குடியுரிமை சட்டம் வெற்றி பெற்றால், இந்திய குடியுரிமை அடையும் நபர்கள் எத்தனை பேர்?

டெல்லி: குடியுரிமை சட்டம் வெற்றி பெற்றால், இந்திய குடியுரிமை அடையும் நபர்களின் எண்ணிக்கை 31,313 என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் 25,447 இந்துக்கள், 5807 சீக்கியர்கள் , இரு பௌத்தர்கள் மற்றும் பார்சிக்கள் , 55 கிருத்துவர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெறுவார்கள். இவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் மத அடக்குமுறை கொடுமைகளுக்கு உள்ளாகி  உயிருக்குப் பயந்து போய் இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள்.

இதற்கான சட்ட வரைவை, பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. ஏற்கனவே இதைக் கடந்த கூட்டத்தொடரில் குடியுரிமை சட்ட வரைவை மத்திய அரசு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

(Visited 24 times, 1 visits today)
4+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *