். இயந்திர சாதனங்களில் பணியாற்றுவோருக்கு கவனம் தேவை. பயணங்களில் கவனம் அவசியம். மொத்தத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி சிறப்புகளைச் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
அவிட்டம்:
நீண்ட நாள் தொல்லை கொடுத்துவந்த பிரச்சனைகள் தீரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமூக அந்தஸ்து கூடும் நாள். பழைய கடன்பாக்கி வசூலாகும். நண்பர்களால் உதவி கிட்டும். எதிர்கால முன்னேற்றத்துகான திட்டங்களைச் செயல்படுத்த உகந்த நாள்.
ஸ்ரீ துர்க்கை வழிபாடு அல்லல்களை நீக்கி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
சதயம்:
அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்
ஸ்ரீ துர்க்கை வழிபாடு நன்மை தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
பூரட்டாதி:
புதிய முயற்சிகளை ஒத்தி போடவும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளவும். சக ஊழியர்களிடம் சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பயணங்களின் போது குறிப்பாக பர்ஸ் விஷயத்தில் கவனம் தேவை.
தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீரும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
உத்திரட்டாதி:
எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் மதிப்புக் கூடும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிர்கால முன்னேற்றத்துக்கான திட்டம் ஒன்றை நண்பர் உறவினர் உதவியுடன் நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.
சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
ரேவதி:
அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். யாருக்கும் ஆலோசனை சொல்ல வேண்டாம். கனரக இயந்திரங்களில் பணியாற்றுவோர் கவனமுடன் இருக்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பயணங்களின் போது கவனம் அவசியம்.
ஸ்ரீ துர்க்கை வழிபாடு நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
ஸ்ரீ மாத்ரே நம:
சுபம்
𝒮𝒜 𝑅𝒶𝓂𝒶𝓈𝓌𝒶𝓂𝓎