மத்திய அரசின் கடன் 52.2%(2014) லிருந்து 48.7% (March 2019)ஆகக் குறைந்துள்ளது.
உலகின் 5 வது பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது.
20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் அமைத்துத் தரப்படும்.
கிராமப் பெண்கள் முன்னேற்றத்திற்கு தான்ய லட்சுமி திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
விவசாயக் கடனுக்காக 15 லட்சம் கோடிவரை ஒதுக்கப்படும்.
2022-23 க்குள்ளாக மீன்கள் உற்பத்தி 200 லட்சம் டன்கள் உற்பத்தி செய்ய வழிவகை செய்யப்படும்,
சுகாதாரம் பேண “ஜல் ஜீவன் திட்டம்” மற்றும் “தூய்மை இந்தியா திட்டத்தின்” கீழ் பாதுகாக்கப்படும்.
சுகாதாரத்திற்காக 69,000 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
2020-21 காலக்கட்டத்திற்காக 12,300 கோடி தூய்மை இந்தியா திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராமப் புற மக்களுக்குத் தூய்மையான குடிநீர் கிடைக்க 3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2030 ல், இந்தியாவில் தான் உலகில் அதிக மக்கள் வேலை செய்பவர்களாக இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இணைய வழியில் பட்டப்படிப்பு படிக்கும் வகையில் 100 முக்கியமான கல்லூரிகளில் வழிவகை செய்யப்படுகிறது.
99,300 கோடி கல்விக்காக ஒதுக்கீடு (20-21 )செய்யப்படுகிறது ,
3000 கோடி திறமை வளர்க்க ஒதுக்கீடு செய்யப்படுகிறது .
ஆத்திச் சூடியை மேற்கோள்காட்டிப் பேசினார் நிர்மலா சீதாராமன்.
முதலீடு செய்பவர்களுக்கு மத்திய அரசு உதவி செய்யும்.
இந்தியாவை உயர் கல்வி கற்கும் நாடாக ஆசியா மற்றும் ஆப்ரிக்க மாணவர்கள் நாடுவதற்காக “இந்த்-சாட்” என்ற பரிட்சை முறை கொண்டு வரப்படும்.
1480 கோடி டெக்ஸ்டைல் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப் படுகிறது.
விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு
27,300 கோடி வர்த்தகம் , தொழிற்சாலைகளை மேம்படுத்த ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
விவசாயிகள் வருமானத்தை உயர்த்த 16 வழிகள் பின்பற்றப்படுகிறது.
தேஜஸ் டைப் ரயில்கள் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படும்.
27,000 கிலோமீட்டர் அளவிற்கு ரயில்கள் வழித்தடம் மின்சாரத்தால் இயக்க பட்ஜெட்டில் வழிவகை செய்யப்படுகிறது.
டெல்லி-மும்பை, சென்னை-பெங்களூரு மற்றும் கூடுதலாக ஒரு விரைவு ரயில்பாதை 2023 க்குள்ளாக அமைக்கப்படும்.
ரயில் வழிப்பாதையில் சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டங்கள் உள்ளன.
22,000 கோடி மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
டேட்டாசென்டர் பூங்காக்கள் இந்தியா முழுவதுமாக அமைக்கப்படும்.
1,00,000 கிராமப்பஞ்சாயத்துகள் டிஜிட்டல் ஆக்கப்படும்.
பாரத் நெட் ப்ரோக்ராமுக்காக 6000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தேசிய அளவில் இரண்டு அறிவியல் திட்டங்கள் கொண்டுவரப்படும்.
8000 கோடி குவாண்டம் டெக்கிற்காக ஒதுக்கப்படும்.
11 லட்சம் கோடி உள்கட்டமைப்பிற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக ஒதுக்கீடு செய்யப்படும்.
1.7 லட்சம் கோடி போக்குவரத்து துறைக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
10 கோடி வீடுகள் ஊட்டச் சத்து திட்டத்தில் பலன் அடைந்துள்ளது.
6 லட்சம் அங்கன்வாடி தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன்களில் அப்டேட் செய்யப்பட்டதன் மூலமாகவே 10 லட்சம் வீடுகள் பலன் அடைந்ததை கணக்கீடு செய்ய முடிந்தது.
பெங்களூர் புறநகர் ரயில் திட்டம் 18600 கோடியில் அமைக்கப்படும்,
பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு 53000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
நாடும் முழுவது சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த 9000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஐந்து இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். வரலாற்று சிறப்பு மிக்க இடங்களாக அறிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆதிச்ச நல்லூரில் இது அமைய உள்ளது.
மூத்த குடிமக்கள் மேம்பாட்டிற்காக 9000 கோடி ஒதுக்கப்படுகிறது.
தேசிய ஜவுளித் திட்டத்திற்கு 1480 கோடி ஒதுக்கீடு.
மத்திய பண்பாட்டுத் துறைக்கு 3150 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
2024 க்கிற்குள்ளாக கூடுதலாக 100 புதிய விமானங்கள் இயக்க வழி செய்யப்படும்.
ஊட்டச் சத்து திட்டத்திற்காக 35600 கோடி ஒதுக்கீடு.
ஆயுஸ்மான் பாரத் மருத்துவமனைகள் கூடுதலாக 100 மாவட்டங்களில் அமைக்கப்படும்.
சிறந்த ஆடு குறித்து திருவள்ளுவர் கூறியதை மேற்கோள் காட்டி பேசுகிறார் நிர்மலா சீதாராமன்.
“பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து ” என்கிற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.
சுத்தமான காற்று திட்டத்திற்கு 4400 கோடி ஒதுக்கீடு.
தேச பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.
வரி என்ற பெயரில் மக்களை சித்ரவதை செய்வதை ஏற்க முடியாது.
உலக நாடுகளுடன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க திட்டம்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக அரசு முயற்சி செய்யும்.
சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கு 2500 கோடி ஒதுக்கீடு.
தனியார் அரசு பங்களிப்புடன் 150 புதிய ரயில்களை இயக்க முடிவு.
2022 ல் G20 மாநாடு நடத்த 100 கோடி ஒதுக்கீடு
லடாக் யுனியன் பிரதேசத்திற்கு 5958 கோடி ஒதுக்கீடு.
காஷ்மீர் யுனியன் பிரதேசத்திற்கு 30000 கோடி ஒதுக்கீடு.
வங்கி வாடிக்கையாளர்களுக்கான காப்பீடு வரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்வு. முன்பு 1 லட்சம் ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுத்துறை வங்கிகளுக்கு 3.5 லட்சம் கோடி ஒதுக்கீடு.
மத்திய அரசிடம் IDBI பங்குகள் விற்கப்படும்.
5லட்சத்திற்கும் அதிகமான சிறு/குறு தொழிற்சாலைகள் கடனை மறு உருவாக்கம் செய்ததன் மூலம் பலன் அடைந்துள்ளது.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சில பாதுகாப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வழிவகை.
வங்கிகளில் பணம் செலுத்தியவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளில் ஒரு பங்கு விற்பனை செய்யப்படும்.
அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களைத் தேர்வு செய்ய தேசிய முகமை தேர்வு.
வரும் நிதியாண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10% ஆக இருக்கும் என எஸ்டிமேட் செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2020-21 ஆம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 3.8% ஆக இருக்கும் என கணிப்பு .
வரும் நிதி ஆண்டில் மத்திய அரசின் செலவு 30 லட்சம் கொடியாக இருக்கும் என மதிப்பீடு
மத்திய அரசுப் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வழிவகை.
கார்ப்பரேட் வரியைக் குறைத்தது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு.
பொதுத்துறை பங்குகளை விர்பதம் மூலம் சுமார் 2 லட்சம் கோடி வரை வருவாய் இருக்கும் என மதிப்பீடு.
வருமான வரி செலுத்துவதில் புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. தற்போது 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 20% வருமான வரி உள்ளது. 10 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் பெறுபவர்களுக்கு 30% வருமான வரி நடைமுறையில் உள்ளது. அதைக் கீழ்க்கண்டவாறு மறு சீரமைக்கப்படுகிறது.
5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10% வருமான வரி.
7.5 லட்சம் முதல் 10 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 15% வருமான வரி.
10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 % வருமான வரி.
12.5 லட்சம் முதல் 15 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 25% வருமான வரி.
15 லட்சத்திற்கு அதிமான வருமானம் ஈட்டுபவர்களுக்கு 30% வருமான வரி தொடரும்.
5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு முற்றிலுமாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய தனி நபர் வரி குறைப்பால் அரசிற்கான வரி வருவாயில் 40,000 கோடி இழப்பு.
டிவிடன்ட் வழங்கும் பொது விற்பனையாளரிடம் வாங்கப்பட்ட 15% வரி ரத்து. இனி டிவிடன்ட் வாங்குபவர்களுக்கு மட்டுமே வரி.
புதிதாகத் தொடங்கப்படும் மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 15% ஆக இருக்கும்.
குறைந்த விலை வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த கடன் மானியம் கூடுதலாக ஓர் ஆண்டிற்கு நீடிப்பு.
புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு வரிச் சலுகை.
5 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறு குறு நிறுவனங்களுக்கு தணிக்கை இல்லை.
ஆதார் எண்ணின் அடிப்படையில் பான் கார்டுகளை உடனடியாக விநியோகிக்க புதிய முறை அமல்படுத்தப்படும்.
16 லட்சம் பேர் புதிதாக வரி செலுத்தினர்.
27 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு மேல் வந்தனர்.