இன்று ட்விட்டரில் #தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள் என்பதே ட்ரெண்டிங்காக உள்ளது. சினிமா நடிகர் சங்கத் தேர்தலைக் கூட ஏதோ பிரதமர் தேர்தல் போல நடிகர்களைப் பேட்டி எடுப்பதும், அவர் காரை விட்டு இறங்கி விட்டார், இவர் பாண்டவர் அணி என நேற்று முழுவதும் தமிழக ஊடகங்களில் பெரும்பாலானவை அதைத் தாண்டி வேறு எந்தப் பிரச்சினையும் இல்லாது போலக் காண்பித்தன.
இதனால் எரிச்சல் அடைந்த பொது மக்கள் , இன்று தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள் என்ற தலைப்பில் இதை ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் வைத்துள்ளனர்.
சமீப காலமாக தமிழ் ஊடகங்கள் தேசத்திற்கு எதிரான குரல் எழுப்புபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, தனித் தமிழ்நாடு கோருபவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது என பாகுபாடாக செயல்படுதல், செய்திகளைக் கொடுப்பதற்குப் பதிலாக செய்தியின் தன்மையை மாற்றி விஷயத்தை விஷமாக பரப்புதல் என நேகட்டிவாகவே செயல்படுகின்றன. இதனால்தான் இன்று சமூக வலைத் தளங்களில் இது ட்ரெண்டிங் ஆகி உள்ளது.