இலக்கியம்57 Videos

கலம் செய் கோவே கலம் செய் கோவே

வாழ்க்கை ஒரு கொண்டாட்டம், இறப்பும் ஒரு கொண்டாட்டம்தான், ஏன்னென்றால் நமது சிந்தனைப் போக்கில் இறப்பு என்பது முற்றுப்புள்ளி அல்ல, அது பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் ஒரு கால்புள்ளிதான். அதனால் தான் இன்றும் ” இது பெரிய சாவு, எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்ற பேச்சு இயல்பாக பேசப்படுகிறது.  ஒரே நிகழ்வு, ஒரு சாவு, ஒரே போன்ற துயரம், அதனால் ஒரே போன்ற கோரிக்கை. அதிலும் ஓன்று போலவே தொடங்கும் இரண்டு பாடல்கள், இரண்டும் […]

திருக்குறள்- மனு ஸ்மிருதி, மனுநீதி, மனுக்குறள்? – இறுதிப் பகுதி | முனைவர் செ.ம. மாரிமுத்து

பல குறள்கள் மனுஸ்மிருதியிலிருந்து சொல்லுக்குச்சொல் மாறாமல் அப்படியே வள்ளுவரால் மொழிபெயர்க்கப் பட்டிருப்பது பற்றி நேற்று கண்டோம். சில உதாரணங்களையும் காணலாம். Manusmriti II:218 http://www.hindubooks.org/scriptures/manusmriti/ch2/ch2_211_220.html As the man who digs with a spade (into the ground) obtains water, even so an obedient (pupil) obtains the knowledge which lies (hidden) in his teacher. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றணைத் தூறும் அறிவு – 396 Manusmriti […]

திருக்குறள்- மனு ஸ்மிருதி, மனுநீதி, மனுக்குறள்? – பகுதி 2 | முனைவர் செ.ம. மாரிமுத்து

தொடரின் முதல் பகுதியை இங்கே படிக்கவும். https://oreindianews.com/?p=5711 நேற்றுப் பார்த்த உதாரணங்களின் தொடர்ச்சியுடன் இன்று ஆரம்பிப்போம். திருவள்ளுவர், சத்திரிய தருமத்தையும் போற்றியிருக்கிறார் என்பது தெரியுமா? இதற்கு உதாரணம் சொல்ல ஏராளமான குறள்கள் இருந்தாலும், அன்றிலிருந்து தமிழ்மக்களை அடிமையாக்கிய பார்ப்பன – சத்திரிய கூட்டுச் சதிக்கு ஆதாரமான சில குறள்களை மட்டும் பார்ப்போம். அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். பரிமேலழகர் உரை: அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது – அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும் […]

திருக்குறள்-மனு ஸ்மிருதி, மனுநீதி, மனுக்குறள்? (பகுதி 1) | முனைவர் செ.ம. மாரிமுத்து

திருக்குறளை உலகப்பொதுமறை என்றும், தமிழர் அனைவருமே சமயச்சார்பின்றிப் பின்பற்றக்கூடிய ஒப்பற்ற அறநூல் என்றும் சொல்கிறோம். நுணுகி ஆராய்ந்து பார்த்தால் , இக்கருத்து எவ்வளவு பெரிய மாயை என்பது விளங்கும். குறள் பக்தி கொண்ட யாரையும் புண்படுத்தும் நோக்கில் இதைச் சொல்லவில்லை. காரணம் இருக்கிறது. அன்வர் செரிபு என்று எனக்கொரு நண்பர். என்போலவே மார்க்ஸீய சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்டு, மதம் என்னும் பேய் பிடிக்காத, மதம் கடந்து சிந்திக்கும் அகண்ட பார்வை கொண்டவர். தொழிற்சங்கத் தோழர். பல எதிர்ப்புகளை மீறித் […]

காதலென்றாகிக் கரம்நீட்டி அணைக்கும் மாதொருபாகன்! – ராஜாராமன்

நம்ம மக்கள்கிட்ட முற்றிலும் தவறா புரிஞ்சிக்கப்பட்ட ரெண்டு வார்த்தைகள் காதலும் ஆன்மீகமும்… பொண்ணோ ஆணோ கொஞ்சம் கண்ணுக்கு லட்சணமா இருந்துட்டா குபீர்ன்னு பொங்கியெழுந்து ஹார்மோன்களின் சித்து விளையாட்டில் அமிழ்ந்துவிடுவது மட்டுமா காதல்? கோயிலுக்கு போயி ”அப்பனே ஆண்டவா… எனக்கு இதைக் கொடுத்தேன்னா உனக்கு அதைச் செய்யிறேன்”ன்னு கும்பிட்டுட்டு பிரகாரம் சுத்தும்போதே லௌகீகத்துல கரைஞ்சி போறதா ஆன்மீகம்?! இரண்டுக்குமான பொருள் வேறொரு தளத்தில் காலூன்றி இருக்கின்றதல்லவா?! .. காதலும் ஆன்மீகமும் வேறு வேறில்லை. காதல் முற்றிய நிலைதான் ஆன்மீகம்.. […]

காதலாய் மலர்ந்த மஞ்சணத்தி

சங்கப்பாடல்களை எப்பவுமே கோனார் நோட்ஸ் வச்சோ, அல்லது தமிழ் வாத்தியார்கள் துணையோடயோ படிக்கக்கூடாது…. அது சாறு புழியப்பட்ட சக்கையை சாப்பிடுவது மாதிரி…. நானு ப்ளஸ் 1, ப்ளஸ் 2 காலத்துலயே நோட்ஸ் படிச்சி அர்த்தம் தெரிஞ்சிக்க மாட்டேன்… அப்பப்ப பாட்டு பதம் பிரிக்கிறதுக்கு மட்டும் நோட்ஸ் புரட்டுவேன்… அசெம்ப்ளி இலக்கியம் வாசிக்கிறதுக்காக அப்பப்போ சரவணமுத்து சார்கிட்ட உரையாடுவேன்.. அவர் சொன்ன சின்னச் சின்ன குறிப்புகள்தான் எனக்கு ஆரம்பம்… ஆனா இது அவருக்கே தெரியுமான்னு எனக்கு தெரியாது… அப்புறம் […]

தினம் ஒரு குறள்: அமைச்சு

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்.   எத்தகைய இடர் வரினும், இடர் களையும் நெஞ்சுறுதியோடு எடுத்த காரியம் முடிப்பேன் எனும் உறுதி அற்றவர், இதை இப்படிச் செய்ய வேண்டும் என அத்துனையும் அறிந்து வைத்தும், செயல்படும்போது அச்செயலை முடிக்க இயலாமல் இருப்பர். 0

தினம் ஒரு குறள்: அமைச்சு

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்   எழுபது கோடி உறும்.   தவறான சிந்தனை உடையவனை ஆலோசனை வழங்கும் மந்திரியாக வைத்திருப்பது, சற்றேறக்குறைய எழுபது கோடி பகைவர்களை உடன் வைத்திருப்பதற்கு ஒப்பதாகும். தவறான சிந்தனையின் தாக்கத்தை இதைவிட எளிமையாக யாராலும் இருவரி எழுசீரில் சொல்ல முடியாது. இது ஏதோ செய்தியல்ல; வாசித்துக் கடப்பதற்கு! வாழ்வின் வெற்றிக்கான அடிப்படை அறிவு நூல்! இதை, அவ்வப்பொழுது, எண்ணத்தில் நிறுத்துங்கள்! எச்சரிக்கை பிறக்கும்! வாழ்வே இனிமையாகும்!! உலகத்தைத் திருத்துவது நமது நோக்கமல்ல; ஆனால், நாம் திருந்தினால், […]

தினம் ஒரு குறள்: அமைச்சு

அறிகொன்று அறியான் எனினும் உறுதி  உழையிருந்தான் கூறல் கடன்.   அறிவுடையோர் சொல்லை அழித்துத் தானும் அறியாதவனாய் இருப்பினும், உறுதி தரும் சொற்களை ஆள்பவர்க்குக் கூறுவது, உடனிருக்கும் அமைச்சனது கடமையாகும். இடிக்க, இடிக்கக் கல்லும் கரையும் என்பதுபோல், அறிவைப் புகட்டப் புகட்ட, நிச்சயம். ஒருநாள் மாற்றம் நிகழும் என்ற உறுதிப்பாட்டுடன் ஆலோசனை கூற வல்லானை அமைச்சனாக மட்டுமல்ல, நண்பனாகப் பெற்றாலே வரம்தான். 0

தினம் ஒரு குறள்: அமைச்சு

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து  இயற்கை அறிந்து செயல்.   நூல்பல கற்றுத் தேர்ந்து வினைசெயும் ஆற்றல் அறிந்த போதும், உலக வழக்கங்களுக்கு ஏற்ப இயற்கையை அறிந்து அதனொடு பொருந்தும் வகையில் செயல்பட வேண்டும். 0