குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த அஸ்ஸாம் பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு

அஸ்ஸாம்: ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலிருந்து  கொடுமைகளை அனுபவித்து வந்த சிறுபான்மையினர்களான இந்துக்கள், கிறத்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்களுக்கு  இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர முயற்சித்து வருகிறது. இந்நிலையில் அசாமில் இரு பாஜக சட்டசபை உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எந்த மதமாக இருந்தாலும் வெளி நாட்டில் இருந்து தஞ்சம் புகுந்தவர்கள் வெளிநாட்டினரே. ஆகையால் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை ஏற்றுக் கொள்ள இயலாது என போர்க்கோடு தூக்கியுள்ளனர். ஹசாரிகா மற்றும் அதுல் போரா ஆகிய இரு சட்டசபை உறுப்பினர்கள் இவ்வேதிர்ப்ப்பைத் தெரிவித்தவர்கள். எங்களது கட்சிக்கு ஒரு பார்வை இருக்கிறது. ஆனால் இவ்விஷயத்தில் எங்களது பார்வை கட்சியைப்போல அல்ல என்றார்கள்.

(Visited 13 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *