தமிழ்தேசிய முகமூடிக்குப் பின்னால்
தமிழ் தேசியம்.இன்று பிரிவினைவாதிகள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம்! நாம் தமிழர் கட்சி என்ற அரசியல் கட்சியை ஒரு ஒப்பேறாத சினிமா இயக்குனரை வைச்சு ஓட்டி இன்றைக்கு 4% ஆதரவை இளைஞர்களை மூளை சலவை செய்து வாங்க முடிகிறதென்றால் இந்த சக்திகளுக்கு எவ்வளவு பலம் இருக்கும் என்று நீங்களே யோசிச்சுக்கோங்க!
ஆனால் நீங்க நாம் தமிழர் கட்சியின் saturation point அது தான் அதுக்கு மேல போகாது என்று சொல்லலாம் ஆனால் மறந்து விடாதீர்கள் அந்த 4% பேரும் திராவிடத்தின் மேல் வெறுப்பில் இருந்த அப்பாவி இளைஞர்கள் அவர்கள் இந்துத்துவா கருத்தியல் பக்கம் வந்திருக்க வேண்டியவர்கள் ஆனால் சரியான வழிகாட்டல் இல்லாமல் இருப்பவர்கள்
அவர்கள் இன்று தமிழன் இந்து இல்லை என்று எவ்வித வரலாற்று உணர்வும் இல்லாமல் பேசுவது சர்ச்களின் பலத்தால் தான்.முன்னோர் வழிபாடு செய்பவனே தமிழன் எனில் கிறிஸ்தவ, முஸ்லிம்கள் எப்படி தமிழர்கள் ஆவார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடுகிறது தமிழ் தேசியம்
பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை விட இது அபாயகரமானது! திமுக ஆட்சியை பிடிக்க செய்து கொண்ட சமரசங்களால் இந்துக்களை பெருமளவில் கிறிஸ்தவர்களாக மாற்ற முடியவில்லை! அவர்களை கோவில்களை நோக்கி செல்வதை தடுக்க முடியவில்லை என்பதை உணர்ந்து அச்சமரசங்கள் எதுவும் செய்யாமல் தாங்கள் சொல்வதை கேட்கும் பொம்மையாக சீமானை வைத்திருக்கின்றன இப்பிரிவினை சக்திகள்! இவர்கள் நம் கலாசாரத்தை திருடுகிறார்கள்!திரித்து பேசி மக்களை குழப்ப நினைக்கிறார்கள். முளையிலேயே களையப்பட வேண்டியவர்கள் இவர்கள்
சீமான் நினைத்திருந்தால் இன்று இரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்து சில சீட்டுகள் வாங்கியிருக்க முடியும் அதை செய்வதால் மிஷனரிகளுக்கு கிடைக்க போகும் பலன் என்ன? அவர்கள் எதிர்பார்ப்பது வேறு-ஒன்று இந்தியா கிறஸ்தவமயமாக்கப்பட வேண்டும் அல்லது அழிய வேண்டும்
இரண்டையுமே நாம் முறியடிக்க வேண்டும்!ஆனால் இவர்கள் முன்வைப்பதே போலி தமிழ் தேசியம் தான்!உண்மையான தமிழ் தேசியவாதிகள் இந்துத்துவத்தை போல சாதியை நிராகரிப்பதில்லை அதை அடையாளமாக ஏற்றுக் கொள்ளவே செய்கிறது.இரண்டுமே ஒரு ஒளிமயமான பிறரால் பிடுங்கப்பட்ட கடந்த காலத்தை வைத்து அரசியல் செய்கின்றன.இரண்டுமே கொள்கை சார்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்டவை திராவிடம் போல காசுக்காக இருக்கும் கூட்டம் அல்ல அவை.
இந்துத்துவர்களுக்கு இருக்கும் உண்மையை பேசும் துணிச்சல் இவர்களுக்கு இல்லை! வீட்டில் தமிழ் பேசும் பிராமணனை தமிழனாக ஏற்றுக் கொள்வேன் ஆனால் உருது பேசும் முஸ்லிம்களின் தமிழர்கள் அல்ல என்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசி பிறகு வாங்கிக் கட்டிக் கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்
அந்தக் கருத்தை அதன் பின் அவர் பேசாததலிருந்தே தெரிகிறது சர்ச்களுக்கு அது பிடிக்கவில்லை என!திராவிடத்தை இயக்கும் லாபிகள் தான் இவற்றையும் இயக்குகின்றன திமுக மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை ஆனால் தமிழ் நாட்டில் எதிர்க் கட்சியும் ஆளுங்கட்சியும் தங்கள் ஆளுங்களாகவே இருக்க வேண்டும் என்பது தான் அவர்கள் யோசனை
அதை நோக்கியே தெளிவாக அவர்கள் நகருகிரார்தள்
தமிழர்கள் இனியும் தங்கள் கலாச்சார-மத அடையாளங்களை இழந்து நிற்க கூடாது
மீட்டெடுத்து நாம் யாரென இவர்களுக்கு காண்பிக்க வேண்டும்!இல்லையேல் அடுத்த 50 வருடங்களை நாம் தற்போதே இழந்திருப்போம்
எண்ணமும் எழுதும்
ராகுல் விவேக்