பொருளாதாரம்22 Videos

பட்ஜெட்டும், வருமான வரியும் பின்னே வங்கிக் கணக்கும்

பட்ஜெட்டின் அம்சங்களை குறை சொல்லிக்கொண்டிருக்கும் பலர் இது குறித்து பாராட்டாமல் இருப்பது ஏன்னு புரியல. வருமான வரி குறித்து: நம்மாளுங்க கிட்ட ரெண்டு பிரச்சனை. 1. ஆப்சன் என்பதே நமக்கு ஆகாது, நல்லதோ கெட்டதோ இதாண்டா ஒனக்குன்ன்னு கொடுத்துட்டா, ரெண்டு நாள் பொலம்பிட்டு அப்புறம் அதை ஏத்துக்கிட்டுப் போயிடுவாங்க

பணத்தைக் கட்டினார் அனில் அம்பானி.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து எரிக்சன் நிறுவனத்திற்கு 458 கோடி ரூபாய்களைக் கட்டினார் தொழிலதிபர் அனில் அம்பானி. இதற்க்கு முன்னரே உச்சநீதிமன்றத்தில் 118 கோடி கோடி ரூபாயை அவர் நிறுவனம் செலுத்தி இருந்தது. முன்னதாக மீதிப் பணத்தை நான்கு வாரங்களுக்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு கொடுக்குமாறும் அப்படி கொடுக்கவில்லை என்றால் மூன்று மாதம் சிறைத்தண்டனை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. பணம் தருவதற்கான காலக்கெடு முடிவதற்கு முன்னால் அனில் அம்பானியின் நிறுவனம் இன்று அந்தப் பணத்தை கொடுத்துவிட்டது. இதன் மூலம் […]

அப்பார்ட்மெண்ட் எனும் மோசமான முதலீடு

இந்தியர்களுக்கு அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு தங்கத்தின் மேலும் வீட்டின் மீதும் தீராக் காதல் எப்போதும் உண்டு. ஒரு காலத்தில் இவை இரண்டும் சிறந்த முதலீடுகளாக இருந்தன. வீடு இன்னும் நல்ல முதலீடா? எனக்கு ஓரளவுக்குப் பரிச்சயமான சென்னை ரியல் எஸ்டேட் மார்க்கெட்டை அடிப்படையாக வைத்து இதை எழுதுகிறேன். இது நீங்க வசிக்கும் Primary House பற்றியல்ல, சொந்த வீடு இருக்கும் போது வாடகைக்கு விட கடனில் ரெசிடெண்ட் இந்தியர்கள் வாங்கும் மற்றும் வெளிநாட்டில் சம்பாதிப்பதை எப்படி முதலீடு […]

சேம நல நிதி வட்டி உயருகிறது. –

Employee Provident Fund – ஊழியர்கள் சேம நல நிதி வட்டி விகிதம் 8.55% லிருந்து 8.65% ஆக உயருகிறது. சென்ற ஆண்டு 8.55% ஆக இருந்த சேம நல நிதி வட்டி 8.65% ஆக உயருகிறது. வங்கிகளின் வைப்புநிதி வட்டி 6-7% அளவில் இருக்கிறது. இருவாரங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை 25 பாயிண்ட்கள் குறித்திருக்கும் நிலையில் வட்டி விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது பி எஃப் வட்டி விகித உயர்வு மாத […]

பாண்டியன் , பல்லவன் வங்கிகள் இணைப்பு

  தமிழ்நாட்டில் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வரும் பல்லவன் , பாண்டியன் கிராம வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இவ்வங்கிகள் இனி தமிழ்நாடு கிராம வங்கி என்று ஏப்ரல் மாதம் முதல் தேதியில் இருந்து செயல்படத் தொடங்கும். இரு கிராம வங்கிகள் இணைக்கப்படுவதன் மூலம் உருவாகும் தமிழ் நாடு கிராம வங்கி ஏறக்குறைய 2100 கோடி வர்த்தகம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இயங்கும் இந்த வங்கிகள் 625 கிளைகளைக் கொண்டது. இணைக்கப்பட்டு இனி […]

2019, 2020 ல் இந்தியாவில் தான் வேகமான பொருளாதார வளர்ச்சி – ஐ.நா அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவே உலகில் அடுத்த இரு ஆண்டுகளுக்கு வேகமான பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக விளங்கும் என கணித்துள்ளது. 2019-20 ல் இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி 7.6% ஆக இருக்கும் என அறிவித்துள்ளது. மார்ச் 2019 ஆண்டு  முடிவில் 7.4 % ஆக இருக்குமென தெரிவித்துள்ளது. 2020 ல் , ஜிடிபி குறைந்தால் கூட 7.4%-ஆக இருக்குமென அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனாவைப் பொறுத்தவரையில் சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி 2018 […]

வேலை வாய்ப்பு அளிப்பதில் தோல்வி அடைந்ததா மோதி அரசு ? பகுதி 1

மோதி தலைமையிலான பாஜக அரசு போதுமான அளவு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாற்றி வருகின்றன. உலகமயமாக்கல், இயந்திரமயமாக்கல், புதுப்புது தொழில்நுட்பங்கள் என்பதால் ஏற்கனவே இருந்த பல்வேறு வேலைகள் இல்லாமல் ஆகி புது வேலைகள் உருவாக்கிக்கொண்டு இருக்கின்றன. அது போக பொதுவாக மிகப் பெரும் அளவில் ஆட்களை வேலைக்கு எடுக்கும் அரசுத்துறைகளும், கனரகத்தொழிற்சாலைகளும் அதிகளவில் கணினி போன்ற இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் அவை உருவாக்கும் வேலைகள் குறைந்துகொண்டே வருகின்றன. வளர்ச்சி என்பது ஒரு சாராருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமானதாக இருக்கவேண்டும். […]

சென்னையில் 2-வது உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று துவக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில், சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று பிரமாண்டமான முறையில் தொடங்குகிறது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள்  மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பங்கேற்கிறார்.  துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நிறைவு நாள் விழாவில்  பங்கேற்க உள்ளார். மொத்தமாக 2 நாட்கள் இந்த மாநாடு நடைபெற உள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2015-ம் […]

இந்திய பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது- கீதா கோபிநாத்

"India is one of the fastest growing large economies of the world. It's economy is quite healthy," says IMF Chief Economist Gita Gopinath to NDTV Watch full interview here: https://t.co/NEAP57CXyD#NDTVAtDavos pic.twitter.com/Bva0vAMnsc — NDTV (@ndtv) January 21, 2019   ஐஎம்எவ் (IMF ) என்று அழைக்கப்படும் சர்வதேச நிதி ஆணையத்தின் முதன்மை பொருளாதார நிபுணர்- கீதா கோபிநாத் . இவர் சமீபத்தில் டாவோஸ் […]

பணக்காரர்களின் பொருளாதார வளம் நாளொன்றுக்கு “2200 கோடி ” உயருகிறதாம்

ஆக்ஸ்பாம் ஏற்ற அமைப்பு அடத்தியுள்ள ஆய்வில் 10% இந்தியர்களிடம் 77% நாட்டின் பொருளாதார வளம் உள்ளது. அதிலும் உச்ச பணக்காரர்களாக உள்ள 1% த்தினரடமே 55% நாட்டின் பொருளாதார வளம் உள்ளது. 13.6 கோடி இந்தியர்கள் 2004 லிருந்து இன்னும் கடன்காரர்களாகவே உள்ளனர். உலகில் பணக்காரர்களின் (பில்லியனர்களின்) பொருளாதார வளம் நாளொன்றுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்திய பணக்காரர்கள் நாளொன்றுக்கு  2200 கோடி பொருளாதார வளம் கூடியுள்ளது. அதாவது 1% பணக்காரர்களின் […]