கிரிப்டோ கரன்ஸி பாகம் – 2
முதலில் கொஞ்சம் டெக்னிகலாக இதை எழுதலாம் என்றுதான் யோசித்தேன். ஆனால்.. முதல் பாகத்தில் கமென்டெல்லாம், இன்னும் சாதாரணமாக எழுதச்சொல்ல.. இதோ…
பணம்/காசு இதெல்லாம் தொன்மையானது. பண்டமாற்று தாண்டி, தங்கம் எப்போது மிகவும் அரிதான பொருளானதோ.. அன்றிலிருந்து தங்க ஸ்டான்டர்ட் என்கிற அளவுகோல் இன்றுவரை, பணம் அல்லது பணமாற்று மார்க்கெட்டில் கெத்தாக நின்றுகொண்டிருக்கிறது.
தங்கத்தை வைத்து எந்த பொருளையும் வேண்டுமானாலும் வாங்கலாம், அப்போதுதான், தங்கத்தை, எல்லா இடங்களிலும் தூக்கிக்கொண்டு அலையமுடியாத நிலையை உணர்ந்தபோது, ரிசர்வ் பாங்க் தங்கத்தை எங்களிடம் தந்துவிட்டு, இதற்கு பதிலாய் காகித நோட்டை வைத்துக்கொள் என்றார்கள். நமக்கும் அது எளிதாகவே இருந்தது. சட்டைப்பையில் வைத்துக்கொள்ள. பின்னர் வேண்டுமென்றால், நோட்டை தந்தவுடன், தங்கம் தருகிறோம் என்றது அரசும்/ ரிசர்வ் வங்கியும்.
பின்னர், அரசு, தங்கம் எதற்கு..? எங்களின் ப்ராமிஸ் அதாவது, வாக்குறுதியே தங்கத்துக்கு நிகரானது என்றது. அதனால்தான் I promise to pay the bearer.. என்று நோட்டில் இருக்கும். ஆனால் அந்த நோட்டுக்கு சமனாக தங்கம் எங்களிடம் இருப்பு இருக்கும் என்றது..
கழுதை தேந்ய்தது போல்.. தங்கமும் குறைந்து, வெளிநாட்டு டாலர் போன்றவைகளை அரசு வெளியிடப்பட்ட நோட்டுக்கு ஈடாய் ரிஸர்வ் வைத்திருந்தாலும்.. ஒரு விஷயத்தில் சொதப்பியது. அதாவது.. நிறைய அச்சடித்து வெளியிட்டு நம் பணத்தின் மதிப்பை குறைத்தது. அதோடு, பாகிஸ்தான் அடித்த நோட்டும், உள்ளூர் நோட்டுகளும் நம்மை நமக்கு தெரியாமலே ஏழையாக்கியது. அதைத்தவிர நம் பொருளாதார கொள்கைகள் நம்மை inflation அல்லது பணவீக்கத்தில் கொண்டுவிட்டது.
அதோடு, ஒரு பொருளின் மீதான நோட்டின் மதிப்பு, காலப்போக்கில் மாறி, அரசு அல்லது ரிசர்வ் வங்கியின் வாக்குறுதிக்கு ஈடாய் என்று ஒரு நம்பிக்கையின்பால் என்று மாறியதால்.. நான் போன பதிவில் சொன்னதுபோல்.. அமெரிக்காவில் சிலர் இதற்கு மாற்றாய் என்று யோசிக்க ஆரம்பித்ததுவே டிஜிட்டல் கரன்ஸி அல்லது க்ரிப்டோ கரன்ஸி. இதன் முதல் அவதாரம் பிட்காயின் என்கிற ஒரு சாஃப்ட்வேர் code. பிட்காயினுக்கு முன், அதன் அப்பனாய் டிஜி கேஷ், ஈஸி கேஷ் போன்றவை தோன்றியது. ஆனால் அதை எப்படி உபயோகிப்பது அல்லது எதன் மூலமாய் உபயோகிப்பது என்பதில் சரியாக முடிவெடுக்க முடியாமல் தோற்றுப்போனது.
நம் நோட்டுகள் ரிஸர்வ் வங்கியால் மையமாய் அதன் அளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் பிட்காயின் டெக்னாலஜி வித்தியாசமானது. அதன் டெக்னாலஜியையும் உபயோகத்தையும் முடிவு பண்ணுவது நீங்களும் நானும். அதாவது, நீங்களும் நானும் என்பது ஆட்கள் மட்டுமல்ல.. இணையத்தில் இந்த பிட்காயின் உபயோகப்படுத்தும் கம்ப்யூட்டர்கள்தான். இவைகள் பிட்காயின் உபயோகப்படுத்தும் சாப்ட்வேரான ப்ளாக்செயின் டெக்னாலஜி. பிட்காயின் பற்றியும் ப்ளாக்செயின் என்ன என்று அடுத்த பகுதியில்..
(வழக்கம்போல் படித்தவுடன் பகிரவும்)
தொடரும்…