சினிமா110 Videos

காப்பான் – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா

தீவிரமான கமர்ஷியல் படங்களை எடுக்க நாம் இன்னும் பழகவில்லை. உண்மையில் பழக விரும்பவில்லை. வணிகத் திரைப்படங்கள் என்பதாலேயே என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற எண்ணம் கிட்டத்தட்ட எல்லா இயக்குநர்களுக்கும் இருக்கிறது. ஒரு காட்சியை எப்படி எடுத்தாலும் அது ஒரு ஹீரோயிஸப் படமென்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று இயக்குநர்கள் நம்புகிறார்கள். நம் வரலாறும் அப்படித்தான் இருக்கிறது. இதனால் வணிகத் திரைப்படங்கள் ஏனோதானோவென்று எடுக்கப்படுகின்றன. சமீபத்தைய ட்ரெண்டாக, தற்போது நடந்துகொண்டிருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையை, அதன் ஆழம் புரிதல் எதுவுமின்றி […]

மகாமுனி – திரைப்பார்வை – ஹரன் பிரசன்னா

Spoilers ahead. ‘மௌன குரு’ எடுத்த இயக்குநரின் படம் என்பதாலேயே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. மௌன குரு எதிர்பார்ப்பே இல்லாமல் வந்த நல்ல படம். மகாமுனிக்கு இதுவே ஒரு பெரிய அழுத்தத்தைத் தந்திருக்கும். ஒரு இயக்குநரின் இரண்டாவது படம் (என்று நினைக்கிறேன்) என்பது கத்தி மேல் நடப்பது.மிகக் கவனமாக இதைச் செய்ய நினைத்திருக்கிறார் சாந்தகுமார். பட சுவரொட்டிகளிலெல்லாம் உலகத் தரத்தில் ஒரு திரைப்படம் என்றெல்லாம் போட்டிருந்தார்கள். எனக்கு கமலின் சூரசம்ஹாரம் நினைவுக்கு வந்தது! நல்லவேளை, இது அந்த […]

மிர்ஸாப்பூர் – அமேசான் ப்ரைம் தொடர் எபிசோட் 1

‘வெள்ளை ராஜா’ என்றொரு தொடர் தமிழில் அமேஸான் ப்ரைம் தயாரிப்பில் வந்தது. அதைப் பார்த்தபோதே எழுதினேன், இது போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கும் சென்ஸார் வைப்பது நல்லது என்று. இப்போது மிர்ஸாப்பூர் பார்த்தேன். வெள்ளை ராஜா எல்லாம் இதற்கு முன் ஒன்றுமே அல்ல! அதீத வன்முறை, அதாவது பதற்றத்துடன் கண்ணை மூட வைக்கும் வன்முறை, அதீதமான உறவுக் காட்சிகள், மிக ஆபாசமான வார்த்தைப் பிரயோகங்கள் எனக் கலங்கடித்துவிட்டார்கள். இது ‘வெள்ளை ராஜா’அளவுக்கு மோசமில்லை. ஆஹா ஓஹோவுமில்லை. ஆனால் எப்படியோ […]

ராட்சசி திரைப்படப் பார்வை – ஹரன் பிரசன்னா

ராட்சசி என்றொரு படம் பார்த்தேன். இனி தமிழ்த் திரைப்படங்களை அதன் கலைத்தன்மைக்காகப் பார்க்கத் தேவையில்லை என்று முடிவுக்கு எப்போதே வந்துவிட்டேன். அதன் அரசியல் பின்னணியும் சொல்ல வரும் அரசியல் கருத்துகளும் மட்டுமே முக்கியம் என்ற இடத்தை நோக்கி என்னைத் தள்ளிவிட்டன (பொலிடிகல் கரெக்ட்நெஸ்: ஒரு சில படங்கள் நீங்கலாக) தமிழ்ப் படங்கள். ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் (பொ.க.: ஒரு சிலர் நீங்கலாக!) ஒரு மிகப்பெரிய மாய வலையில் சிக்குண்டுள்ளது. அதன் இன்னொரு வெளிக்காட்டல் ‘ராட்சசி.’ இப்படத்தில் ஜோதிகா […]

Pink Vs நேர்கொண்ட பார்வை – ஹரன் பிரசன்னா

(ஸ்பாய்லர்ஸ் அஹெட்) பின்க் திரைப்படத்தின் கருவைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். ஒரு பெண்ணின் சம்மதத்துடன் மட்டுமே உறவு கொள்ளவேண்டும். பார்க்க இது மிக எளிமையான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் பின்க் திரைப்படம் இதில் சில பல நிபந்தனைகளைச் சேர்த்துக்கொண்டே போகிறது. அது காதலியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் உறவு கூடாது என்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய், பாலியல் தொழிலாளி கை நீட்டி காசு வாங்கிவிட்டு பின்னர் வேண்டாம் […]

ஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா

சில படங்களுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் இருக்கும். அது என்னவென்றால், படத்தைப் பார்க்கப் போகும்போதே அப்படம் கேவலமாகத்தான் இருக்கும் என்று முடிவெடுத்துக் கொண்டேதான் செல்வோம். நாம் எதிர்பார்த்ததைவிட படம் கொஞ்சம் சுமாராக இருந்துவிட்டால்கூட அது ஒரு நல்ல படமோ என்ற மயக்கம் சிலருக்கு ஏற்பட்டுவிடும். இதை ஒட்டியே சில படங்களுக்கு மைனஸ் பாயிண்ட் உண்டு. அது என்னவென்றால், நாம் பார்த்த படம் நாம் எதிர்பார்த்ததை விட மிகக் கேவலமாக இருக்கும். ஏ1 திரைப்படம் இரண்டாம் வகையைச் சார்ந்தது. […]

ஹோட்டல் மும்பை – இளகிய மனத்துடையவர்களுக்கு அல்ல!

ஹோட்டல் மும்பை – இளகிய மனத்துடையவர்களுக்கு அல்ல! மொழி – ஆங்கிலம்; நேரம் – 120 நிமிடங்கள் தாஜ் ஹோட்டலில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலின் அடிப்படையில் அமைந்தது இந்த படம். தனது விருந்தினர்களை தனிப்பட்ட முறையில் அவர்களின் தேவைகளை அறிந்து பேணுவதில் பெயர் பெற்ற தாஜ் ஹோட்டலின் தன்மையை அழகாக சித்தரித்துள்ளனர் படத்தின் முதல் 10 நிமிடங்களில். மற்ற 110 நிமிடங்கள் முழுவதும் இரத்தம் இரத்தம் இரத்தம் மட்டுமே! படத்தை […]

தமிழில் கலைக்களஞ்சியம் தந்த அவினாசிலிங்கம் செட்டியார் பிறந்தநாள் – மே 5

எந்தவிதமான ஆர்ப்பாட்டமும், விளம்பரமும் இல்லாமல் தமிழுக்கு உண்மையாகவே தொண்டு புரிந்த பலர் உண்டு. அதில் முக்கியமானவர் திரு திருப்பூர் சுப்ரமணிய அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள். அன்றய கோவை மாவட்டத்தின் பகுதியாக விளங்கிய திருப்பூர் நகரின் செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர். திருப்பூர், கோவை மற்றும் சென்னையில் பயின்று சென்னை சட்டக்கல்லூரியில் படித்து, வழக்கறிஞராகப் பணியாற்றியவர். படிக்கும் காலத்திலேயே ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் ஆகியோரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, திருமணம் செய்துகொள்ளாமலேயே துறவி போன்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். அதே நேரத்தில் […]

தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ் – சினிமா விமர்சனம் – ஷங்கர் கைலாசநாதன்

தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ் – ஷங்கர் கைலாசநாதன், சிங்கப்பூர்  பிறந்த நாளை கொண்டாடும் அந்த பெண் பத்திரிகையாளரிடம் தொலைபேசியில் அழைத்து 5 கேள்விகளை கேட்டு விளையாடுகிறார் அந்த பெயர் தெரியா நபர். ஐந்தாவது கேள்வி, பொருத்தமாக அக்டோபர் 2 ஆம் தேதியின் சிறப்பு என்னவென்று கேட்கிறார், காந்தி ஜெயந்தி என்ற அவள் சற்று யோசித்து லால் பகதூர் சாஸ்திரி என்ற பெயரைக் கூறுகிறாள். அந்த நபர் அப்பத்திரிகையாளருக்கு கோப்புகள் சிலவற்றை பரிசாக தர அதைக் கொண்டு, சாஸ்திரியின் […]

சூப்பர் டீலக்ஸ்: உன்னதத்தை நோக்கி – ஹரன் பிரசன்னா

சூப்பர் டீலக்ஸ் – தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது திரைப்படம். முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம், வந்தபொழுது கவனிக்கப்படாமல், பிறகு தமிழின் முக்கியமான படம் என்ற தகுதியை அடைந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் இந்தத் திரைபடம், சந்தேகமே இல்லாமல் தமிழின் முக்கியமான மைல்கல்களுள் ஒன்று. உண்மையில் ஒரு தடவை மட்டுமே பார்த்துவிட்டு இப்படத்துக்கு விமர்சனம் எழுதுவது நியாயமாகாது. முக்கியமான குறிப்பு, படம் வயது வந்தவர்களுக்கான திரைப்படம். நிஜமாகவே வயதுக்கு வந்த திரைப்படம். எனவே குழந்தைகளுடன் செல்லாதீர்கள். […]