மாயாவதியே அடுத்த பிரதமர் – அகிலேஷ் யாதவ்

ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளர் என்று மு.க.ஸ்டாலின் சென்னையில் கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் அறிவித்தார். அப்போதிருந்து ராகுலை ஏற்பதில்லை என்று தமிழகம் தாண்டிய பிற மாநிலக் கட்சிகள் அறிவித்தன. காங்கிரஸின் ப.சிதம்பரம் கூட ராகுல் பிரதமர் வேட்பாளரா என்பது இன்னும் முடிவாகவில்லை என்று கூறினார்.

ஸ்டாலினுக்குத் துணைப் பிரதமர் பதவி என்று அறிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஸ்டாலினின் இந்த அறிவிப்பால் அதிருப்தி அடைந்தார். தன்னிச்சையான அறிவிப்பு என்று உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறினார். ஷரத் பவார் அது பற்றி பிறகு பார்க்கலாம் என்றார். கம்யூனிஸ்டு கட்சி அது இப்போது பேச வேண்டிய விஷயம் அல்ல என்றது.

இந்நிலையில் நேற்று உபியில் கூட்டணி தொகுதிப்பங்கீடு பற்றிப் பேசிய பிறகு மாயவதி பிரதமர் ஆனால் தாம் வரவேற்பதாகக் கூறினார் அகிலேஷ். நிருபர்கள் மாயாவதியிடம் கேட்ட போது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி நேரம் வரும் போது தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.

மாயாவதியின் பட்டும் படாத பதில்களும், அகிலேஷின் ஒரேயடியான விட்டுக் கொடுக்கும் பேச்சும் அரசியல் நோக்கர்களை ஆர்வமூட்டியுள்ளன. இதன் பின்னணி சற்றே சிக்கலானது.

1993ல் முலாயம் சிங்கும் மாயாவதியும் கூட்டணி வைத்து உபியில் ஆட்சி அமைத்தனர். ஆனால் அவர்களுக்குள் ஒத்துப் போகவில்லை. 1995ல் மாயாவதி முலாயம் சிங் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றார். அப்போது முலாயம் கட்சித் தொண்டர்கள் மாயாவதியைத் தாக்க அவர் தங்கியிருந்த அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றனர்.

அவர்களுடன் வந்த காங்கிரஸ் தலைவர் விஜய் சிங் என்பவர் மாயவதியை அடிக்கப் பாய்ந்ததில் மாயவதியின் உடை கிழிந்தது. பாஜக எம்எல்ஏ பிரம் தத் த்விவேதி என்பவர் உடனடியாக உள்ளே புகுந்து தன் கட்சி ஆட்களுடன் புகுந்து தன் சட்டையைக் கழற்றி மாயாவதிக்குக் கொடுத்து அவரைக் காப்பாற்றி ஆளுநர் மாளிகைக்குக் கூட்டிச் சென்றார்.

அதன் பிறகு பாஜக ஆதரவுடன் மாயாவதி ஆட்சி அமைத்தார். அதன் பிறகு முலாயம் மாயாவதி இருவரும் பரம விரோதிகளாகவே இருந்தனர். ஆனால் இப்போது அகிலேஷ் ஏன் மாயாவதிக்கு இவ்வளவு பணிந்து போகிறார்? இருந்தும் மாயாவதி பிடிகொடுக்காமல் இருப்பதன் மர்மம் என்ன என்பதை உபி அரசியல் நோக்கர்கள் தீவிரமாக விவாதித்து வருகிறார்கள்.

ராகுல் பிரதமர், ஸ்டாலின் துணைப்பிரதமர் என்பது போன்ற செய்திகளை தேசிய ஊடகங்கள் பொருட்டாகவே கருதவில்லை என்பதே உண்மை.

(Visited 14 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *