வாட்ஸ் அப் க்ரூப்பில் உங்கள் அனுமதி இன்றி இணைக்கப்படுவதைத் தவிர்க்க
வாட்ஸ் அப் சமீபத்தில் ஆண்ட்ராய்ட் போனில் இயங்கும் வாட்ஸ் அப் செயலுக்கு இரண்டு அப்டேட்களை அளித்துள்ளது. இரண்டில் ஒன்று மிக அவசியமான ஒன்று. வாட்ஸ் அப்பில் இருக்கும் பலருக்கும் இருக்கும் பிரச்சனை அவர்களை யாரவது ஏதாவது ஒரு க்ரூபில் இணைத்து விட்டுக்கொண்டே இருப்பார்கள். இதற்கு ஒரு முடிவே கிடையாது.தூங்கி எழுந்து பார்த்தால் சம்பந்தம் இல்லாமல் இரண்டு க்ரூப்களில் இணைக்கப்பட்டிருப்பீர்கள். இனி இந்த தொல்லை இல்லை. ஆமாம், இனி உங்கள் அனுமதி இன்றி யாரும் உங்களை குழுவில் இணைக்க இயலாது. இந்த ஆப்ஷனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்ப்போம்.
முதலில் உங்கள் வாட்ஸ் அப் செயலியில் செட்டிங்ஸ் செல்லவேண்டும். அங்கு பிரைவசி ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதன் பின் குரூப்ஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் அங்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். யார் வேண்டுமானாலும் அதற்கடுத்து உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் உள்ளவர்கள் மட்டும் கடைசி ஆப்சன் ஒரு குறிப்பிட்ட நபர்களைத் தவிர்த்து அனைவரும்.
கவனமாக உங்களுக்கு வேண்டிய ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உங்களை நேரடியாக குழுவில் சேர்க்க இயலாதபட்சத்தில் அந்தக் குழுவில் இணைய லிங்க் உங்களுக்கு வாட்ஸ் அப் மெசேஜாக அனுப்பலாம். மூன்று நாட்களுக்குள் அந்த லிங்கை உபயோகப்படுத்தி வாட்ஸ் அப் குழுவில் நீங்கள் இணையலாம்.



