பொருளாதாரம்
Trending

க்ரிப்டோ கரன்ஸி பாகம்-1

க்ரிப்டோ கரன்ஸிகளுக்கான மூல காரணம் என்ன..? ஏன் இவை தேவை..? இதை இந்த பாகத்தில் பார்க்கலாம்

க்ரிப்டோ என்றால் மறைவான, அல்லது இரகசியமான என்பதாகப்படும். ரகஸியமான கிருத்துவர்கள், நமக்கு தெரியும். அதைப்போலில்லாமல், இந்த கரன்ஸி கண்ணுக்கே தெரியாது. இந்த க்ரன்ஸிகள் virtual. இப்படியான கரன்ஸிகளுக்கான மூல காரணம் என்ன..? ஏன் இவை தேவை..? இதை இந்த பாகத்தில் பார்க்கலாம்.

நம்முடைய காசுகளின் முன்னோடி, பண்டமாற்று. அதிலிருந்து, காகித காசு வர பல நூறு ஆண்டுகளானது. நடுவில், வெள்ளி, தங்கம், நிக்கல், அலுமினியம், செம்பு என்று பல நாணயங்கள். இப்படியான நாணயங்களை வெளி விடுவது, ராஜாக்களும், நவீன அரசுகளுமாய் இருந்தது.

இந்த காசுகள் அனைத்தையும் முடிந்து வைத்தால், எந்த பயனும் இல்லை. அதை, சுழற்சியில் வைத்திருக்க வேண்டும். பிசாசு போல் சுற்றினால்தான் அது, வருமானத்தை ஈட்டும். இதை உபயோகப்படுத்த, பயனுள்ளவர்களுக்கு, கடன் தந்து, பணத்தை பெருக்கலாம். அல்லது சில சொத்துக்களை வாங்கி, அதன் மதிப்பு ஏறும்போது, பலனடையலாம், முதல் போட்டு பிசினஸ் ஆரம்பித்து பயனடையலாம்.

இப்படி கடன் தருவது முதல், பிசினஸில் பணம் போடுவது வரை மிகவும் சிக்கலான ஒன்று. அதனால், கடன் தருவதற்கு சில திறமைகள் உண்டு. அதை வங்கிகள் உள்வாங்கி, அதில் டெக்னிகலாக முன்னேறியது. அப்படி திறமையான வங்கிகள் நாளடைவில், பலவிதமான பிசினஸ்களை செய்தது. அமெரிக்க வங்கிகள் இதில் முன்னோடி. 2008 இல், வீட்டு கடன் வாரி வழங்கியது. பார் கேர்ள் 4 வீடுகளும், தெருவில் போகும்போது உத்துப்பாத்த டூரிஸ்டை பிடித்துக்கூட வீடு வாங்க வைக்கும் அளவிற்கு, மார்ட்கேஜ் பிசினஸ் கொடிகட்டி பறந்தது. கடன் வாங்க உங்களுக்கு ரேட்டிங் வேண்டும். இந்தியாவை ரேட்டிங்கில் இங்குதான் வைப்போம் எனும் ஏஜன்ஸிகள், தெருவில் போவோர் வருவோர்க்கெல்லாம், 5 ஸ்டார் ரேட்டிங் தந்தது. வீட்டு விலைகள் விண்ணைத்தொட்டு நின்றது.

இதைப்பார்த்த ஸ்மார்ட்டான சில முதலீட்டாளர்கள், இந்த மார்கெட் விழப்போகிறது என்று JP chase முதல் பல வங்கிகளில் பெட் கட்டினார்கள். இவர்கள் ப்ரீமியம் கட்டினார்கள். வங்கிகள் சிரித்துக்கொண்டு இந்த பணத்தையும் முழுங்கியது. இப்படி பெட் கட்டியவர்கள் ஜெயிப்பார்கள் என்று சிலர் இந்த க்ரெடிட் ஸ்வாப்பின் மீது சிலர் பெட் கட்டினார்கள். மெல்ல..வீட்டு கடன்கள் வாங்குவது குறைந்தது. பிஸினஸ் குறைந்தது அமெரிக்காவில். பல பிசினஸ் விழுந்தது. ஸ்டாக் மார்கெட் சரிந்தது. பலரும் வேலையிழந்தனர். வீட்டு லோனை கட்ட முடியாமல் சாவியை வங்கிக்கு அனுப்பினர்.

லெஹமான் ப்ரதரஸ் போன்ற நிறுவனங்கள் விழுந்தது. தாறுமாறாய் செயற்கையாய் ஏறிய வீட்டு விலைகள் தலைகீழாய் சரிந்தது. வேலையில்லாத அல்லது இழந்த காரணத்தால், வீட்டு லோன்கள் வாராக்கடன்கள் ஆனது. வங்கிகள், இப்படியான கடன்களையும், நல்ல கடன்களோடு சேர்த்து விற்றது. சின்தெடிக் ஸ்வாப் என்று சொல்லப்படும் தில்லாலங்கடிகள் நிறைவேறியது. எல்லாம் ஒரு தினத்தில் சீட்டுக்கட்டாய் விழ, பெரிய பெரிய வங்கிகள் சரிந்தது. அமெரிக்கா திக்கு முக்காடியது. 2008 ஐ எவரும் மறக்க மடியாது. முடிந்தது அமெரிக்கா என்கிற அளவிற்கு பல பணக்கார ஆசாமிகள் தெருவிற்கு வந்தார்கள்.

இப்படியான வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்தார்கள். அரசு கோடி கோடியாக சம்பாதிக்கும் வங்கிக்கு உதவியது. ஏழை கடன்தாரர்களை, அரசானது பெரிதாய் கண்டுகொள்ளாதபோது, அரசின் மீது, மக்களின் கோபம் திரும்பியது. அரசு, பணத்தை கணக்கில்லாமல் அச்சடித்து, கடன் வாங்கி, வங்கிகளுக்கு உதவியதில், அதன் மதிப்பும் கீழிறங்க ஆரம்பித்ததில்.. டாலர் மீதான நம்பிக்கையையும் இழந்தார்கள். நன்றி ஓபாமா.


இந்த நேரத்தில், இப்படி அரசின் பிடியில் இருந்த டாலர், தனியார் வங்கிகள் நாசமான நேரத்தில்தான், ஒரு வலுவான சிந்தனை இதை தாண்டி பிறந்தது. யாருக்கு என்றால், சில லிபரல்கள், சில விஜிலான்டிஸ் போன்றவர்களுக்கு.. அப்படியானதுதான் DeFI அல்லது Decentralised Finance எனப்படும் தியரியும், peer to peer network என்கிற கான்செப்டும், Block chain என்கிற டெக்னாலஜியும் உருவாகியது.

இதெல்லாம் என்ன என்று அடுத்த பாகத்தில்.

(Visited 84 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close