சபரிமலையை தொடர்ந்து அகஸ்திய மலை- விஸ்ரூபமெடுக்கும் விவகாரம்

 

மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்த அகஸ்திய மலை தமிழ்நாடு ,கேரளா மாநிலங்களில் பரந்து விரிந்த மலையாகும்.
இந்த மலை மற்றும் வனப்பகுதி யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட சுற்றுசூழல் பகுதியாகும்,
திருவனந்தபுரம் மாவட்டத்தின் நெய்யாறு வனப்பகுதிக்கு உட்பட்ட இந்த அகஸ்திய மலை,1868 மீட்டர் உயரமானதாகும்.

காணிகள் என்று அழைக்கப்படும் பழங்குடியின மக்கள் இந்த மலை அடிவாரத்தில் வசிக்கின்றனர் . மலையின் உச்சியில் அகஸ்திய முனியின் கோவிலும் உள்ளது.காணிகளுக்கு இந்த மலையும் அகஸ்திய முனியும் மிகவும் முக்கியமானவர்கள்.

அவர்கள் பல்லாண்டுகளாக மலை ஏறி வழிபட்டு வரும் அகஸ்திய மலை க்கு இப்போது புதிய ஆபத்து வந்துள்ளது. இந்த மலை உச்சிக்கு, ஆண்கள் மட்டுமே சென்று வழிபாடு நடத்துவதே காணிகளின் நடைமுறை. ஆனால் சமீபத்தில் கேரளா உயர்நீதி மன்றம் , பெண்களை அவ்வாறு தடுத்து நிறுத்த முடியாது என்றும் ,பெண்களும் அகஸ்திய மலை ஏறி சென்று வழிபடலாம் என்றொரு அதிரடி தீர்ப்பு கூறியது..

இந்த தீர்ப்பை எதிர்த்து காணிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் ,மத்திய ராணுவ அமைச்சக பெண் ஊழியர் தான்யா சணல் இன்று போலீஸ் பாதுகாப்புடன் அகஸ்திய மலையை ஏற தொடங்கியுள்ளார். அகஸ்திய மலையில் ஏறும் முதல் பெண் இவரே ஆவர்.
பெண்கள் அகஸ்திய மலை செல்வது தங்கள் நம்பிக்கைக்கு எதிரானது என்று காணிகள் போராடும் நிலையில், இவ்வாறு அரசு அதிகாரியே செல்வது காணிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் சபரி மலை விவகாரம் போல அகஸ்திய மலையும் இப்போது கேரளாவில் இந்துக்களுக்கு இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

(Visited 54 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *