இலக்கியம்53 Videos

காதலென்றாகிக் கரம்நீட்டி அணைக்கும் மாதொருபாகன்! – ராஜாராமன்

நம்ம மக்கள்கிட்ட முற்றிலும் தவறா புரிஞ்சிக்கப்பட்ட ரெண்டு வார்த்தைகள் காதலும் ஆன்மீகமும்… பொண்ணோ ஆணோ கொஞ்சம் கண்ணுக்கு லட்சணமா இருந்துட்டா குபீர்ன்னு பொங்கியெழுந்து ஹார்மோன்களின் சித்து விளையாட்டில் அமிழ்ந்துவிடுவது மட்டுமா காதல்? கோயிலுக்கு போயி ”அப்பனே ஆண்டவா… எனக்கு இதைக் கொடுத்தேன்னா உனக்கு அதைச் செய்யிறேன்”ன்னு கும்பிட்டுட்டு பிரகாரம் சுத்தும்போதே லௌகீகத்துல கரைஞ்சி போறதா ஆன்மீகம்?! இரண்டுக்குமான பொருள் வேறொரு தளத்தில் காலூன்றி இருக்கின்றதல்லவா?! .. காதலும் ஆன்மீகமும் வேறு வேறில்லை. காதல் முற்றிய நிலைதான் ஆன்மீகம்.. […]

காதலாய் மலர்ந்த மஞ்சணத்தி

சங்கப்பாடல்களை எப்பவுமே கோனார் நோட்ஸ் வச்சோ, அல்லது தமிழ் வாத்தியார்கள் துணையோடயோ படிக்கக்கூடாது…. அது சாறு புழியப்பட்ட சக்கையை சாப்பிடுவது மாதிரி…. நானு ப்ளஸ் 1, ப்ளஸ் 2 காலத்துலயே நோட்ஸ் படிச்சி அர்த்தம் தெரிஞ்சிக்க மாட்டேன்… அப்பப்ப பாட்டு பதம் பிரிக்கிறதுக்கு மட்டும் நோட்ஸ் புரட்டுவேன்… அசெம்ப்ளி இலக்கியம் வாசிக்கிறதுக்காக அப்பப்போ சரவணமுத்து சார்கிட்ட உரையாடுவேன்.. அவர் சொன்ன சின்னச் சின்ன குறிப்புகள்தான் எனக்கு ஆரம்பம்… ஆனா இது அவருக்கே தெரியுமான்னு எனக்கு தெரியாது… அப்புறம் […]

தினம் ஒரு குறள்: அமைச்சு

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்.   எத்தகைய இடர் வரினும், இடர் களையும் நெஞ்சுறுதியோடு எடுத்த காரியம் முடிப்பேன் எனும் உறுதி அற்றவர், இதை இப்படிச் செய்ய வேண்டும் என அத்துனையும் அறிந்து வைத்தும், செயல்படும்போது அச்செயலை முடிக்க இயலாமல் இருப்பர். 0

தினம் ஒரு குறள்: அமைச்சு

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்   எழுபது கோடி உறும்.   தவறான சிந்தனை உடையவனை ஆலோசனை வழங்கும் மந்திரியாக வைத்திருப்பது, சற்றேறக்குறைய எழுபது கோடி பகைவர்களை உடன் வைத்திருப்பதற்கு ஒப்பதாகும். தவறான சிந்தனையின் தாக்கத்தை இதைவிட எளிமையாக யாராலும் இருவரி எழுசீரில் சொல்ல முடியாது. இது ஏதோ செய்தியல்ல; வாசித்துக் கடப்பதற்கு! வாழ்வின் வெற்றிக்கான அடிப்படை அறிவு நூல்! இதை, அவ்வப்பொழுது, எண்ணத்தில் நிறுத்துங்கள்! எச்சரிக்கை பிறக்கும்! வாழ்வே இனிமையாகும்!! உலகத்தைத் திருத்துவது நமது நோக்கமல்ல; ஆனால், நாம் திருந்தினால், […]

தினம் ஒரு குறள்: அமைச்சு

அறிகொன்று அறியான் எனினும் உறுதி  உழையிருந்தான் கூறல் கடன்.   அறிவுடையோர் சொல்லை அழித்துத் தானும் அறியாதவனாய் இருப்பினும், உறுதி தரும் சொற்களை ஆள்பவர்க்குக் கூறுவது, உடனிருக்கும் அமைச்சனது கடமையாகும். இடிக்க, இடிக்கக் கல்லும் கரையும் என்பதுபோல், அறிவைப் புகட்டப் புகட்ட, நிச்சயம். ஒருநாள் மாற்றம் நிகழும் என்ற உறுதிப்பாட்டுடன் ஆலோசனை கூற வல்லானை அமைச்சனாக மட்டுமல்ல, நண்பனாகப் பெற்றாலே வரம்தான். 0

தினம் ஒரு குறள்: அமைச்சு

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து  இயற்கை அறிந்து செயல்.   நூல்பல கற்றுத் தேர்ந்து வினைசெயும் ஆற்றல் அறிந்த போதும், உலக வழக்கங்களுக்கு ஏற்ப இயற்கையை அறிந்து அதனொடு பொருந்தும் வகையில் செயல்பட வேண்டும். 0

தினம் ஒரு குறள்: அமைச்சு

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்  யாவுள முன்நிற் பவை.   இயற்கை அளித்த அறிவும், நூலால் தொகுத்த அறிவும் இயைந்த ஒருவர்க்கு, அதைவிட மிக்க அறிவு மறைபொருளாக முன்நிற்பது யாதும் உளவோ? எனும் வினா எழுப்பி, இவ்விரு அறிவுகளைத் தாண்டி, சூழ்ச்சியை உடைக்கும் திறவுகோல் வேறு இல்லை என உறுதிபடக் கூறுகிறார் வள்ளுவர். 0

தினம் ஒரு குறள்: அமைச்சு

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்  திறனறிந்தான் தேர்ச்சித் துணை.   ஒட்டுமொத்த உலகநலன் காக்கும் ஒப்பற்ற அறங்களை அறிந்து, கற்றுத் தேர்ந்து, தக்கதை உணர்த்தும் தகுதியாற் சிறந்த சொல்லோனை, நலிந்த காலத்தும், வலிய காலத்தும், செயலின் வன்மை, செயலாக்கும் தன்மை அறிந்தவனும், நாட்டை ஆளும் தலைவனுக்குத் தேர்ந்த, நுண்ணிய, நிகரில்லா ஆலோசனை வழங்க வல்லோன் ஆவான். 0

தினம் ஒரு குறள்: அமைச்சு

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்  சொல்லலும் வல்லது அமைச்சு.   பல்வேறு நிலைகளில் பயன்தரும் வினையை ஆய்ந்து அறிதலும்,  அவ்வினையைச் செய்யும் போது அதற்குரிய வல்லமை பொருந்திய வகையில் தெரிந்து செயலாக்குதலும், உரியோரைச் சேர்க்க, உதவாரை நீக்க உற்றதிதுதான் என அறுதியிட்டுச் சொல்லும் வன்மையும் பெற்றவரே ஆலோசனை கூறும் தகுதியுடை அமைச்சராவார். 0

தினம் ஒரு குறள்: அமைச்சு

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்  பொருத்தலும் வல்ல தமைச்சு.   தனக்குத் துன்பம் தரும் செயலைச் செய்யும் பகைவர்க்குத் துணையிருப்பவரை அவர்மாட்டுப் பிரித்தலும், தம்மிடம் உள்ளோரின் உணர்வறிந்து காத்தலும், தம்மை விட்டுப் பிரிந்து சென்றவர்களை தம்பக்கம் தக்க சமயம் பார்த்துச் சேர்த்தலும் அறிந்த வல்லமை பெற்றவரே ஆலோசனை வழங்க ஏதுவான அமைச்சராவர். 0