தொழில்நுட்பம்பொருளாதாரம்

கிரிப்டோ கரன்சி-பாகம் 3

இப்படியான க்ரிப்டோ கரன்சிக்கான தேவை வந்த போது, இதை எப்படி அமல் படுத்துவது? இதை ஒரு நெட்ஒர்க் மூலமாகத்தான் , இதை அனுப்ப பெற முடியும். அப்படியான ஒரு நெட்ஒர்க்கை சடோஷி நாகமோடோ எனும் ஒரு ஆசாமி கண்டுபிடித்து அதை 2009 ஆம் வருஷம் ஒரு ஓபன் சௌர்ஸ் டெக் மூலம் அறிமுகப்படுத்தினார். இந்த ஆள் நிஜமான ஆளா இல்லை, பேக் ஐடியா இன்று இதுவரை தெரியவில்லை. சரி, விஷயத்துக்கு போவோம்.

ஜனவரி 12 2009 இல் சடோஷி முதலில் ஹால் ஃபின்னே என்பவருக்கு சுமார் 20 பிட் காயினை அனுப்பினார். ஹால் ஃபின்னே ஒரு க்ரிப்ட்டோக்ராபர். அதாவது அவர் ஒரு ரகசிய எழுத்துக்கலை வல்லுநர். பிட்காயின் என்பதே ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் தானே அதுவும் ரகசியமான எழுத்துக்கலை கொண்டு சங்கேதமாய் இரு நபர்களுக்குள் செல்வத்தை பரிமாறிக்கொள்ளும் கம்ப்யூட்டர் கோடு தானே. இன்றைய தேதியில் சடோஷி என்கிற ஆசாமியின் வலெட்டில் சுமார் 73 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயியனை வைத்துள்ளார். உலகில் 13 ஆவது பணக்கார ஆசாமி ஆகிவிட்டார்.

பிளாக்செயின் என்றால் என்ன?

பிட்காயினை ஒரு நெட்ஒர்க் மூலமாய் கொண்டு சென்று பிளாக்செயின் அனுப்பிய வாங்கிய விபரங்களை டீ சென்ட்ரலைஸ் லெட்ஜ்ர் என்கிற டெக்னோலஜியால் இதை பிளாக்குகளுள் அடைப்பது தான். ஒவ்வொரு பிளாக்கும் தொடர்புடையது. அதாவது, பழைய பிளாக் ஒரு எம்பி டாட்டா வரை தாங்கும். அது முடிந்தபின் அடுத்த பிளாக் ஆரம்பிக்கும். இது சங்கிலி போல் தொடர்வதால் பிளாக் செயின் என்று சொல்லப்படுகிறது.

டீ சென்ட்ரலைஸ் லெட்ஜ்ர் என்றால் என்ன?

இந்த பிட்காயின் நெட்ஒர்க்கில் இருக்கும் அனைத்து கம்ப்யுட்டர்களும் சமம். அவைகளை அதனால் தான் பியர் டு பியர் நெட்ஒர்க் என்கிறோம். கம்ப்யூட்டர்கள் ஒவ்வொரு பிட் காயின் பரிவர்தனையையும் ஒவ்வொன்றாய் ஆராய்ந்து அதை இந்த பிளாக்கில் ஏற்றுகிறது. இதை நெட்ஒர்க்கில் இருக்கும் எத்தனை கம்ப்யூட்டர்களும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதனால் இந்த லெட்ஜ்ர் டீசென்ட்ரலைஸ்ட் அதாவது நீங்களும் நானும் ஒரே டேட்டாவை தரவிறக்கம் செய்து பார்த்துக்கொள்ளலாம்.

No photo description available.

ஹாஷ்:

ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பிட்காயின் வாங்குபவர்கள் அல்லது விற்பவர்களின் பிரைவேட் மற்றும் பப்ளிக் சாவி தேவை. இந்த பரிவர்த்தனை மற்றும் இந்த பரிவர்த்தனை ஒரு சங்கேத ஹாஷ் என்கிற ஒன்றை உருவாக்குகிறது. இதை நெட்ஒர்க்கில் இருக்கும் கம்ப்யூட்டர்கள் இதற்கான ஒரே விடையை கண்டு பிடித்து உறுதி செய்கிறது. முதலில் உறுதி செய்யும் கம்ப்யூட்டருக்கு ஒரு பிட்காயின் சம்பளமாக தரப்படுகிறது. பலரும் இந்த பரிவர்த்தனையை உறுதி செய்வார்கள். இதைத்தான் ப்ரூப் ஆப் வர்க் என்கிறார்கள்.

மைனிங்:

முதலில் பிட் காயின் வாங்க போட்டி போட்டுக்கொண்டு, பல ஆசாமிகள் ஆயிரம் கம்ப்யூட்டர்களுடன் இதை தொழிலாகவே செய்கிறார்கள். அவர்களின் குறிக்கோள் இந்த ஹாஷ் கண்டுபிடித்து பிட்காயின் பெற்றுக்கொள்வது. இதற்கு மைனிங் என்கிறார்கள். அதாவது தோண்டி பிட்காயினை எடுப்பது. இப்படி பலரும் உறுதிப்படுத்திய பின், சன்மானம் வழங்கிய பின் இந்த பரிவர்த்தனை பிளாக்கில் ஏற்றப்படுகிறது. இதை மாற்றவே முடியாது. அதனால் இதை immutable மாற்றவே முடியாத ஒன்று என்கிறார்கள். இதை அடுத்து அடுத்த பரிவர்த்தனை இதனோடு ஒட்டிக்கொள்கிறது.அடுத்தது அடுத்தது என்று சங்கிலி மாதிரி போவதால் பிளாக் செயின் எனப்படுகிறது.

சரி.. இந்த பிட்காயினை நாம் காப்பி அடிக்க முடியாதா? ஆப்ட்டர் ஆல் இது ஒரு கம்ப்யூட்டர் டிஜிட்டல் பைல் அல்லது கோடு தானே..? இதையும் யோசித்து வைத்து இருப்பது தான் இந்த டெக்னலாஜியின் கில்லாடித்தனமே. அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

தொடரும்..

பகிரவும்

(Visited 57 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close