செய்திகள்1335 Videos

சேஷாத்ரி ஸ்வாமிகள் – 5

பூட்டி இருந்த வீட்டிலிருந்து மாயமாக மறைந்த சேஷாத்ரி ஸ்வாமிகளை ஊரெங்கும் தேடியும் கிடைக்கவில்லை. சித்தப்பாவும் சித்தியும் துடிதுடித்துப் போனார்கள். சில நாட்களில் காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் சேஷாத்ரி இருப்பதாய்த் தகவல் கிட்டி அங்கு சென்று பார்த்தால் அங்குள்ள முக்தீஸ்வரர் கோயிலில் சேஷாத்ரி ஸ்வாமிகள் தங்கி இருந்தார். வீட்டுக்கு வர மறுத்துவிட்டார். அவர் தம்பி தினந்தோறும் அவருக்கு உணவு எடுத்துச் சென்று கொடுத்து வந்தார். கோயிலில் இருந்த பாம்பு அவர் கழுத்தில் மாலையாக ஏறிக்கொண்டு அவர் தலை மேல் […]

இந்து தீவிரவாதம் என்ற பொய் வெளுத்த கதை – Let me say it now by Rakesh Maria – பாகம் 3

விசாரணையில் முதலில் ஒத்துழைக்காமல் தன்னைக் கொன்றுவிடச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தான். காஃபிர்களிடம் சிறைப்பட்டுக் கிடப்பது பற்றி வருத்தப்பட்டான். இதற்குள் அவனைக் கொல்ல மும்பை போலீசில் ஒரு சாரார் ஆத்திரத்தில் முன்வந்தனர். ஐஎஸ்ஐ அவனைக் கொல்லத் துடியாய்த் துடித்தது.  சில நாட்களில் ராகேஷ் மரியாவிடம் பேச ஆரம்பித்தான் கசாப். இந்துஸ்தானம் பற்றி அவனுக்குச் உருவேற்றப்பட்ட கதைகளைச் சொன்னான். தினமும் 5 வேளை ஆஜான் ஓதப்படுவது போல கனவு வருகிறது என்றான். ரமேஷ் மஹாலே என்ற அதிகாரி கசாப்பை ஒரு […]

சேஷாத்ரி ஸ்வாமிகள் – 4

சேஷாத்ரியின் அத்தை பெண்ணான காகினிக்கு வேறொரு பையனுடன் திருமணமும் நடந்து முடிந்து விட்டது. இவ்வுலக வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் துச்சமாகக் கருதிய சேஷாத்ரிக்கோ இவை எல்லாம் பெரிய விஷயமாய்த் தோன்றவில்லை. எந்நேரமும் பேரருளின் துணையை நாடினார். பூஜை அறையில் வழிபட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்த அருணாசல மலையின் சித்திரம் மனதில் பதிந்தது. அவர் அருணாசலத்தை நேரில் கண்டதில்லை. அன்ன ஆகாரம் இல்லாமல் உறக்கமும் இல்லாமல் நெடுநேரம் துர்கா ஸூக்தத்தை ஜபித்துக்கொண்டே தன்னை மறந்து உட்கார்ந்திருப்பார். சித்தப்பாவும், சித்தியும் அவரைக் […]

இந்து தீவிரவாதம் என்ற பொய் வெளுத்த கதை – Let me say it now by Rakesh Maria – பாகம் 2

அதிர்ச்சியில் இருந்து போலீசார் விடுபட இரண்டு நாட்கள் ஆனது. பதட்டம் தணிந்து பலரும் பணிக்குத் திரும்ப சிலருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. பலருக்குக் கோபம் தலைக்கேறியது. 26/11 வரை பக்கத்தில் இருந்து பணிபுரிந்த பலர் அங்கே இல்லை. இனி இருக்கமாட்டார்கள்.  தெரிந்து எதிரியை எதிர்த்துப் போராடி சாவது ஒரு வகை. போலீஸ், ராணுவம் என்று சேரும் யாரும் அது தெரிந்து தான் பணிக்குச் சேருகிறார்கள். ஆனால் “பெரிய வேலை இல்லைய்யா. பாரா நிக்கணுமாம்!” என்று போய் நின்றவர்களில் […]

சேஷாத்ரி ஸ்வாமிகள் – 3

தந்தை அழுவதைக் கண்டு சேஷாத்ரியும், கணவன் அழுவதைக் கண்ட மரகதமும் பயந்து போனார்கள். மரகதம் மனதில் கவலையும் திகிலும் புகுந்தது. கணவனிடம் காரணம் கேட்க அவரோ ஆனந்தக் கண்ணீர் என்று சொல்லிச் சமாளித்து விட்டார். சேஷாத்ரியும் மேலே எதுவும் பேசாமல், கேட்காமல் பாடசாலைக்குச் சென்று விட்டார். மகன் சென்ற பின்னர் வரதராஜ ஜோசியர் மனைவி மரகதத்தைத் தனியே அழைத்து, “மரகதம்! நான் சொல்வதைக் கேட்டு உன் மனதைத் திடமாக வைத்துக்கொள். காமாட்சி என்னை அழைக்கிறாள். நாளை சூரியோதயத்துக்கு […]

இந்து தீவிரவாதம் என்ற பொய் வெளுத்த கதை – Let me say it now by Rakesh Maria – பாகம் 1

ராகேஷ் மரியா – பாகிஸ்தான் தீவிரவாதத்தின் அப்பன் தாவூது முதல் அவனுக்கு தாக்கீது சொல்லும் லோக்கல் சுப்பன் வரை கேட்டதும் கடுங்கோடையிலும் சுண்டு விரல் காட்டிவிட்டு ஓடிப்போய்த் திரும்ப வரும் போலீஸ்காரரின் பெயர்.அஜ்மல் கசாப் – இந்தப் பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க இயலாது.  செபடம்பர் 26, 2008 அன்று இரவு கிட்டத்தட்ட 60 பேரை மும்பை ரயில் நிலையத்தில் குருவி சுடுவது போல சுட்டுக் கொன்று விட்டு 100 பேருக்கு மேல் உயிருக்குப் போராடிக் […]

சேஷாத்ரி ஸ்வாமிகள் – 2

1870 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 22 ஆம் நாள் சனிக்கிழமை ஹஸ்த நக்ஷத்திரம் கூடிய நல்ல நாளில் மரகதத்துக்குக் காமாட்சி தேவியின் அருள் பிரசாதமாக ஆண் மகவு பிறந்தது. குழந்தைக்கு சேஷாத்ரி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். பராசக்தியின் அருளால் பிறந்த அந்தக் குழந்தை இயற்கையாகவே தெய்வ சிந்தனையோடும் இறை வழிபாட்டில் ஆர்வத்தோடும் காணப்பட்டது. தாயாரும் குழந்தைக்குப் பல ஸ்லோகங்களைச் சொல்லிக் கொடுத்தார். தாய் பாடுவதைக் கேட்டுக் கேட்டு மகனுக்கும் இசையில் ஆர்வம் மிகுந்தது. நான்காம் […]

சேஷாத்ரி ஸ்வாமிகள்

காஞ்சி நகரின் காமாட்சி அன்னையை ஆராதிப்பதற்காக ஆதிசங்கரர் சில உபாசனா முறைகளைக் தோற்றுவித்ததோடு அல்லாமல் அவற்றைச் சரிவர நடத்துவதற்காக நர்மதா நதிக்கரையில் இருந்து தேவி உபாசகர்களான முப்பது பக்தர்களை அவர்களின் குடும்பத்தோடு காஞ்சிக்கு அழைத்து வந்தார். அவர்கள் காமாட்சி தேவியைத் தங்கள் குலதெய்வமாகக் கொண்டு ஸ்ரீவித்யையைப் பரப்பி வந்தனர். அவர்கள் காலத்திலிருந்து தேவி பக்தியும் ஸ்ரீவித்யையும் செழித்து வளரத் தொடங்கியது. மக்கள் அவர்களைக் காமகோடியார் என அழைக்க ஆரம்பித்தனர். ஏனெனில் காஞ்சியின் காமாட்சி அம்மன் மட்டுமின்றிக் காஞ்சி […]

மும்பை நகரின் பிதாமகன் ஜெகநாத் ஷங்கர்சேத் – பிப்ரவரி 10

இன்று மும்பை நகரம் பாரத நாட்டின் பொருளாதாரத் தலைநகர். ஆனால் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பூனாவும், சூரத்தும், ராய்கட் பகுதியும்தான் மராட்டிய மாநிலத்தின் முக்கிய நகரங்களாக இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் மும்பை மேற்கு கடற்கரையின் முக்கியமான நகரமாக உருவெடுத்தது. மும்பை நகரை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான திரு ஜெகநாத் ஷங்கர்சேத் அவர்களின் பிறந்ததினம் இன்று.  அரபிக்கடற்கரையின் ஓரத்தில் அமைந்த கொங்கன பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட தைவைத்நிய ப்ராமண சமூகத்தைச் சார்ந்தவர் ஜெகநாத்சேத். இறைத்தொண்டும், நகை தயாரிப்பும் […]

அபய சாதகன் பாபா ஆம்தே நினைவு நாள் – பிப்ரவரி 9

மதமாற்றத்தில் ஈடுபடாமல், விளிம்புநிலை மனிதர்களுக்கு சேவை செய்பவர்கள் பற்றி பொதுவாகவே நமது பத்திரிகைகள் மக்களுக்குச் சொல்லாது. ஆனாலும் அதனையும் மீறி வெளிச்சத்திற்கு வந்த சமூகசேவகர் பாபா ஆம்தே அவர்களின் நினைவு நாள் இன்று. மகாராஷ்டிரா மாநிலத்தின் வார்தா பகுதியைச் சார்ந்த ப்ராஹ்மண சமூகத்தின் தேவதாஸ் ஆம்தே, ஆங்கில அரசின் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். பரம்பரை பணக்காரரான தேவதாஸ் ஆம்தேவிற்கு முதல் மகனாகப் பிறந்தவர் முரளிதர் தேவதாஸ் பாபா ஆம்தே. 1914ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாள் […]