சிறப்புக் கட்டுரைகள்442 Videos

அரசியல் வானில் ஒரு இளம்தாரகை – ஸ்ம்ரிதி இராணி மார்ச் 23.

எந்த ஒரு நிறுவனமோ, இயக்கமோ அல்லது அரசியல் கட்சியோ நெடுங்காலம் நீடித்து இருப்பதற்கு ஒரு வழிகாட்டும் கொள்கையும் அதனால் ஈடுபட்டு அதில் தன்னை இணைத்துக் கொள்ளும் இளைஞர் பட்டாளமும், அவர்களை வழிகாட்டி அவர்களைத் தலைவர்களாக மாற்றும் மூத்த நிர்வாகிகளும் தேவை. அப்படி ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்திலும் பின்னர் பாரதிய ஜனதா கட்சியிலும் அடுத்த தலைமுறை தலைவர்களில் முக்கியமானவராக விளங்கும் ஸ்ம்ரிதி இராணி அவர்களின் பிறந்தநாள் இன்று அஜய் குமார் மல்ஹோத்ரா – ஷிபானி பக்ச்சி தம்பதியரின் மூத்த […]

தொழிலதிபர் T V சுந்தரம் ஐயங்கார் பிறந்தநாள் – மார்ச் 22

தமிழகத்தின் முக்கியமான டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் திரு சுந்தரம் ஐயங்காரின் பிறந்ததினம் இன்று  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி என்ற சிறு கிராமத்தில் 1877ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி பிறந்தவர் திரு சுந்தரம் ஐயங்கார். திருநெல்வேலி ஹிந்து கல்லூரியில் படித்த அவர் சட்டபடிப்பையும் முடித்தார். அதனைத் தொடர்ந்து ரயில்வேயில் குமாஸ்தாவாகவும் பின்னர் வங்கியிலும் பணியாற்றினார். பின்னர் தொழில்துறையில் சுந்தரம் ஐயங்கார் கால்பதித்தார்.  1911ஆம் ஆண்டு தனது நிறுவனத்தை ஆரம்பித்த ஐயங்கார் 1912ஆம் ஆண்டு பஸ் […]

விண்வெளி வீர மங்கை – கல்பனா சாவ்லா – மார்ச் 17

மனிதகுலம் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதலே விண்வெளியும், அதில் பறப்பதும் மனிதனுக்கு கிளர்ச்சியூட்டும் கனவாகவே இருந்து வந்துள்ளது. விண்வெளியில் கால்பதித்த முதல் பாரத பெண்மணி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான கல்பனா சாவ்லாவின் பிறந்ததினம் இன்று.  மேற்கு பஞ்சாபில் ( இன்றய பாகிஸ்தான் ) முல்தான் பகுதியைச் சார்ந்த பனாரசிலால் சாவ்லா நாட்டின் பிரிவினையின் போது இன்றய ஹரியானா மாநிலத்திற்கு குடிபெயர்ந்தார். தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த அவர் பல்வேறு சிறு தொழில்களைச் செய்து வந்தார். சவாலான ஒரு காலகட்டத்தை […]

கலம் செய் கோவே கலம் செய் கோவே

வாழ்க்கை ஒரு கொண்டாட்டம், இறப்பும் ஒரு கொண்டாட்டம்தான், ஏன்னென்றால் நமது சிந்தனைப் போக்கில் இறப்பு என்பது முற்றுப்புள்ளி அல்ல, அது பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் ஒரு கால்புள்ளிதான். அதனால் தான் இன்றும் ” இது பெரிய சாவு, எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்ற பேச்சு இயல்பாக பேசப்படுகிறது.  ஒரே நிகழ்வு, ஒரு சாவு, ஒரே போன்ற துயரம், அதனால் ஒரே போன்ற கோரிக்கை. அதிலும் ஓன்று போலவே தொடங்கும் இரண்டு பாடல்கள், இரண்டும் […]

பகத்சிங்கின் மனைவி – துர்காவதி தேவி

லாகூர் புகைவண்டி நிலையத்திற்கு நேர்த்தியாக உடையணிந்த ஒரு கனவான் அவரது மனைவியோடு வந்தார். மனைவியின் கையில் ஒரு சிறு ஆண் குழந்தை. அவர்களோடு அவர்களின் வேலையாளும் கூட வந்தார். மூவருக்குமான பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு அந்த கணவானும் அவர் குடும்பமும் முதல்வகுப்பு பெட்டியில் ஏறிக்கொண்டனர். அவரது வேலையாள் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தார். கான்பூரில் அவர்கள் இறங்கி வேறு ஒரு புகைவண்டியில் லக்னோ சென்றனர். லக்னோ நகரில் அந்த வேலையாள் அந்தக் குடும்பத்தைப் பிரிந்து வாரனாசிக்குச் சென்றுவிட்டார். கனவானும் […]

திவாலாகிறாரா அம்பானி ?

பங்குச்சந்தையில் ரத்தக் களரி. அநேகமாக எல்லா நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்து கொண்டே போகிறது. பிரதமர் மோதியின் செல்லப் பிள்ளைகள் என்று இதுவரை போராளிகளால் தூற்றப்பட்ட அம்பானி மற்றும் அதானியின் நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்துள்ளன. அவர்கள் திவாலாகப் போகிறார்கள், அவர்களையே இந்த அரசு காப்பாற்ற முடியவில்லை என்று வழக்கம் போல நமது போராளிகள் கூக்குரல் போடத் தொடங்கி இருக்கிறார்கள்.  ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்தப் பங்குகள் ஏறத்தாழ 634 கோடி. அதில் 49% பங்குகள் அம்பானியின் வசம் […]

கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம் பிறந்தநாள் – மார்ச் 7

பாரத நாட்டின் வடகிழக்கு பகுதியில் பிறந்து, தெற்குப் பகுதியில் ராணுவப் பயிற்சி முடித்து வடக்கு எல்லையில் நாட்டைக் காக்க தனது உயிரை தியாகம் செய்த கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம் அவர்களின் பிறந்தநாள் இன்று. 1975ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிறந்த இவர், 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் நாள் கார்கில் போர்முனையில் கேந்த்ர முக்கியத்துவம் வாய்ந்த 4812 என்ற சிகரத்தை தனது உயிரை பலிதானம் செய்து எதிரிகளிடம் இருந்து மீட்டெடுத்தார்.  மேகாலயா மாநிலத்தின் […]

சேஷாத்ரி ஸ்வாமிகள் – இறுதி பகுதி

வேறொரு சமயம் வள்ளிமலை ஸ்வாமிகளிடம் வயதானவர் உருவில் வந்து பசிக்கு உணவு கேட்டார் சேஷாத்ரி ஸ்வாமிகள். வள்ளிமலை ஸ்வாமிகள் உணவும் அளித்தார். பசியால் வாடிய வயதானவர் ஒரே மூச்சில் மூன்றுபடிக் கஞ்சியையும் குடித்துவிட்டார். அன்று முதல் தினமும் பெரியவருக்காக உணவு காத்திருக்கும். ஆனால் அந்த உணவை ஒரு கீரிப்பிள்ளை வந்து சாப்பிட்டுவிட்டுப் போய்விடும். சில நாட்களில் கீரிப்பிள்ளையாக வருவதும் பெரியவர் உருவில் வந்ததும் சேஷாத்ரி ஸ்வாமிகள் எனப் புரிந்து கொண்டார் வள்ளிமலை ஸ்வாமிகள். திருவண்ணாமலையில் இருந்தபோது மயானத்திலேயே […]

பகவத்கீதை முன்னுரை

ஸ்ரீமத் பகவத்கீதை – ஒரு சாமானியனின் எளிய உரை================================================= முன்னுரை: அர்ஜுனனுக்குச் சாரதியாக கண்ணபிரான் குருக்ஷேத்திரத்திற்குள் நுழைகிறான். அதுவரை மனதில் உறுதியோடு வீரம் பொங்க இருந்த அர்ஜுனன் எதிரில் படையோடு அணிவகுத்து நிற்கும் தனது ஆச்சாரியார்களையும், பிதாமஹரையும் மற்றும் தனது சொந்தங்களையும் கண்டு மலைத்துப் போய் மதிமயக்கம் கொண்டு “என் உறவுகளுடன் நான் போரிடமாட்டேன்” என்று காண்டீவத்தைக் கீழே போட்டுவிடுகிறான். அவனை இப்போது போரிடவைக்கவேண்டும் என்பதே ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவின் குறிக்கோள். மாயவனான பகவான் ஸ்ரீகிருஷ்ணன் எண்ணற்ற ஜாலங்களைச் செய்தது […]

சேஷாத்ரி ஸ்வாமிகள் – 6

ஒருமுறை சேஷாத்ரி ஸ்வாமிகளைப் பார்க்க சேலத்தில் இருந்து அன்பர் ஒருவர் நிறையப் பழங்கள் இனிப்புகள் எல்லாம் எடுத்துக்கொண்டு வந்திருந்தார். ஆனால் ஸ்வாமிகளைக் காணமுடியவில்லை. ஸ்வாமிகள் காஞ்சீபுரம் போயிருக்கலாமென எவரோ சொல்லக் கேட்டு அங்கு பயணம் ஆகவேண்டி வண்டியில் ஏறி அமர்ந்தார். அப்போது ஸ்வாமிகள் எங்கிருந்தோ ஓடோடியும் வந்து இந்த வண்டி காஞ்சீபுரம் போகுமா எனக் கேட்கவும் இருவரும் விதிர்விதிர்த்துப் போனார்களாம். பின்னர் கீழே இறங்கி சேஷாத்ரி ஸ்வாமிகளை வணங்கினார்கள். அதே போல் படிக்கமுடியாத ஏழைப்பையன் ஒருவன் சேஷாத்ரி […]