சபரி மலை விஷயத்தில் ராகுல் அடித்த பல்டி

துபாய்: ராகுல்காந்தி சபரிமலை தீர்ப்பு வெளிவந்த போது அதை வரவேற்றார். மேலும் இது பெண்களுக்கான உரிமை என்றும் குரல் கொடுத்தார். ஆனால் கேரளாவில் காங்கிரஸ் ஒரு நிலைப்பாட்டையும் ராகுல் ஒரு நிலைப்பாட்டையும் எடுத்தனர்.

இந்நிலையில் சபரிமலை குறித்த கேள்வியொன்று துபாய் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ராகுலிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஆரம்பத்திலிருந்த தனது நிலைப்பாட்டில் மாற்றமுள்ளது என்றும், சபரிமலை பாரம்பரியத்தைக் காக்க வேண்டியதும் சரியென்றும் பதில் கூறினார். இது கேரள மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட பின்னர் தம்மிடம் அந்த மாற்றம் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி ஏஎன்ஐ க்கு அளித்த பேட்டியில் சபரிமலை விஷயத்தில் பாரம்பரியம் மற்றும் கோயில் நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்று வெளிப்படையாக பதில் அளித்தார். ஒருவேளை ராகுலுக்கும் மோடியின் வெளிப்படையான பதிலுக்குப் பின்பாக இந்த கருத்தைத் தெரிவித்திருக்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்துரைக்கின்றனர்.

(Visited 14 times, 1 visits today)
4+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *