இடைக்கால பட்ஜெட்டில் தனி நபர் வரி விலக்கு அதிகப்படுத்தப்படலாமாம்

புதுடெல்லி: 2019 இடைக்கால  பட்ஜெட்டில் நடுத்தர மக்களைக் கவனத்தில் கொண்டு , தனி நபர் வரிவிலக்கு இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வருகின்றன. பாராளுமன்ற  தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய அரசு முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆண்டுக்கு  2.5 ரூபாய் லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு  வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அது 5 லட்ச ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது. தற்போது 2.5- 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறும் தனி நபர்கள் 5% வரி கட்ட வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு இதைக் கொண்டு வந்தால் அவர்களும் கட்ட வேண்டிய தேவையில்லை.

மேலும் மருத்துவ செலவுகளுக்கும், போக்குவரத்து செலவுக்கும் ஆண்டுக்கு 12,500 ரூபாய் வரை விலக்கு அளிக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.  இத்தொகை குறைவு என்றாலும் மக்களின் உணர்வுகளைத் தொடும் என்பதால்  இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.

(Visited 42 times, 1 visits today)
6+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *