இந்தியா368 Videos

பட்ஜெட் இந்தியா 2020: லைவ் அப்டேட்ஸ் – திருக்குறளையும் ஆத்திச் சூடியையும் மேற்கோள்காட்டி பட்ஜெட் உரை

மத்திய அரசின் கடன் 52.2%(2014) லிருந்து 48.7% (March 2019)ஆகக் குறைந்துள்ளது. உலகின் 5 வது பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. 20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் அமைத்துத் தரப்படும். கிராமப் பெண்கள் முன்னேற்றத்திற்கு தான்ய லட்சுமி திட்டம் அமல்படுத்தப்படுகிறது. விவசாயக் கடனுக்காக 15 லட்சம் கோடிவரை ஒதுக்கப்படும். 2022-23 க்குள்ளாக மீன்கள் உற்பத்தி 200 லட்சம் டன்கள் உற்பத்தி செய்ய வழிவகை செய்யப்படும், சுகாதாரம் பேண “ஜல் ஜீவன் திட்டம்” மற்றும் “தூய்மை இந்தியா […]

தொலைவில் ஓர் அபயக் குரல் – 1

சொந்த நாட்டிலேயே தங்களது வீடுகள், வியாபாரங்களை விட்டுவிட்டு அகதிகளாய் வேறு மாநிலங்களுக்கு சென்றவர்களைப் பற்றி நமது மீடியாக்கள் பேசி உள்ளனரா ? தங்களது இனத்தை அழிக்க முயன்றவர்களிடம் இருந்து தப்பி அண்டை மாநிலத்திற்கு சென்று அங்கே அகதிகள் முகாமில் வாழும் பழங்குடியினரைப் பற்றி எந்த செய்தித்தாளாவது சிறப்புக் கட்டுரை வெளியிட்டார்களா ?

இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி

கொல்கத்தாவில் வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதியதொரு மைல்கல். டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்களை அதிகம் ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஐசிசி பகலிரவு டெஸ்ட் போட்டிகளை துவங்கியது. இந்தியா மற்றும் பங்களாதேஷை தவிர்த்து ஏனைய அணைத்து அணிகளுமே குறைந்தபட்சம் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியாவது ஆடியுள்ளன (அயர்லாண்ட் / ஆப்கானிஸ்தான் அணிகள் நீங்கலாக) இந்நிலையில் பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்றவுடன் திரு. சவுரவ் கங்குலியின் முயற்சியினால் இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையேயான […]

அணி மாறுகிறார் அஸ்வின்

ஐபிஎல் டி20 டோர்னமெண்ட்டில் அஸ்வின் கிங்ஸ் லெவன் அணிக்காக கடந்த இரு வருடங்களாக ஆடி வருகிறார். அதன் கேப்டனும் அவர்தான். ஆனால் கேப்டனாக அவர் தனது முழுத் திறனை வெளியிடவில்லை என அணி நிர்வாகம் கருதுகிறது. அணி நிர்வாகத்தையும் குறை சொல்ல இயலாது. இத்தனை வருட ஆட்டங்களில் அவர்கள் தகுதி சுற்றுக்கு தேர்ச்சி பெற்றதும் இல்லை கோப்பையை வென்றதும் இல்லை. என்றுமே வெல்லும் அணியைதான் அனைவரும் விரும்புவர். 2018ல் அவர் கேப்டனாகிய வருடம் அனைத்துப் போட்டிகளின் இறுதியில் […]

பரமவீர் சக்ரா விருது பெற்ற அருண் கேத்ரபால் பிறந்தநாள் – அக்டோபர் 14

2001ஆம் ஆண்டு எண்பது வயதான பாரத ராணுவ தளபதி  பிரிகேடியர் எம் எல் கேத்ரபால் பாகிஸ்தானில் உள்ள தனது பூர்விக இருப்பிடத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சர்கோதா நகருக்கு பயணித்தார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய பிரிகேடியர்மொஹம்மத் நாசர் என்ற ராணுவ தளபதி லாகூர் விமானநிலையத்தில் நேரில் வரவேற்று தனது வீட்டில் தங்க வைத்தார். அங்கிருந்து சர்கோதா நகருக்கு அவரை அனுப்பி வைத்து அவர் வாழ்ந்த இடங்களை பார்க்க நாசர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தார். மீண்டும் […]

நம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை – ஹரன் பிரசன்னா

நம்பி நாராயணின் ‘Ready to Fire – How India and I survived the ISRO spy case’ புத்தகம் வாசித்தேன். நம்பி நாராயணன் இஸ்ரோவின் விஞ்ஞானி. அப்துல் கலாமுடன் பணிபுரிந்தவர். பாகிஸ்தானுக்கு இந்திய விண்வெளி ரகசியங்களை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கேரள காங்கிரஸ் அரசால் 1994ல் கைது செய்யப்படுகிறார். பின்னர் சிபிஐ இதை விசாரிக்கிறது. 1996ல் இக்குற்றச்சாட்டில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்று சொல்லி சிபிஐ இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறது. 1998ல் உச்சநீதிமன்றம் இவ்வழக்கைத் […]

இஸ்ரோவின் சாதனைகளும் சோதனைகளும்

20 வருடங்களுக்கு முன்பு வரை மழை, புயல் என்பதே வெள்ளம் வந்து சூறாவளி வந்து எல்லாவற்றையும் நிரப்பி கரைபுரண்டு ஓடிய பின்பு தான் தெரியும். அப்புறம் முதலமைச்சர் ஹெலிகாப்டரிலே பார்வையிடுவார், மத்திய அமைச்சர்கள், பிரதமர் எல்லோரும் வருவார்கள். இன்றைக்கோ இன்று இவ்வளவு மழை பெய்யும் என வானிலை அறிக்கை மையம் சொல்கிறது. புயல் வந்தால் அதன் ஒவ்வொரு அசைவையும் நொடிக்கு நொடி கண்கானித்து இந்த இடம் வழியாக புயல் வரும் காற்று இவ்வளவு வேகத்திலே வீசும் என […]

கணினி உலகின் கதாநாயகன் – இன்போசிஸ் நாராயணமூர்த்தி – ஆகஸ்ட் 20

கல்வியும், உழைப்பும் ஒரு எளிய குடும்பத்தைச் சார்ந்த ஒருவனை எப்படி முன்னேற்றும் என்பதையும், அதன் பலன் எப்படி நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் என்பதையும், எப்படி பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் என்பதையும், எல்லா தடைகளையும் தாண்டி எப்படி பாரதம் உலகின் முக்கியமான சக்தியாக விளங்க முடியும் என்பதை நமது கண்களுக்கு முன்னே காட்டிய வரலாறு திரு நாராயணமூர்த்தி அவர்களின் வரலாறு.  கர்நாடக மாநிலத்தில் ஒரு எளிய மத்தியதர குடும்பத்தில் 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் […]

தமிழ்தேசிய முகமூடிக்குப் பின்னால்

தமிழ் தேசியம்.இன்று பிரிவினைவாதிகள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம்! நாம் தமிழர் கட்சி என்ற அரசியல் கட்சியை ஒரு ஒப்பேறாத சினிமா இயக்குனரை வைச்சு ஓட்டி இன்றைக்கு 4% ஆதரவை இளைஞர்களை மூளை சலவை செய்து வாங்க முடிகிறதென்றால் இந்த சக்திகளுக்கு எவ்வளவு பலம் இருக்கும் என்று நீங்களே யோசிச்சுக்கோங்க! ஆனால் நீங்க நாம் தமிழர் கட்சியின் saturation point அது தான் அதுக்கு மேல போகாது என்று சொல்லலாம் ஆனால் மறந்து விடாதீர்கள் அந்த 4% பேரும் […]

உளவுத்துரைகளைக் காட்டிக்கொடுத்த அன்சாரி துரை – 1

பிரகாஷ் ராமசாமி அவர்களின் முகநூல் பதிவு. ரா உளவுத்துறை. ============ முதல்ல உளவுத்துறை ஆபீஸர்கள் எல்லோரும் நம்ம வடிவேலு.. ஒசாமாட்ட பேசுறியா அதிகாரி மாதிரி இருக்க மாட்டார்கள். வத்தலாக அல்லது.. மிகவும் சாதாரண மனிதர்களாகத்தான் இருப்பார்கள். போலீஸ் கட், நல்ல பைசப்ஸ்.. இப்படி இருந்தா சாதாரண ஆசாமிக்கும், அசாதாரணமான சந்தேகம் வரும். இந்த ஹமீத் அன்சாரி பற்றி முதன் முதல்ல.. சொன்னது R K யாதவ் என்கிற RAW அதிகாரி. அவர் பொஸ்தகத்துல நிறைய மேட்டர் இருக்கு. […]