இந்தியாசிறப்புக் கட்டுரைகள்

நாட்டை சீர்திருத்த மோடி என்ன திட்டம் வைத்திருக்கிறார்?

ஊழல், திறமையற்ற நிர்வாகம், சாதிவாரி கட்சிகள் என மூழ்கிபோயிருக்கும் நம் நாட்டை சீர்திருத்த மோடி என்ன திட்டம் வைத்திருக்கிறார்? என்ன செய்து இருக்கிறார் இதுவரை?

சாதிவாரி பிரச்சினைகள் இடியாப்ப சிக்கலாக இருப்பதை பார்த்தோம். சரி அதுக்கு தீர்வு தான் என்ன என பார்க்கலாம்.

சாதிப்பிரச்சினை, நாட்டின் நிர்வாகம் என பார்ப்பதற்கு முன்பு சாதி என்றால் என்ன? ஏன் சாதி இதுவரை இருக்கிறது, நாட்டை கொள்ளையடிக்க வந்த கொள்ளையன்கள் செய்தது என்ன? சுதந்திரத்திற்கு பிறகு கான்கிரஸும் மற்ற கட்சிகளும் செய்தது என்ன? இதை மோடி எப்படி மாற்ற முயல்கிறார் என சுருக்கமாக பார்க்கலாம்.

சாதி, நாட்டு நிர்வாகம், இன்றைய கட்சிகளின் செயல் மூன்றையும் சேர்த்து பார்க்கவேண்டும் ஏனென்றால் மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. ஒன்றை ஒன்று பாதிப்பவை.

முதலிலே சாதி என்றால் என?

இதை படிக்கும் எல்லோருக்கும் சாதி என்ற ஒரு அடையாளம் இருக்கும். அவர்கள் சாதியின் பெயர் அவர்களுக்கு இருக்கும்.

ஆனால் சாதி என்றால் என்ன? இதுக்கு எவ்வளவு பேரால் உடனே பதில் சொல்லமுடியும். சாதி என்பது பார்பான் கொண்டுவந்தது, ஆரியர்கள் கொண்டு வந்தது இத்யாதி தான் பதிலாக இருக்கும்.

ஆனால் சாதி என்பது நிர்வாக அமைப்பு. சாதிகள் தனி நாடாக தேசமாகவே இயங்குகின்றன.

அரசு போலவே சாதிகள் சட்டம் கொண்டிருக்கிறது ஆனால் எழுதப்படாத சட்டம்.
நாடு போலவே சாதிக்குள் யார் இருக்கலாம் இருக்கமுடியாது என தீர்மானிக்கின்றன.
அரசு போலவே சாதிக்காரனுக்கு பிரச்சினை என்றால் சாதி அமைப்புகள் வருகின்றன.
அரசு போலவே கடன் பிரச்சினை, நிலத்தகராறுகளை சாதி அமைப்புகள் தீர்த்து வைக்கின்றன

என சொல்லிக்கொண்டே போகலாம்.

கொள்ளையன் இங்கே வந்து அரசு என்ற அமைப்பை அழித்த போது அவனை எதிர்க்கவும் அவனுடைய துணை இன்றி வாழவும் தானாக வளர்ந்த அமைப்பே இந்த சாதி முறை.

இங்கு மட்டுமல்ல உலகம் பூராவும் எல்லா நாடுகளிலும் இந்த மாதிரியான ஒரு அமைப்பு முறை இருந்தது. கேஸ்ட் எனும் ஆங்கில வார்த்தையானது போர்ச்சுகீசிய மொழியிலே இருந்து வந்தது. ஐரோப்பாவிலும் நான்கு படி முறை, சீனாவிலும் நான்கு படி நிலை முறை எல்லாம் இருந்தது. பரம்பரையாக காவலாளிகள், காவல்துறையினர், ராணுவத்துக்கு போபவர்கள், மண்பாண்டம் செய்பவர்கள், இரும்பு அடிப்பவர்கள் என இருந்தார்கள்.

விரியும் என்பதால் ஆங்கிலேயன் செய்த விஷயங்களை மட்டும் சுருக்கமாக விளக்குகீறேன். இப்படி அரசு என்பதே இல்லாமல் நாடு இயங்குவதை புரிந்து கொள்ளமுடியாத வெள்ளையன் சாதிகளுக்கு இடையே ச்ண்டை மூட்டிவிட்டு ஆட்சி புரிந்தான்.

பல சாதிகளை குற்றபரம்பரை என அறிவித்து ஒடுக்கினான்.
பல சாதிகளை வீரபரம்பரை என அறிவித்து அவர்களை மட்டும் ராணுவத்திலே சேர்த்தான்
மிச்ச சாதிகளை கோழைகள் என சொல்லி கணக்கு எழுதுதல் போன்றதற்கு மட்டும் விட்டான்.

வடக்கே ஜமீந்தார் எனவும் தெற்கே மணியம்/கிராமணி எனவும் ஊருக்கு ஒரு ஆளை நிர்வாகம் செய்ய போட்டான். பரம்பரையாக அந்த பதவியை கொடுத்தான்.

இடியாப்ப சிக்கலாக அரசு அமைப்பு முறை, நிர்வாகமும் நீதி வழங்குதலும் ஒரே ஆளிடம் அப்பதானே சிறையிலே போடுவது எளிது என வைத்து சுரண்டிக்கொண்டிருந்தான். நிர்வாக ஆட்களிடம் தான்தோன்றித்தனமாக முடிவெடுத்தல் எனும் அதிகாரத்தை கொடுத்து இஷ்டத்துக்கு லஞ்சம் வாங்கிக்கோ அரசுக்கு கட்டியது போக மிச்சம் உனக்கு என வைத்திருந்தான்.

இப்படி போய் கொண்டிருந்த காலகட்டத்திலே தான் இரண்டாம் உலகப்போர் வருகிறது, இங்கிலாந்து திவால் ஆகிறது இந்தியாவை விட்டு ஆங்கிலேயன் வெளியேறுகிறான்.

முதல் பிரதமராக நேரு வருகிறார்.

நேருவுக்கு மக்கள் அரசியல் தெரியாது, மக்களிடையே ஆதரவு பெற்ற தலைவரும் அல்ல. சரி என்ன செய்வது என ரூம் போட்டு யோசித்து தொடர்ந்து ஆட்சி புரிய வழியை கண்டுபிடிக்கிறார்கள்.

மத்தியிலே நேரு குடும்பம் தான் அரசாளும். அவர்கள் வைத்து தான் சட்டம்.
மாநிலங்களிலே நேரு குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்கும் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.
கீழ்மட்டத்திலே மாநில ஆட்களுக்கு விசுவாசமாக இருக்கும் ஆட்களை வைத்துக்கொள்வார்கள்.

சரி ஓட்டு? அங்கு தான் நிர்வாகம் வருகிறது. வெள்ளைக்காரன் வைச்சுட்டு போனதை அப்படியே வைச்சு மக்களை அடிமைகளாகவே வைத்திருந்தார்கள்.

ஆனா ஓட்டு போட? இங்கு தான் அந்த தான்தோன்றித்தனமான அதிகாரம் என்பது வருகிறது.

மக்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டுமென்றால் அதிகாரிகளிடம் போய்

“ஐயா எசமான் ஒரு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுங்கையா எங்க புள்ளைக படிக்கட்டும்” என கெஞ்சனும் அவிங்க அடித்து பத்திவிடுவாங்க. உடனே இந்த வட்டம், மாவட்டம் எல்லாம் வந்து பேசி பஞ்சாயத்து பண்ணிவிடுவாங்க.

தேர்தல் வந்தா வந்து அதான் பள்ளிக்கூடம் கட்டித்தர்றோம் என சொன்னோமே என ஓட்டு வாங்குவாங்க.

இதை படிக்கும் நண்பர்கள் வெளிநாடுகளிலே வாழ்ந்திருக்கலாம், இன்னமும் இருக்கலாம், எந்த நாட்டிலாவது ஒரு பஸ் வசதிக்கு சாலை மறியல் செய்வதும் அதிகாரிகளிடம் போய் மனு கொடுத்து “ஐயா ஒரு பஸ் விடுங்கயா நடந்து வர ரொம்ப கஷ்டமா இருக்கு” என கெஞ்சுவது உண்டா? கிடையாது.

ஏன் தேவையில்லை. அதெல்லாம் உள்ளூர் நிர்வாகத்தின் கீழ் வந்துவிடும். இந்தியாவிலே அப்படி ஒரு சமாச்சாரமே இது வரை கிடையாது. அங்கே லஞ்சம் ஊழல் உண்டு ஆனால் கீழ்மட்ட விஷயங்களிலே மக்களுக்கு நேரடியாக தேவைப்படும் இடங்களிலே லஞ்சம் ஊழல் இருக்காது.

நேரு பிரதமரானவுடன் இந்தியாவை ஒற்றை ஆட்சி நாடாக மாற்ற முயன்றார். அதனால் தான் உள்ளூர் கிராமநிர்வாக அமைப்புகள் ஏதும் இல்லை. அதற்கு அதிகாரமும் இல்லை. மாநில முதல்வர்களின் அழுத்தத்தால் மாநிலங்களுக்கு மட்டும் கொஞ்சம் அதிகாரத்தை பிரித்து கொடுத்தார்.

வெள்ளையன் நிர்வாகமும் நீதிபதியாக தீர்ப்பு சொல்லுதலும் ஒரே ஆளிடம் வைத்துவிட்டு போனான் அல்லவா? அது இன்றைக்கும் அப்படியே தான் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் நிர்வாக நடுவர் எனப்படுவார் அவருக்கு நீதிபதி அதிகாரமும் உண்டு.

துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடுவது, காவல்துறையை மேற்பார்வையிடுவது என எல்லா அதிகாரமும் அவருக்குத்தான். அவரை தேர்ந்தெடுப்பது,நீக்குவது எல்லாம் மத்திய அரசு தான். மாநில அரசு இடமாற்றம் வேண்டுமானால் செய்யலாம்.

இதை விட பெரிய்ய பிரச்சினை, நம் நாட்டிலே இருக்கும் சட்டமுறை. நம் நாட்டிலே இருப்பது காம்மன் லா என சொல்லப்படும் முறை. உலகத்திலே சில நாடுகள் மட்டுமே இதை வைத்திருக்கிறது. மற்றைய அனைத்து நாடுகளிலுமே இருப்பது சிவில் லா எனப்படும் முறை.

சிவில் லா என்றால் எல்லாமுமே சட்டவிதிகளாக தொகுக்கப்பட்டு இருக்கும். யார் வேண்டுமானாலும் அதை பார்த்து உடனடியாக புரிந்து கொள்ளமுடியும். இதிலே நீதிமன்றங்கள் சட்டத்தை இயற்றாது சட்டம் சரியா தப்பா என மட்டும் தீர்ப்பளிக்கும்.

முக்கியமாக நீதிபதி வழக்கை விசாரித்து எது சரி எது தவறு என ஆராய்ந்து தீர்ப்பு சொல்லுவார்.

நம்மூரிலே இருக்கும் காம்மன் லா முறையிலே சட்டவிதிகளை விட முன்பு நீதிமன்றங்கள் சொன்ன தீர்ப்புக்களூத்தான் அதிக முக்கியத்துவம். நீதிபதிகள் சொல்லும் தீர்ப்பே சட்டமாக மதிக்கப்படும்.

இங்கே நீதிபதி வழக்கை விசாரிக்கமாட்டார். வழக்கறிஞர்கள் சொல்லும் வாதங்களை கொண்டு தீர்ப்பளிப்பார். நல்ல வழக்கறிஞரை பிடித்தால் நமக்கு வேண்டிய தீர்ப்பை வாங்கிக்கொள்ளலாம்.

இதை அப்படியெ வைத்துக்கொண்டார் நேருவும் பின்பு வந்த கான்கிரஸ் கட்சியும்.

நீதிபதிக்கு விசாரிக்க அதிகாரம் கொடுத்தால் தானே பிரச்சினை. இல்லையேல் வாதாட வக்கீல் வராவிட்டால் எப்படி வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாமே?

ஆக பிரச்சினை இங்கே

1. உள்ளூர் நிர்வாக அமைப்பு இல்லை
2. மக்களுக்கு உதவி செய்ய வேலை செய்ய அரசு அதிகாரிகள் வேலை செய்ய மாட்டார்கள். அவர்களை கேள்வியும்கேட்கமுடியாது.
3. நீதிவழங்கல் முறையே அடிப்படையிலேயே தவறு.

இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

முன்பு வந்த கான்கிரஸ் அல்லாத கட்சி தலைவர்கள் அனைவரும் இந்த அமைப்புகுள்ளேயே இருந்து நிர்வகிக்க செய்ய முயன்றார்கள்.

மோடி நாட்டை நிர்வகிக்க வந்தவரல்ல. நாட்டை கட்டியமைக்க புதிதாக உருவாக்க வந்தவர்.

2014 இல் பதவி ஏற்றவுடனே கேட்கிறார், “டெல்லியிலே அரசு எங்கிருக்கிறது?”

2015 ஜனவரியிலே அரசின் பொருளாதார கொள்கைகளை விளக்கும் உரையிலே அரசு என்றால் என்ன என விளக்கம் தருகிறார்.
//முதலாவதாக பொது உபயோகம் – இவை பாதுகாப்பு, காவல்துறை, நீதிமன்றம் போன்றவை.
இரண்டாவதான சுற்றுச்சூழல் மாசு போன்ற மற்றவர்களை பாதிக்கும் செயல்பாடுகள். இவைகளை தடுக்க ஓர் அமைப்பு வேண்டும்.
மூன்றாவது சந்தையின் ஆற்றல். அங்கே ஒரு சிலரின் மேலாதிக்கம் வளராமல் இருக்க கட்டுப்பாடு வேண்டும்.
நான்காவது தகவல் இடைவெளிகள், எடுத்துக்காட்டாக நீங்கள் வாங்கும் மருந்து போலி அல்ல என்பதை உறுதி செய்ய ஒருவர் வேண்டும்.
கடைசியாக சமூகத்தின் கடை நிலையில் இருப்பவர்கள் முன்னேற, மக்கள் நலம் நாடும் அரசு மானியங்கள் வேண்டும். குறிப்பாக, இது கல்வியிலும் மருத்துவத்திலும் மிக முக்கியம். //

http://www.narendramodi.in/economic-times-global-business-summit/
https://bit.ly/2EgwDoj

அரசு என்றல் என்ன அது எதற்கு வேண்டும் என இதை விட சுருக்கமான தெளிவான விளக்கத்தை யாரும் தரமுடியாது.

சரி குஜ்ராத்திலே என்ன செய்தார், இங்கே என்ன செய்தார்?

குஜ்ராத்திலே பொறுப்பேற்றவுடனே மக்கள் அரசிடம் இருந்து பெறும் உதவிகளை நவீனமயமாக்கினார். அதாவது போய் அதிகாரியிடம் கெஞ்சவேண்டியதில்லை. ஒப்பீட்டுக்கு ஜெ அரசிலே அம்மா திட்டம் என சொல்லி ஒன்று கொண்டு வந்தார்கள் ஞாபகம் இருக்கிறதா? நிலப்பட்டா குடும்ப அட்டை போன்றவற்றை அதிலேயே எளிதாக பெற்றுக்கொள்ளலாம் என அதைப்போலத்தான் ஆனால் அதை எப்போதும் அரசு அலுவலகத்திலேயே பெற்றுகொள்ளலாம்.

இதனால் என்ன? உள்ளூர் அல்லக்கைகள், ரவுடி கும்பலுக்கு மக்களும் பயப்படவேண்டியதில்லை, அரசியல் கட்சிகளும் அதை வைத்து ஓட்டு வாங்க முடியாது.

இதைத்தான் டிஜிட்டல் இந்தியா என கொண்டு வந்தார். அதை பற்றியும் விரிவாக எழுதியிருந்தேன்

ஆதாருடன் வங்கி கணக்கை இணைப்பு, வங்கி கணக்குகள் எல்லாம் இந்த தொலைநோக்கு பார்வையோடுதான் செய்யப்பட்டவை.

ஜிஎஸ்டி போன்றவை தான் நமக்கு தெரிகிறது. ஆனால் சிறு சிறு திருத்தங்களான தொழிற்சாலைகளுக்கு ஆய்வுக்கு வருபவர்களை கணினியே தேர்ந்தெடுக்கும் போன்றவை தெரிவதில்லை.

இங்கே தமிழ்நாட்டிலே டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிர்ப்பு இருப்பதும் இதனால் தான்.

குறுநில மன்னர்களாக கோலோச்சுபவர்களின் அடிப்படை அதிகாரம் பிடுங்கப்படுகிறது என்றால் ஏற்றுக்கொள்ளமுடியுமா?

இந்த இடத்திலே ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் குஜ்ராத்திலே முழுமையாகவும் செயல்படுத்திவிட முடியவில்லை, இப்போதும் இது தொடர்கிறது முழுமையாக செயல்படுத்திவிட முடியவில்லை.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அதை நோக்கித்தான் போகிறார். வக்கீல்களுக்கும் மாவட்ட நீதிபதிகளுக்கும் ஆதார் என சொன்னது போன்றவை இன்னமும் கிடப்பிலெ தான் இருக்கிறது.

மோடி சொல்லும் சப்கா சாத், சப்கா விகாஸ் என்பதன் அர்த்தம் இது தான்.

வடக்கே எப்படி என தெரியவில்லை. நம்மூர் இந்துத்துவர்களுக்கோ இதெல்லாம் புரிவது இல்லை. மோடி அதை செய்தாரா இதை செய்தாரா என நொட்டை மட்டும் சொல்லுவார்கள்.

மீண்டும் பதவியேற்றவுடனே அரசு அதிகாரிகளிடம் மக்களுக்கு வாழும் முறையை எளிதாக்குங்கள் என சொன்னார்.

அது என்ன என்று கூட பத்திரிக்கைகளுக்கு புரிந்திருக்காது. இங்கே இருக்கும் இந்துத்துவர்களூக்கும் புரிந்திருக்காது.

அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் இடஒதுக்கீடு, கோவிலிலே அரசு, கல்வியிலே உரிமை இத்யாதிகள் தான்.

அதெல்லாம் தவறில்லை ஆனால் அதுக்கு என்ன அடிப்படை? தேர்தலிலே வெற்றி பெறுவது.

தேர்தலிலே தொடர்ந்து வெற்றீ பெற்று அரசு அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் விஷயங்களை முதலிலே செய்வதா அல்லது

இந்த மேக்கப் போடும் சமாச்சாரங்களை செய்வதா? அடுத்து தோற்றால் அவர்கள் வந்து மாற்றிவிடபோகிறார்கள்.

அரசோடு மக்கள் நேரிடையாக உதவிகளை பெற்றுக்கொள்ளும்போது அரசு நேரிடையாக கடமைகளை செய்யும்போது

நடுவிலே இருக்கும் புரோக்கர்களுக்கு வேலை இருக்காது. அவர்களை தாண்டி ஒரு தலைவர் மக்களிடையே நேரடியாக பேசி வெற்றி பெற முடியும்.

இதனால் தான் மோடி வெற்றி பெற்றார். இதனால் தான் கான்கிரஸால் ஏதும் செய்ய முடியவில்லை.

தமிழ்நாட்டிலே மட்டுமல்ல வடக்கே சில மாநிலங்களிலும் மோடி சொன்ன இந்த விஷயத்தை பல பிஜேபி தலைவர்களே செயல்படுத்தவில்லை. அதிலும் குறிப்பாக ராஜஸ்தான், மபி, சத்தீஸ்கர்.

மோடி ஆதரவு அளித்து அமர்த்திய முதல்வர்கள் இதை மும்மூச்சாக செயல்படுத்தி வருகிறார்கள். மகாராஷ்டிராவிலே கான்கிரஸ் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. உபி கேட்கவே வேண்டாம். ஹரியான, ஹிமாச்சல், ஜார்கண்ட் என பல மாநிலங்கள் இந்த குஜ்ராத் முறையை அப்படியே செய்கின்றன.

இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. மேலைநாடுகளிலே இருப்பது போல நில பதிவுமுறை கொண்டு வந்து ஆதார் உடன் எல்லா அசையும் அசையா சொத்துக்களை இணைப்போம் என வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

மோடி இன்னும் ஐந்து வருடங்களிலே முழுதாக மாற்றுவர் என எதிர்பார்ப்போம்.

எண்ணமும் எழுத்தும்

ராஜாசங்கர்

(Visited 87 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close