07-06-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

Related image                                                                                   

 

இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு

ஸ்ரீ விகாரி வருஷம் வைகாசி மாதம் 24ஆம் நாள், ஜூன் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை

காலை 9.42 வரை சதுர்த்தி பிறகு பஞ்சமி

இரவு 9.50 வரை பூசம் நக்ஷத்திரம் பிறகு ஆயில்யம்

ராகுகாலம் : மதியம் 10.30 – 12.00

எமகண்டம் : காலை 3.00 – 4.30

நல்ல நேரம்: காலை 9.30 – 10.30 மாலை 4.30 – 5.30

சூலம் : மேற்கு

ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கான இன்றைய பலன்கள்:

அஸ்வதி:

கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். அலுவலகத்தில் பதவி, ஊதிய உயர்வு குறித்த செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள்.

பிள்ளையார் வழிபாடு பெருமை சேர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பரணி:

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் விரும்பிய பணி/இட மாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். புண்ணியத் தலங்களுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று நல்லவிதமான முடிவுக்கு வரும். அதனால் பாராட்டுப் பெறுவீர்கள். பணம் வரும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

கார்த்திகை:

முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகும்.

முருகனை வழிபட அல்லல்கள் தீரும், நன்மை பெருகும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

ரோகிணி:

சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். நண்பர்களால் உதவிகள் கிட்டும். எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து தேவையான பணிகளை முடித்துக் கொள்வீர்கள். வராக்கடன் வசூலாகும். திருமணத்துக்கோ, குழந்தைப் பேறுக்கோ காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்.

அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

மிருகசீர்ஷம்:

பண வரவு குறித்த செய்தி வரும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு கூடும். குடும்பத்துடன் குதூகலமாக நேரம் கழிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். முக்கியப் புள்ளிகள், நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகளை முடித்து நிம்மதி பெறுவீர்கள். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நலம் சேர்க்கும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

திருவாதிரை:

நண்பர்களால் உதவி கிட்டும். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். திருமணம் தடைப்பட்டவர்களுக்கு திருமணம் கைகூடும். கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். நல்லது சொல்லப் போய் சிக்கலில் முடிய வாய்ப்புள்ளதால் அறிவுரைகள் சொல்வதைத் தவிர்க்கவும். பொதுவில் பேச்சில் கவனம் அவசியம்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

புனர்பூசம்:

உறவினர், நண்பர்களிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்டகாலக் கடன்பாக்கி வசூலாகும். விற்பனைப் பிரதிநிதிகள் இலக்கை எளிதாக எட்டுவர். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உடல்நிலையில் புது உற்சாகம் தென்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி அதன் மூலம் நல்ல லாபம் கிட்டும்.

தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீர்ந்து நலம் பெருகும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பூசம்:

எடுத்த முயற்சிகள் கைகூடும். தங்கம், வெள்ளி நகை, பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறைந்து குதூகலம் அதிகரிக்கும். நோய்களின் தாக்கம் குறையும். எதிர்ப்புகள் விலகும். புதுத் தெம்பு ஏற்படும். நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்.

சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கிச் சீரான நாளாக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ஆயில்யம்:

நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். விற்பனைத் துறையினர் இலக்கை அடைவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். செவ்வனே செய்து பாராட்டுப் பெறும் நாளாக உள்ளது

ஸ்ரீதுர்க்கையை வழிபட நன்மைகள் பெருகும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

மகம்:

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று நல்லவிதமான முடிவுக்கு வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களிட்ம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து குதூகலம் ஏற்படும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

கணபதி வழிபாடு நன்மைகள் சேர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.

பூரம்:

கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். அலுவலகத்தில் பதவி, ஊதிய உயர்வு குறித்த செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள்.

அம்பாள் வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

உத்திரம்:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ஹஸ்தம்:

பணம் வரும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் நண்பர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி சிறப்புகள் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

சித்திரை:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். விளையாட்டுத் துறையினர் சாதனை படைப்பார்கள்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

ஸ்வாதி:

எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள்.நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்கால முன்னேற்றத்துக்கான திட்டம் ஒன்றை நண்பர் உறவினர் உதவியுடன் நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

விசாகம்:

பணவரவு இருக்கும். நீண்ட நாள் தொல்லை கொடுத்துவந்த பிரச்சனைகள் தீரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமூக அந்தஸ்து கூடும் நாள். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். விளையாட்டுத்துறையினர் வெற்றி வாகைச் சூடும் நாளாகத் தெரிகிறது. கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். எடுத்த முயற்சிகள் கைகூடும்.

முருகனை வழிபட அல்லல்கள் அகன்று நலம் பெறலாம். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

அனுஷம்:

சற்றே கவலையான விஷயம் குறித்து புதிய நல்ல முடிவு எட்டப்படும் நாள். நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். வராக்கடன் வசூலாகும். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.

ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல்களை நீக்கி நல்ல நாளாக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் (கதை அல்லது ஸ்லோகங்கள்) படிப்பது மகிழ்ச்சி தரும்.

கேட்டை:

நண்பர்களால் உதவி கிட்டும். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பயணங்களில் நன்மை ஏற்படும். பணவரவு இருக்கும். நீண்டநாள் பாக்கி வசூலாகும். வியாபாரத்தில் லாபகரமான செய்தி வரும். புதிய ஒப்பந்தம் ஒன்றைப் பேசி முடிப்பீர்கள். நல்ல செய்திகள் வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

மூலம்:

பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களிட்ம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து குதூகலம் ஏற்படும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். விற்பனைத் துறையில் உள்ளோர் இன்றைக்கான இலக்கை எளிதில் எட்டுவார்கள். தீடீர் பணவரவுக்கு இடமுண்டு.

பிள்ளையார் வழிபாடு பிரச்சனைகளைத் தீர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பூராடம்:

அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். நீண்ட நாள் வாட்டிய பிரச்சனை முடிவுக்கு வந்து நிம்மதி பெறுவீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிட்டும். கடன் பாக்கி வசூலாகும். கலைத்துறையினர் வெற்றி வாகை சூடுவார்கள். திருமணம், குழந்தைப் பேறு குறித்த நல்ல செய்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சமூகத்தில் செல்வாக்குக் கூடும்.

அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

உத்திராடம்:

பணம் எதிர்பாராத வகையில் வரும். பழைய கடன்களைத் தீர்ப்பீர்கள். நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். நினைத்த காரியம் நடந்தேறும். தொழிலில் நல்ல லாபம் கிட்டும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்திடுவீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும்.

சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கி நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

திருவோணம்:

புதிய ஒப்பந்தங்கள் லாபகரமாக அமையும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி வாய்ப்பு தேடி வரும். கலைஞர்கள் பாராட்டப்படுவார்கள். விருது கிடைக்க வாய்ப்புண்டு. உயர்கல்விக்கு விண்ணப்பித்திருப்போருக்கு கல்வி உதவித் தொகை கிடைக்க வாய்ப்புண்டு. அரசியல்வாதிகளுக்கு மக்கள் செல்வாக்கு கூடும்.

அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி சிறப்புகளைச் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

அவிட்டம்:

அலுவலகத்தில் நீண்ட நாள்பட்ட பிரச்சனையைத் தீர்த்து வைத்து அதனால் உங்கள் மீதிருந்த மதிப்பு உயரும். எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து கூடும். தொழில் விஷயங்களில் முயற்சிகளுக்கு ஊக்கமும் உதவியும் பெறுவீர்கள். நல்ல முடிவுகள் எட்டப்படும் நாளாக இருக்கும். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி வாய்ப்பு தேடி வரும்.

ஸ்ரீ துர்க்கை வழிபாடு அல்லல்களை நீக்கி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

சதயம்:

போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி வாய்ப்பு தேடி வரும். உயர்கல்விக்கு விண்ணப்பித்திருப்போருக்கு எதிர்பார்த்த வகையில் பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் லாபகரமாக அமையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைஞர்கள் பாராட்டப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் செல்வாக்கு கூடும்.

ஸ்ரீ துர்க்கை வழிபாடு நன்மை தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

பூரட்டாதி:

புதிய ஆடை, தங்க நகை/நாணயம் வாங்கிச் சேர்ப்பீர்கள். நீண்டநாளைய ஆசை ஒன்று பூர்த்தியாகும். சமூக அந்தஸ்து கூடும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பு மூலம் குடும்ப விஷயங்கள், சுப நிகழ்வுகள் குறித்த நல்ல முடிவுகள் வந்து அதனால் பெருமை அடைவீர்கள். புதிய வீடு, ஃப்ளாட், இடம் ஏதாவது ஒன்று முன்பதிவு செய்ய அல்லது வாங்க வாய்ப்புள்ளது.

தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீரும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

உத்திரட்டாதி:

அலுவலகத்தில் நீண்ட நாள்பட்ட சிக்கலைத் தீர்த்து வைத்து மேலதிகாரிகள் பாராட்டைப் பெறுவீர்கள். கொடுத்த பணியைச் செவ்வனே முடித்து அதிகாரிகள், சக ஊழியர்களின் மதிப்பைப் பெறுவீர்கள். வெளி இடங்களில் நற்பெயர் பெறுவீர்கள். மதிப்பு கூடும் நாள். விளையாட்டுத் துறையினர் சாதனை படைப்பார்கள். தொழில்முனைவோர் முயற்சிகளுக்கு ஊக்கமும் உதவியும் பெறுவார்கள்.

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ரேவதி:

உறவினர், நண்பர்களிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்டகாலக் கடன்பாக்கி வசூலாகும். விற்பனைப் பிரதிநிதிகள் இன்றைய இலக்கை எளிதாக எட்டுவர். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் தென்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி அதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்

ஸ்ரீ துர்க்கை வழிபாடு நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

ஸ்ரீ மாத்ரே நம:

சுபம்

𝒮𝒜 𝑅𝒶𝓂𝒶𝓈𝓌𝒶𝓂𝓎

(Visited 29 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *