மீண்டும் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு
சில வருடங்களுக்கு முன்பு பேஸ்புக் பயனாளர் தகவல்கள் தவறான முறையில் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தால் உபயோகப்படுத்தப்பட்டதாக சர்ச்சை உண்டானது. இப்பொழுது கிட்டத்தட்ட அதே போன்ற மற்றொரு சர்ச்சையில் மீண்டும் பேஸ்புக் சிக்கியுள்ளது.
2018 மே மாதம் பேஸ்புக் குழுமங்களுக்கான API உபயோகிக்க தடை கொண்டுவந்தது.அதற்கு முன்பு இந்த வசதியை உபயோகப்படுத்தி இணையதளங்களில் இருந்து தானாக செய்திகளை தங்கள் குழுமத்தில் பதிவிடும் வசதி இருந்தது. தகவல் திருட்டை தடுப்பதாகக் கூறி இதை பேஸ்புக் தடை செய்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட நூறு டெவலப்பர்கள் ( எண்ணிக்கை அவர்களுக்கே சரியாகத் தெரியவில்லை) பேஸ்புக் க்ரூப் உபயோகிப்பாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க முடிந்துள்ளது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் குழும பயனாளர்களின் பெயர் , ப்ரொபைல் படம் போன்ற விவரங்களை அவர்கள் சேகரிக்க முடிந்துள்ளது.
கடந்த அறுபது நாட்களில் 11 டெவலப்பர்கள் இந்தத் தகவல்களை உபயோகப்படுத்தியதாக வந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட டெவலப்பர்களை பேஸ்புக் நிறுவனம் தொடர்புக் கொண்டு வருவதாகவும் , அந்த தகவல்களை அழிக்க சொல்லி வருவதாகவும் செய்தி வந்துள்ளது. இது குறித்து பேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ தகவலை கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம்.
https://developers.facebook.com/blog/post/2019/11/05/changes-groups-api-access/