வீடியோ17 Videos

டிவியை அடித்து நொறுக்கிய கமல் -அவரே வெளியிட்ட வீடியோ கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழிதோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா? இல்ல நம்ப உரிமைக்காக போராடும்போது நம்பள அடிச்சி துறத்தினார்களே அவங்களுக்கா? நலத்திட்டம் என்ற பெயரில் நிலத்தையே நாசம் செய்து விவசாயிகளை அம்மணமாக்கி நாட்டை தலைகுணிய வைத்தார்களே அவங்களுக்கா? இல்ல கார்ப்பரேட் கைக்கூலியாக மாறி பணத்திற்காக நம்ப மக்களையே சுட்டுக் கொலை செய்தார்களே அவர்களுக்கா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? நீ என்னடா சொல்றது. எங்களுக்கு தெரியும். எங்க அப்பா, அம்மா யாருக்கு ஓட்டு போட சொல்றாங்களோ அவங்களுக்குதான் ஓட்டு போடுவோம் அப்படின்னு நீங்க சொல்றது கேட்கிறது. சரிதான், அம்மா அப்பா சொல்றபடி கேட்கணும். ஆனால் எந்த அம்மா அப்பா சொல்றத கேட்கணும்னு நான் சொல்றேன்

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் டிவியை உடைத்து விட்டு பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழிதோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா? இல்ல நம்ம உரிமைக்காக போராடும்போது நம்பள அடிச்சி துரத்தினார்களே, அவங்களுக்கா? நலத்திட்டம் என்ற பெயரில் நிலத்தையே நாசம் செய்து விவசாயிகளை அம்மணமாக்கி நாட்டைத் தலைகுணிய வைத்தார்களே அவங்களுக்கா? […]

தனது புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்: அபிநந்தன் தாமதமாகி இந்திய எல்லையை அடைய வரக் காரணமென்ன?

அபிநந்தன் இந்திய எல்லைக்குள் வரும் நேரத்தை இருமுறை மாற்றி அமைத்தது பாகிஸ்தான். அவர் இந்திய எல்லையை அடைந்தவுடன் பாகிஸ்தான் தனது புத்தியைக் காட்டியது. அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசுவது போன்ற ஒரு  வீடியோவை, அவர் இந்திய எல்லையை அடைந்தவுடன் அனைத்து மீடியாக்களுக்கும் கொடுத்து வெளியிடச் செய்துள்ளது இம்ரான்கானின் அரசு. 1+

அபிநந்தன் பெற்றோர்க்குக் கிடைத்த மரியாதையும் வாழ்த்துகளும்; விமானத்தில் நடந்த காட்சிகளைப் பாருங்க..

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வரவேற்க அவரது பெற்றோர் இன்று இந்திய எல்லைப்பகுதியான வாகாவிற்கு செல்கின்றனர். அவரது பெற்றோர் விமானத்தில் நுழைந்தவுடன் கைகளைத் தட்டியும், எழுந்து நின்றும் மக்கள் மரியாதையும் வாழ்த்தையும் பகிர்ந்தனர். அதற்கான வீடியோ :   2+

உலக அரங்கை அதிர வைத்த தமிழ் சிறுவன் லிடியன்; என்ன வேகமாக பியானோ வாசிக்கிறான் பாருங்க…

அமெரிக்காவில்  ‘தி வேர்ல்ட் பெஸ்ட்’ என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவனும் கலந்து கொண்டான். இந்த சிறுவன் 1900ம் ஆண்டு வெளிவந்த பிளைட் ஆப் தி பம்பிள்பி (Flight of the bumblebee) என்ற இசையை பியானோவில் வாசிக்கத் தொடங்கினார். ஒட்டு மொத்த அரங்கையும் தனது அதிவேக பியானோ வாசிப்பின் மூலம் கவனத்தையும் பாராட்டையும் பெற்றான். பியானோ இசைக்கருவியை வேகமாக வாசித்து […]

இஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன்

இன்றுசிம்வுவின் தம்பி குறளரசன் பெற்றோர்கள் டி.ராஜேந்தர் -உஷா ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாமிய மதக் குருக்கள் ஓத, இஸ்லாம் மதத்திற்கு மாறினார். டி.ராஜேந்தரின் மூத்த மகன் சிலம்பரசன், தீவிர சிவ பக்தன் ஆவார். ராஜேந்தரும், உஷாவும் இந்து மத நம்பிக்கையுள்ளவர்கள். அதேநேரம், மகள் இலக்கியா கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளார். இதனிடையேதான், குறளரசன், இஸ்லாம் மதத்தை இன்று தழுவினார். அதற்கான வீடியோ இதோ:     0

புல்வாமா சி.பி.ஆர்.எப் வாகனத்தின் மீது தற்கொலை படைத் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் கார் மோதிய சிசிடிவி வீடியோ

காஷ்மீர் புல்வாமாவில்  சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறி வைத்து, ஜெய்ஷ் இ முகமது  என்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள் அமைப்பு நடத்திய தாக்குதலில் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காஷ்மீரில், ஸ்ரீநகர் நோக்கி 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் வீரர்கள் தங்கள் விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிச்சேர சென்று கொண்டிருந்தனர். இந்நேரத்தில் ஒரு பயங்கரவாதி வெடிகுண்டுகாரை ஓட்டி வந்துள்ளான். இந்த கார் வீரர்கள் சென்ற கான்வாயில் புகுந்தது. காரை மோதியதும் […]

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் 31 – வீடியோவையும் பார்க்கலாம் வாங்க

ஜி-சாட் 31 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.இது இந்தியாவின்  தகவல் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும். ஏற்கனவே இது பிப்ரவரி 6 ஆம் தேதி ஏவப்படுகிறது என்ற செய்தியை நாமும் வெளியிட்டு இருந்தோம். பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியான்-5 என்ற ராக்கெட் மூலம் இது விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு ஏவப்பட்ட ஏரியான்-5 ல் இருந்து ஜிசாட்31 மிகச்சரியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் தொலைக்காட்சி சேவைகளை பெற உதவியாக இருக்கும்   இதுகுறித்து ஐஎஸ் ஆர் […]

இந்து வைதீக திருமண சடங்குகள் மந்திரங்கள் கேவலமானவையா?- ஸ்டாலினுக்கு நெற்றியடி பதில்

இந்து வைதீக திருமண சடங்குகள் மந்திரங்கள் கேவலமானவையா?- ஸ்டாலினுக்கு நெற்றியடி பதில் தந்துள்ளார் ஜடாயு. அவரது பேச்சில் சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகியின் திருமணம் எப்படி நடந்துள்ளது, திருமணத்தின் போது சொல்லப்படும் மந்திரங்களுக்கான பொருள் என்ன என்பதைத் தெளிவாக விளக்குகிறார். உணர்வுள்ள இந்துக்கள் இது போன்ற தலைவர்களை ஆதரிக்கக்கூடாது , அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் போன்ற காட்டமாகவும் அறிவுறுத்தி உள்ளார். 3+

கருணாநிதி முன்னிலையில் சொல்லப்படும் மந்திரங்கள் -வீடியோ ; என்ன சொல்வார் ஸ்டாலின்?

கருணாநிதி முன்னிலையில் சொல்லப்படும் மந்திரங்கள் ; என்ன சொல்வார் ஸ்டாலின்? இந்து மந்திரங்களைக் கேவலமானவை என்று ஸ்டாலின் சொல்கிறார் என்றால் அவரின் தந்தை முன்னால் சொல்லப்படும் மந்திரங்களோ, அவரது குடும்பத்தினர் செல்லும் கோயில்களில் சொல்லப்படும் மந்திரங்கள் அனைத்தையும் தனி நபர் விருப்பம் என்று சொல்லிக்கொண்டே, இதர இந்து சமய வழிபாட்டைப் பின்பற்றுபவர்களை முட்டாளாகவும், பகுத்தறிவு இல்லாதவர்கள் போலவும் போலியாக சித்தரிப்பது ஏன்? என்ற கேள்வியை பலரும் சமூக வலைத் தளங்களில் வைத்து வருகின்றனர். அரசியல் தலைவர்களின் இரட்டை […]