சிறப்புக் கட்டுரைகள்428 Videos

மும்பை நகரின் பிதாமகன் ஜெகநாத் ஷங்கர்சேத் – பிப்ரவரி 10

இன்று மும்பை நகரம் பாரத நாட்டின் பொருளாதாரத் தலைநகர். ஆனால் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பூனாவும், சூரத்தும், ராய்கட் பகுதியும்தான் மராட்டிய மாநிலத்தின் முக்கிய நகரங்களாக இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் மும்பை மேற்கு கடற்கரையின் முக்கியமான நகரமாக உருவெடுத்தது. மும்பை நகரை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான திரு ஜெகநாத் ஷங்கர்சேத் அவர்களின் பிறந்ததினம் இன்று.  அரபிக்கடற்கரையின் ஓரத்தில் அமைந்த கொங்கன பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட தைவைத்நிய ப்ராமண சமூகத்தைச் சார்ந்தவர் ஜெகநாத்சேத். இறைத்தொண்டும், நகை தயாரிப்பும் […]

அபய சாதகன் பாபா ஆம்தே நினைவு நாள் – பிப்ரவரி 9

மதமாற்றத்தில் ஈடுபடாமல், விளிம்புநிலை மனிதர்களுக்கு சேவை செய்பவர்கள் பற்றி பொதுவாகவே நமது பத்திரிகைகள் மக்களுக்குச் சொல்லாது. ஆனாலும் அதனையும் மீறி வெளிச்சத்திற்கு வந்த சமூகசேவகர் பாபா ஆம்தே அவர்களின் நினைவு நாள் இன்று. மகாராஷ்டிரா மாநிலத்தின் வார்தா பகுதியைச் சார்ந்த ப்ராஹ்மண சமூகத்தின் தேவதாஸ் ஆம்தே, ஆங்கில அரசின் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். பரம்பரை பணக்காரரான தேவதாஸ் ஆம்தேவிற்கு முதல் மகனாகப் பிறந்தவர் முரளிதர் தேவதாஸ் பாபா ஆம்தே. 1914ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாள் […]

பட்ஜெட்டும், வருமான வரியும் பின்னே வங்கிக் கணக்கும்

பட்ஜெட்டின் அம்சங்களை குறை சொல்லிக்கொண்டிருக்கும் பலர் இது குறித்து பாராட்டாமல் இருப்பது ஏன்னு புரியல. வருமான வரி குறித்து: நம்மாளுங்க கிட்ட ரெண்டு பிரச்சனை. 1. ஆப்சன் என்பதே நமக்கு ஆகாது, நல்லதோ கெட்டதோ இதாண்டா ஒனக்குன்ன்னு கொடுத்துட்டா, ரெண்டு நாள் பொலம்பிட்டு அப்புறம் அதை ஏத்துக்கிட்டுப் போயிடுவாங்க

மிஷ்கினின் சைக்கோ – குழப்பக்காரன் கையில் ஒரு கத்தி | ஹரன் பிரசன்னா

Strictly 18+ / Spoilers ahead தொடர் கொலைகள், அதைத் துப்பறியும் கதைகள் உலகம் முழுக்க பிரசித்தி பெற்றவை. சைக்கோ வகைக் கொலைகளில் எத்தனையோ விதங்களாக யோசித்து எப்படியெல்லாமோ எடுத்திருக்கிறார்கள். நினைத்துக்கூடப் பார்க்க முடியாத, நினைத்துப் பார்த்தாலே குமட்டி வாந்தி வரும் அளவுக்கான கதைகள் எல்லாம் யோசிக்கப்பட்டுவிட்டன. இத்திரைப்படங்களுக்குக் கொலைகள் முக்கியமல்ல. கொலைக் காட்சிகளின்போது நாம் அடையும் பதைபதைப்பே முக்கியம். கொலைகளுக்கான காரணம் மிக முக்கியம். அந்த வலுவான காரணம் கொலைகளையே நியாயப்படுத்தும் அளவுக்கு இருக்கவேண்டும். படத்தில் […]

தொலைவில் ஓர் அபயக் குரல் – 1

சொந்த நாட்டிலேயே தங்களது வீடுகள், வியாபாரங்களை விட்டுவிட்டு அகதிகளாய் வேறு மாநிலங்களுக்கு சென்றவர்களைப் பற்றி நமது மீடியாக்கள் பேசி உள்ளனரா ? தங்களது இனத்தை அழிக்க முயன்றவர்களிடம் இருந்து தப்பி அண்டை மாநிலத்திற்கு சென்று அங்கே அகதிகள் முகாமில் வாழும் பழங்குடியினரைப் பற்றி எந்த செய்தித்தாளாவது சிறப்புக் கட்டுரை வெளியிட்டார்களா ?

புரட்சிவீரர் சூர்யா சென் – ஜனவரி 12

“மரணம் என் வாழ்க்கையின் வாசற் கதவைத் தட்டுவது என் காதில் கேட்கிறது. என் மனம் எல்லையற்ற பெருவெளியை நோக்கி மெல்லப் பறக்கத் தொடங்கிவிட்டது. விழி மூடும் இந்த மரணப் பொழுதில் என் நண்பர்களிடம் நான் ஒன்றை மட்டும் என் நினைவாக விட்டுச் செல்கிறேன். அதுதான் ‘சுதந்திர இந்தியா’ என்ற என் பொற்கனவு. தோழர்களே! இந்தக் கனவை நனவாக்க நம் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். எந்த நிலையிலும் ஓரடிகூடப் பின்வாங்க முயல வேண்டாம். நம் தேசத்தின் அடிமைப் பொழுது […]

வீரத் துறவி ஸ்வாமி விவேகானந்தர். – ஜனவரி 12

கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை குறள் 736 தன்னிலையில் கெடாமலும், ஒரு வேளை சூழ்நிலையால் கெட நேர்ந்தாலும் தனது வளம் குன்றாது இருத்தலும் , மீண்டும் தனது வளத்தை மீண்டும் உருவாக்கிக்கொள்ளும் வலிமை உடையதுதான் நாடு என்று சொல்லப்பட வேண்டும் என்பது திருவள்ளுவர் காட்டும் நாட்டின் இலக்கியம். அப்படி பாரத நாட்டின் வளம் என்பது அதன் ஆன்ம பலத்தில்தான் உள்ளது. பாரதத்தின் ஆன்ம பலம் குன்றிப் போய் விடுமோ என்று அஞ்சும் காலத்தில், […]

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-24

திருப்பள்ளி எழுச்சி மூன்றாம் பாடல்: கூவின பூங்குயில்கூவினகோழிகுருகுகள் இயம்பின இயம்பின சங்கம்ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்துஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்தேவநல் செறிகழல் தாள் இணை காட்டாய் திருப்பெருந்துறையுறை சிவபெருமானேயாவரும் அறிவு அரியாய் எமக்கு எளியாய்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்= அதிகாலை நேரம் குயில் கூவித் துயில் எழுப்பும், கோழிகள் கொக்கரக்கோ எனக் கத்தும். அப்படி திருப்பெருந்துறையிலும் குயில்கள் கூவ, கோழிகள் கூவ, மற்றப் பறவைகளும், நாரைகளும் ஒலி […]

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-23

திருப்பள்ளி எழுச்சி இரண்டாம் பாடல் அருணன் இந்திரன் திசை அணுகினான் இருள்போய்அகன்றது உதயநின்மலர்த்திருமுகத்தின்கருணையின் சூரியன் எழ எழ நயனக்கடிமலர் மலரமற்று அண்ணலம் கண்ணாம்திரள்நிரை அறுபதம் முரல்வன் இவையோர்திருப்பெருந்துறையுறை சிவபெருமானேஅருள்நிதி தரவரும் ஆனந்த மலையேஅலைகடலே பள்ளி எழுந்தருள்வாயே! அருணன் இந்திரன் திசை அணுகினான் இருள்போய்அகன்றது= இந்திரன் கிழக்குத் திசையின் அதிபதி. அந்தக் கீழ்வானில் உதயசூரியன் வரும்முன்னர் தோன்றும் செவ்வானம் அருணோதயம் உண்டாகிவிட்டது. இருள் அகன்றது ஒளி பிறந்தது. இங்கே மனமாகிய ஆகாயத்தில் இறைவனின் சோதிவடிவாகிய உதயத்தைக் கண்டதும், மனதின் […]

தேவார தரிசனம் – 2

இளைஞன். முகத்தைக் கவனித்தால் மிகவும் களைத்திருப்பது தெரிந்தது. நெடுந்தொலைவு நடைப் பயணமாக வந்திருக்கிறான். தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும். வழி தெரியவில்லை. ஆனாலும் எதுவும் செய்யாது அங்கேயே மனதுக்குள் எதையோ முணுமுணுத்தபடி இருந்தான். வயதான தம்பதியர் அந்த வழியே நடந்து வந்தனர். அந்தப் பெரியவரைப் பார்த்தாலே கரம் குவித்து வணங்கச் சொல்லியது போல் இருந்தது. சிறுவன் பெரியவரையும் அந்த அம்மையாரையும் வணங்கினான். இருவன் சிரித்தபடி வணங்கினார்கள் பெரியவர் கேட்டார் ” […]