ஓர் இரவு – மது ஸ்ரீதரன் – என் பார்வையில்
முகநூல் நண்பர் திரு மது ஸ்ரீதரன் அவர்களின் நாவல். தலைப்புக்கேற்றவாறு கதையின் நாயகனின் வாழ்வில் ஓர் இரவில் நடக்கும் நிகழ்வுகள் எப்படி அவனது வாழ்வை மாற்றுகின்றன என்பதே கதை.
சினிமாவில் இயக்குனர் வாய்ப்பு தேடும் இளைஞன் ரவி, அவனது குரு மாயோன், தாரா, தாராவின் காதலின் பஷீர். இவர்களே கதையின் முக்கிய பாத்திரங்கள். அடுத்த குறும்பட கதைக்காக தேடும் ரவியை இரவில் நகர்வலம் வர சொல்கிறார் மாயோன். இரவில் புறநகர் பகுதியில் ரவி எதிர்பாராத விதமாய் தாரா என்ற இளம் பெண்ணையும் அவளது காதலனையும் சந்திக்கிறான். அவர்களுடன் தொடர்ந்து பயணிக்கும் பொழுது திடீரென்று ஒரு திருப்பம். அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள்தான் கதை.
தலைப்பை முடிவு செய்து கதையைத் துவங்கி இருப்பாரோ என்று சிறு ஐயம். அத்தனை வேகமாய் பரபரப்பாய் கதை செல்கின்றது. ஒரு த்ரில்லருக்கு உரிய அத்தனை அம்சங்களும் பொருந்தி வருகின்றன. ஒரு சினிமாவாய் தாராளமாய் எடுக்கலாம். நல்லதொரு இயக்குனர் கிடைத்தால் குறைந்த பட்ஜெட்டில் தரமான படமாய் கொண்டுவரலாம்.
பெரிதாய் குறைகள் எதுவும் கண்ணில் படவில்லை. ஒரு சில இடங்களில் லாஜிக் இடிக்கிறது. குறிப்பாய் அந்த சிம் மாற்றும் இடம். அதைத் தவிர்த்து பெரிதாய் குறைகள் இல்லை.
புத்தகத்தை அமேசான் கிண்டிலில் வாங்க