ஒரு வரிச் செய்திகள்59 Videos

அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம்; தமாகவுக்கு ஆட்டோ சின்னம்

இன்று இந்திய தேர்தல் ஆணையம் தினகரனின் அமமுகவுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தையும், ஜி.கே.வாசனின் தமாகவுக்கு ஆட்டோ ரிக்ஷா  சின்னத்தையும்   ஒதுக்கி உள்ளது. 0

கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து -துப்பாக்கி சூடு-பங்களாதேஷ் கிரிக்கட் அணி தப்பித்தது

கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து -துப்பாக்கி சூடு.பலர் இறந்திருக்கலாம் என அச்சம்     நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரத்தில் இன்று இரு    மசூதிகளில்  துப்பாக்கி ஏந்திய ஒருவர் மசூதிக்கு உள்ளே சென்று கண்ணில் பட்டவர்களை சரமாரியாக சுட்டதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன . . பிரதம மந்திரி  ஜேசிண்டா  அர்டேன்   “நியூசிலாந்தின் இருண்ட நாட்களில் ஒன்றாக மாறிப்போனதாக தெரிவித்தார். கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள நகரங்களில் நிகழும் சம்பவங்கள் “ஒரு அசாதாரணமான மற்றும் அசாதாரணமான வன்முறைச் செயலை” பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளன என்றார். […]

மூன்று வருடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கட்டி முடிக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

சேலம் : இன்று செய்தியாளர்களைச் சந்தித்த  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 3 வருடங்களில்  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டுக்குள் 1000 டயாலிசிஸ் மையங்கள் திறக்கப்படும். 1000 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணையை மார்ச் மாதம் முதல்வர் வழங்குவார் என்றார்.  சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில், டயாலிசிஸ் சிறப்பு சிகிச்சை பிரிவை திறந்து வைத்தார். இதன் பின்னரே அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 0

வைரலாகி வரும் வீர மரணம் அடைந்த மேஜர் மனைவியின் காதல் கவிதை; என்னை விட நாட்டை அதிகம் காதலித்தாய்…

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த தனது கணவரும், ராணுவ ஜெனரல் மேஜருமான விபுதி சங்கர் தவுன்டியாலுக்கு , அவரின் அன்பு  மனைவி நிகிதா கவுள் எழுதிய கவிதை வரிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நிகிதா கவுலுக்கும், மேஜர் விபுதி சங்கர் தவுன்டியாலுக்கும்  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் திருமணம் நடைபெற்றது. விரைவில் முதலாமாண்டுத் திருமண விழாவைக் கொண்டாட இருவரும் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில்தான் அவர் வீர மரணம் அடைந்துள்ளார். அவர் எழுதிய கவிதை இதுதான். என்னிடம் […]

89 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

சென்னை : தமிழக தலைமை டிஜிபி ராஜேந்திரன் சென்னையில் 2 உதவி ஆணையர்கள் உட்பட 89 டிஎஸ்பி.,க்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் 16 ஏடிஎஸ்பி.,க்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 1+

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

உடல் நலக்குறைபாடு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்றார்   தேமுதிக தலைவர் விஜயகாந்த். இன்று அவர் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பி உள்ளார். தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பை விஜயகாந்த் அவர்கள் வெளியிடுவார்கள் என்று இரு தினங்களுக்கு முன்பாக அவரது மகன் விஜ பிறாகரன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 0

தெளுகுதேசக் கட்சி எம்பி விலகல் ; ஓய்.எஸ்.ஆர்.சி.எஸ். கட்சியில் இணைந்தார்

அமராவதி : ஆந்திர பிரதேசத்தைச் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் அனகாபள்ளி, பாராளுமன்ற  தொகுதி எம்.பி., சீனிவாச ராவ், அக்கட்சியிலிருந்து விலகினார். இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர்.சி.எஸ். கட்சியில் இணைந்துள்ளார். ஓய்.எஸ்.ஆர்.சி.எஸ். ல் இணைவதற்கு முன்பாகவே தனது  எம்.பி., பதவியையும், அவர் ராஜினாமா செய்துள்ளார். 0

275 புதிய பேருந்துகள் சேவையைத் துவக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் இருந்து  275 புதிய பேருந்துகளின்  சேவையை, முதல்வர் பழனிசாமி இன்று (பிப்ரவரி 14)கொடியசைத்து துவக்கி வைத்தார். மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்காக நவீன வசதியுடன் இந்த புதிய பேருந்துகள்  வடிவமைக்கப்பட்டுள்ளன. 275 பேருந்துகளின் விலை ரூ.69 கோடி மதிப்புடையது. இந்த புதிய பேருந்துகள்  சென்னை, விழுப்புரம், கோவை, சேலம் நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளன. 0

அதிமுக அணியில் இடம்பெறும் பட்சத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளை கண்வைக்கிறது

தமிழக பாஜக அதிமுக அணியில் இடம்பெற்றால் எந்தெந்த தொகுதிகளை கண்வைக்கிறது என்பது பற்றிய ஒரு பார்வை. கன்னியாகுமரி திருச்சி கோயம்பத்தூர் ராமநாதபுரம் தென் சென்னை வேலூர் திருநெல்வேலி என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். 0

நாளை தமிழகத்தை ரவுண்டு கட்ட வரும் பாஜக தேசிய தலைவர்கள்

நாளை தமிழகம் வரும் பாஜக தலைவர்களின் பெயர்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை அறிவித்து உள்ளார். அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா – ஈரோடு ஜவுளித் துறை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி – திருவண்ணாமலை சட்டத் துறை அமைச்சர்  ரவி ஷங்கர் பிரசாத் -வேலூர் 1+