ஆன்மிகம்21 Videos

ஸ்ரீ மத் அபிநவ வித்யா தீர்த்த மஹாஸ்வாமிகள் (பூர்வாசிரம) ஜன்ம தினம் – 13 நவம்பர்

பாரத நாட்டில் சநாதன தர்மம் என்று அறியப்படும் நம் தேசத்தின் தொல் அறம் (சநாதனம் => தொன்மையான; தர்மம் => அறம்) பல்வேறு வழிபாட்டு மரபுகளையும் முறைமைகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. பொது சகாப்தம் எட்டாவது நூற்றாண்டில் அவதரித்த ஆதிசங்கர பகவத்பாதர் நம் தொல் வழிபாட்டு முறைகளைத் தொகுத்து ஆறு தரிசனங்களாகத் தந்தார். அவர் வகுத்தளித்த ஆறு தரிசனங்கள், அத்வைத வேதாந்தக் கோட்பாடு,  இவற்றில் மக்களை வழிநடத்த பாரத தேசத்தின் நான்கு திசைகளில் நான்கு ஆம்நாய பீடங்களை நிறுவினார். […]

கண்ணன் வருகின்ற நேரம் – ஜன்மாஷ்டமி – 23 ஆகஸ்ட்

இன்று கோகுலாஷ்டமி திருநாள். நாடுமுழுவதும் வீடுகள் எல்லாம் வாசலைப் பெருகி, நீரிட்டு மெழுகி, கோலம் இட்டு வாசலில் இருந்து கண்ணனின் காலடித் தடத்தை வரைந்து வெண்ணையும் அதிரசமும் அக்கார அடிசிலும் தயாரித்து கண்ணன் வருகைக்காக மக்கள் காத்துக்கொண்டு இருக்கும் பெருநாள்.  பாரத மண்ணின் இதிகாச நாயகன் சந்தேகமே இல்லாமல் நடையில் நின்று உயர் நாயகன் ராமன்தான். ஆனாலும்  மக்களின் உள்ளம் கவர்ந்தவன் கண்ணன்தான். ஆதியும் அந்தமும் இல்லாத இறைப் பொருள் மனிதனாக தோன்றி மக்கள் வாழும் வழியைச் சொல்லிச் […]

பூஜ்ய குருதேவ் ஸ்வாமி சின்மயானந்தா அவதார தினம் – மே 8.

இருபதாம் நூற்றாண்டில் பாரதம் உலகிற்கு கொடையளித்த அத்வைத ஆசான் குருதேவ் ஸ்வாமி சின்மயானந்தா அவதாரத்தினம் இன்று. கேரள மாநிலம் எர்ணாகுளம் நகரில் நீதிபதியாகப் பணியாற்றிக்கொண்டு இருந்த குட்டன் மேனன் என்பவருக்கும் பாருக்குட்டி அம்மாவிற்கும் மகனாகப் பிறந்தவர் ஸ்வாமிஜி. இவர் பூர்வாஸ்ரமப் பெயர் பாலகிருஷ்ணமேனன். தனது பட்டப்படிப்பை திருச்சூரில் முடித்த ஸ்வாமிஜி முது கலை மற்றும் சட்டப் படிப்பை லக்நோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். அது இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த நேரம். வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த […]

காதலென்றாகிக் கரம்நீட்டி அணைக்கும் மாதொருபாகன்! – ராஜாராமன்

நம்ம மக்கள்கிட்ட முற்றிலும் தவறா புரிஞ்சிக்கப்பட்ட ரெண்டு வார்த்தைகள் காதலும் ஆன்மீகமும்… பொண்ணோ ஆணோ கொஞ்சம் கண்ணுக்கு லட்சணமா இருந்துட்டா குபீர்ன்னு பொங்கியெழுந்து ஹார்மோன்களின் சித்து விளையாட்டில் அமிழ்ந்துவிடுவது மட்டுமா காதல்? கோயிலுக்கு போயி ”அப்பனே ஆண்டவா… எனக்கு இதைக் கொடுத்தேன்னா உனக்கு அதைச் செய்யிறேன்”ன்னு கும்பிட்டுட்டு பிரகாரம் சுத்தும்போதே லௌகீகத்துல கரைஞ்சி போறதா ஆன்மீகம்?! இரண்டுக்குமான பொருள் வேறொரு தளத்தில் காலூன்றி இருக்கின்றதல்லவா?! .. காதலும் ஆன்மீகமும் வேறு வேறில்லை. காதல் முற்றிய நிலைதான் ஆன்மீகம்.. […]

வளங்கள் பெருக்கும் வஸந்த நவராத்திரி

வரும் 05.04.19 முதல் 14.04.19 வரை வஸந்த நவராத்திரி கொண்டாடப்படும். அனைவரும் அம்பாளின் அருளை பெற்று வாழ்வில் சிறப்புற வேண்டும். லோக மாதா ஸ்ரீ லலிதாதேவியை இந்த வஸந்த நவராத்ரியில் நாம் கொண்டாடுவோம். தேவி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை மனதார வழிபடும் முறையாகும். தேவி வழிபாட்டின் பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் தனிச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள்தான். குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும் கோடை கால (பங்குனி […]

மத மாற்றம் ஒரு தேசிய அபாயம் – செல்வசுந்தரி

உலகின் எல்லா நாடுகளுக்கும் ஒவ்வொரு மதம் உண்டு. பாரததேசத்தில் கிறிஸ்தவமும் இஸ்லாமும் தோன்றாத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியது நமது இந்து மதமாகும்.  ஆனால் நமது பாரத தேசத்தை  இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று அரபு நாடுகளும் கிறிஸ்தவ நாடாக ஆக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும்  கங்கணம்   கட்டிக்கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்திற்க்கு இந்து மதம் தவிற வேறெதுவும் தெரியாது.  இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம் மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் […]

ஷியாமளா நவராத்திரி – 5.2.2019 முதல் 14.02.2019 வரை

தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரை அம்பிகையை பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். ஷியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும். ஷியாமளா நவராத்திரி தினங்களில் அம்பிகையை வழிபட்டு ஸ்ரீ மாதங்கி தேவியின் அருளால் வெற்றி […]

இந்து வைதீக திருமண சடங்குகள் மந்திரங்கள் கேவலமானவையா?- ஸ்டாலினுக்கு நெற்றியடி பதில்

இந்து வைதீக திருமண சடங்குகள் மந்திரங்கள் கேவலமானவையா?- ஸ்டாலினுக்கு நெற்றியடி பதில் தந்துள்ளார் ஜடாயு. அவரது பேச்சில் சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகியின் திருமணம் எப்படி நடந்துள்ளது, திருமணத்தின் போது சொல்லப்படும் மந்திரங்களுக்கான பொருள் என்ன என்பதைத் தெளிவாக விளக்குகிறார். உணர்வுள்ள இந்துக்கள் இது போன்ற தலைவர்களை ஆதரிக்கக்கூடாது , அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் போன்ற காட்டமாகவும் அறிவுறுத்தி உள்ளார். 3+

குரு நானக் கல்லூரியில் ஹிந்துக் குடை – ஹரன் பிரசன்னா

பத்தாவது வருட ஹிந்து ஆன்மிக – சேவை அமைப்புகளின் கண்காட்சி இந்த வருடம் வேளச்சேரியில் இருக்கும் குரு நானக் கல்லூரியில் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 400 அரங்கங்கள் இருக்கலாம். மிக பிரமாண்டமாக உள்ளது. நாம் முன்பின் கேள்விப்பட்டிராத பல அமைப்புகளை இந்தக் கண்காட்சியில் பார்க்கமுடிகிறது. அனைத்துச் சாதி அமைப்புகளின் அரங்கங்கள், அனைத்துத் தத்துவ அமைப்புகளின் அரங்கங்கள், அனைத்து மடங்களைச் சேர்ந்த அமைப்புகள் எனப் பல வகையிலான அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்பது வருடங்களுக்கு முன்பு, இரண்டாவது ஹிந்து ஆன்மிக சேவைக் […]

பழனி முருகன் கோயில் உண்டியலில் ஜனவரியில் விழுந்த தொகை எவ்வளவு தெரியுமா?

பழனி: பழனி முருகன்  கோயில் உண்டியலில் ஜனவரி மாதம் 6.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் விழுந்துள்ளன. தைப்பூசத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசிக்க ஆண்டு தோறும் அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரியில்  6.5 கோடியாகவும், கடந்த வருடத்தில் மற்ற மாதங்களில் சராசரியாக 2.5 கோடி உண்டியலில் மாத வருவாயாக உள்ளது. 1+