செய்திகள்1372 Videos

புரட்சியாளர் பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா நினைவுநாள் – மார்ச் 30

நாட்டுக்காக உயிரைக் கொடுப்பது சிறப்பானது, அதிலும் சிறந்தது நாட்டுக்காக உயிரோடு இருப்பது. அதிலும் சிறப்பு நாட்டை அடிமைப்படுத்தியவர்கள் நாட்டில் இருந்து கொண்டே தாய்நாட்டின் விடுதலைக்கு உழைப்பது, அதற்கான தேசபக்தர்களை உருவாக்குவது. அப்படி உழைத்த தியாகி பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மாவின் நினைவுநாள் இன்று. பாரத நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஆயுதம் தாங்கிய போராளிகளை லண்டன் நகரில் உருவாக்கிய நிறுவனம் இந்தியா ஹவுஸ். வீர சாவர்க்கர், வ வே சு ஐயர், மதன்லால் திங்ரா, மண்டயம் பார்த்தசாரதி […]

தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே !

சின்னப் பெண் கதை சொல்ல ஆரம்பித்தாள். இது ராமாயண கதை. தசமுகன் என்றால் பத்து தலை ராவணன். சீதையை ராவணன் இலங்கைக்குக் கொண்டு சென்று சீதையை ஒரு அழகிய வனத்தில் சிறை வைத்தான். அந்த இடத்துக்கு அசோகவனம் என்று பெயர். ராமனைப் பிரிந்த துக்கத்தால் சீதை முகம் வாடி அழுதுகொண்டு இருக்கிறாள். ராவணன் “சீதை நீ ராமரை விட்டு விட்டு என்னுடன் வந்துவிடு, நான் பலசாலி, என்னிடம் பல தெய்வங்கள் தோற்றுவிட்டது. உனக்கு என் சொத்து முழுவதும் […]

தேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப் போலே!

இதுவும் ஒரு கண்ணன் கதை தான்” என்று அந்தக் குட்டிப் பெண் சொல்ல ஆரம்பித்தாள். கண்ணன் தினமும் தன் தோழர்களுடன் மாடு மேய்க்கப் போவான். அவன் போகும் இடம் காடு. அங்கே தான் மாடுகளுக்குப் புல் கிடைக்கும். ஒரு நாள் நடுப் பகல் அது அவர்களுக்குச் சாப்பிடும் சமயம். எல்லோரும் அவரவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவைப் பகிர்ந்து கொண்டு சாப்பிடுவார்கள். “டேய் எனக்குக் கொஞ்சம் தோசை கொடு” “எனக்கு அதிரசம்”“தயிர்சாதத்துக்கு என் அம்மா ஊறுகாய் வைக்க […]

அகம் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே !

விதுரர் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள் அந்த சின்னப் பெண்.விதுரர் திருதராஷ்டிர மன்னனின் தம்பி. சிறந்த அறிவாளி. எது சரி, எது தப்பு என்று நன்றாகத் தெரிந்தவர். விதுரர் எது சொன்னாலும் அது நீதி. கண்ணனிடம் ஆழ்வார்களைப் போல மிகுந்த அன்பு அவருக்கு. அதனால் இவரை விதுராழ்வான் என்பார்கள். துரியோதனனுடைய சபையில் மந்திரி. பாண்டவர்கள் கௌரவர்களிடம் சூதாட்ட பந்தயத்தில் ராஜ்யத்தை இழந்தார்கள். பந்தியப்படி பன்னிரெண்டு வருடம் காட்டிலிருந்துவிட்டு மீண்டும் ராஜ்யத்தைக் கேட்டபோது துரியோதனன் மறுத்துவிட்டான். பாண்டவர்கள் சமாதானத்தையே விரும்பினார்கள். […]

அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே !

திருக்கோளூர் பெண் பிள்ளை அக்ரூரர் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள். கண்ணனின் தந்தை நந்தகோபன். அவருடைய உறவினர் அக்ரூரர். அக்ரூரர் என்றால் வடமொழியில் சாது என்று பொருள். இவரும் சாது, நல்லவர். குட்டி கண்ணனிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார்.குட்டி கண்ணனின் மாமா கம்சன். கெட்ட மாமா. கண்ணனைக் கொல்ல நினைத்தான். கெட்ட மாமா கம்சனிடம் அக்ரூரர் வயிற்றுப் பிழைப்புக்காக வேலை செய்தார்.கம்சன் கண்ணனைக் கொல்ல பல சதித் திட்டம் தீட்டித் தோற்றுப் போனான். மீண்டும் ஒரு சதித் திட்டம் […]

பகவத்கீதை – பதினேழாவது அத்யாயம் – சிரத்தாத்ரய விபாக யோகம்

யோக விளக்கம்: சிரத்தையில் நிலையாய் இருப்பவர்களைப் பற்றி அர்ஜுனன் கேட்க பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அதற்கு சிரத்தையின் மூன்று நிலைகளைப் பற்றிக் கூறி பூஜை யக்ஞம் தவம் முதலியவற்றில் சிரத்தையாக இருப்பவர்கள் எப்படி தன்னை வந்தடைகிறார்கள் என்பதையும் கூறுகிறார். சிரத்தையில்லாதவர்களின் எந்தச் செயலும் வீணே என்றும் சொல்கிறார். சிரத்தைகளை மூன்று விதமாகப் பிரித்துப் பொருள் கூறும் அத்யாயமாதலால் சிரத்தாத்ரய விபாக யோகம். அர்ஜுனனுக்கு இப்போது ஒரு அற்புதமான கேள்வி எழுந்தது. “கிருஷ்ணா! சாஸ்திரங்களை விட்டுவிட்டு சிரத்தையால் உந்தித்தள்ளப்பட்டவர்கள் தெய்வங்களை வழிபடுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் […]

ஸ்ரீராமானுஜருக்கு புகும் ஊர், பெண் பிள்ளைக்கு போகும் ஊர் !

ஒரு சமயம் ஸ்ரீ ராமானுஜர் ஆழ்வார்திருநகரியில் பெருமாளைச் சேவித்துவிட்டு திருக்கோளூருக்குச் சென்றார். ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் பிறந்த இடம். அவருடைய சிஷ்யர் மதுரகவி ஆழ்வார் பிறந்த ஊர் திருக்கோளூர். ஸ்ரீ ராமானுஜர் திருக்கோளூருக்குள் நுழையும்போது, எதிரே ஒரு பெண் வந்தாள். ராமானுஜரை வணங்கினாள். ராமானுஜர் “பெண்ணே எங்கிருந்து வருகிறாய் ?” என்று கேட்டார்.“சாமி நான் திருக்கோளூரிலிருந்து வருகிறேன்” என்றாள் அந்தப் பெண். ”அடடா..! இப்பொழுது தான் நம்மாழ்வாரைச் சேவித்துவிட்டு வருகிறேன்.. நம்மாழ்வார் இந்த ஊரைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் […]

ஐயப்பன் சஹஸ்ரநாமம்-3

ௐ ஜிதேந்த்³ரியாய நம: ।இந்திரியங்களை ஜெயித்தவனேௐ ஜிதக்ரோதா⁴ய நம: ।சினத்தை வென்றவனேௐ ஜிதஸேவாரி ஸங்க²காய நம: ।தேவர்களின் பகைவர்களை வென்றவனேௐ ஜைமிந்யாத்³ ரூʼஷி ஸம்ஸேவ்யாய நம: ।ஜைமினி முதலான ரிஷிகளால் வணங்கப்படுபவன்.ௐ ஜராமரணநாஶகாய நம: । 30கிழட்டுத்தனத்தையும் மரணத்தையும் நாசம் செய்பவனே.ௐ ஜநார்த³நஸுதாய நம: ।ஜனார்த்தனின் மகனேௐ ஜ்யேஷ்டா²ய நம: ।மூத்தவனேௐ ஜ்யேஷ்டா²தி³க³ண ஸேவிதாய நம: ।மூத்தவன் (விநாயகன்) முதலான கணங்கள் வணங்குபவனேௐ ஜந்மஹீநாய நம: ।பிறப்பை வலுவிழக்கச்செய்பவனேௐ ஜிதாமித்ராய நம: ।வயதானவர்களுக்கு நண்பனாக இருப்பவனேௐ ஜநகேநாঽபி⁴பூஜிதாய […]

பகவத்கீதை – பதினாறாவது அத்யாயம் – தேவாசுர சம்பத் விபாக யோகம்

யோக விளக்கம்: பரமேஸ்வரனான தெய்வத்தை அடைவதற்குரிய செயல்களைச் செய்து நற்பண்புகளையும் அதற்கான நன்னடத்தைகளையும் கடைப்பிடிப்பதற்கு தெய்வ சம்பத் எனப்படுகிறது. தீய பழக்கங்களும் குணங்களும் அசுரர்களுக்கு உரியது. அந்த அசுர சம்பத்துகளை நாம் களைய வேண்டும். இவைகளைப் பற்றிப் பேசுகிறது இந்த அத்யாயம். “அர்ஜுனா!  இந்த உலகத்தில் உயிரினங்கள் தெய்வத் தன்மை மற்றும் அசுரத் தன்மை என்ற இருவிதமாக பிரிக்கப்படுள்ளன. இதில் தெய்வப்பண்பு உடையவர்களின் லக்ஷணங்களைக் கூறுகிறேன் கேள்.  பயமின்மை, மனத்தின் நான்கு நிலைகளான அந்தகரணத்தில் சுத்தி, ஞானயோகத்தில் எப்போதும் நிலைபெற்றிருத்தல், தாராளமாகத் தானம் செய்தல், மனதை அடக்குதல், யக்ஞாதி கர்மங்களை […]