விளையாட்டு52 Videos

இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி

கொல்கத்தாவில் வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதியதொரு மைல்கல். டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்களை அதிகம் ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஐசிசி பகலிரவு டெஸ்ட் போட்டிகளை துவங்கியது. இந்தியா மற்றும் பங்களாதேஷை தவிர்த்து ஏனைய அணைத்து அணிகளுமே குறைந்தபட்சம் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியாவது ஆடியுள்ளன (அயர்லாண்ட் / ஆப்கானிஸ்தான் அணிகள் நீங்கலாக) இந்நிலையில் பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்றவுடன் திரு. சவுரவ் கங்குலியின் முயற்சியினால் இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையேயான […]

அணி மாறுகிறார் அஸ்வின்

ஐபிஎல் டி20 டோர்னமெண்ட்டில் அஸ்வின் கிங்ஸ் லெவன் அணிக்காக கடந்த இரு வருடங்களாக ஆடி வருகிறார். அதன் கேப்டனும் அவர்தான். ஆனால் கேப்டனாக அவர் தனது முழுத் திறனை வெளியிடவில்லை என அணி நிர்வாகம் கருதுகிறது. அணி நிர்வாகத்தையும் குறை சொல்ல இயலாது. இத்தனை வருட ஆட்டங்களில் அவர்கள் தகுதி சுற்றுக்கு தேர்ச்சி பெற்றதும் இல்லை கோப்பையை வென்றதும் இல்லை. என்றுமே வெல்லும் அணியைதான் அனைவரும் விரும்புவர். 2018ல் அவர் கேப்டனாகிய வருடம் அனைத்துப் போட்டிகளின் இறுதியில் […]

கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 – ஒரு முன்னோட்டம்

நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் ஒரு நாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை இம்முறை மே 31ம் தேதி துவங்கி ஜூலை 14ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் மோதவுள்ள பத்து அணிகளைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை நாம் இன்று துவங்கி தொடர்ச்சியாக பார்ப்போம். தேர்ச்சி முறை  இந்த முறைதான் தர வரிசைப்படி முதல் எட்டு  இடங்களில் இருந்த அணிகள் நேரடியாக தேர்வுப் பெற மீதமிருந்த அணிகள் தகுதி போட்டியில் மோதி அதில் முதல் இரண்டு இடங்கள் பெற்ற அணிகள் […]

ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டி 20, ஒருநாள் போட்டிகள் என இரு தொடர்களையும் கைப்பற்றி உள்ளது. ஒருநாள் தொடரில் 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்று உள்ளது.   இன்று நடந்த ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா9 விக்கெட்டுகளை இழந்து  272 ரன்களைக் குவித்தது. காவாஜா சதமடித்தார். 100 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் பந்தில் கோலியிடம் பிடிபட்டார். ஹாண்ட்ஸ் கொம்ப் 52 ரன்களை எடுத்தார். […]

3வது ஒருநாள் போட்டி; இந்தியா 32 ரன்களில் தோல்வி

இந்தியா -ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான 3 வது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்களில் இந்தியாவை வீழ்த்தியது. முதலாவது பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் பின்ச் மற்றும் காவாஜா இருவரும் முறையே 93,104ரன்களை முறையே குவித்தனர். இவர்கள் இருவரும் வலுவான அடித்தளத்தை ஆஸி. அணிக்கு அமைத்துக் கொடுத்தனர். மாக்ஸ்வெல் தமது பங்கிற்கு 47 ரன்களை எடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா  50 ஓவர்களில்  313/5 ரன்களை எடுத்தது.   இரண்டாவது இன்னிங்சை […]

இரண்டாவது ஒருநாள் போட்டி இந்திய அணி வெற்றி

நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.   இந்திய அணியில் வீராத் கோலி 116 ரன்களைக் குவித்தார். விஜய் ஷங்கர் 46 ரன்களை எடுத்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா, தோனி இருவரும் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. ஜடேஜா 21 ரன்களை எடுத்தார். இந்திய அணி 48.2 […]

பிஜேபியில் இணைந்தார் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜக எம்.பி  பூணம் மாடம் முன்னிலையில், தன்னை அதிகாரப்பூா்வமாக அக்கட்சியில் இணைத்துக் கொண்டாா். கடந்த ஆண்டு மே மாதம் இவரது காரில் மோதிய போலீஸ் கான்ஸ்டபிளை அடித்ததால் பரபரப்பாக பேசப்பட்டார் ரிவாபா. கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் காா்னி சேனா அமைப்பின் மகளிரணித் தலைவியாக நியமிக்கப்பட்டாா். மேலும் கடந்த ஆண்டில் ரவீந்திர ஜடேஜாவும், […]

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

ஐதராபாத்: இந்தியா ஆஸ்திரேலியா இடையே முதல் ஒருநாள் போட்டி இன்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்று ஒருநாள் தொடரில் முன்னிலையில் உள்ளது இந்தியா.  முதல் ஒரு நாள் போட்டியில் ஜாதவ், தோனி அரை சதம் விளாச 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜாதவ் ‘சுழலில்’ ஸ்டாய்னிஸ் (37) , கவாஜா (50) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். குல்தீப் ‘சுழலில்’ ஹேண்ட்ஸ்கோம்ப் (19) சிக்கினார். […]

ப்ரோ வாலிபால் தொடரில் சென்னை அணி சாம்பியன்

சென்னை: ப்ரோ வாலிபால் தொடரில், இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில்  சென்னை அணி 3-0 என்ற நேர்செட்களில் கோழிக்கோடு அணியை வென்றது. சென்னை ஸ்பார்டன்ஸ் அணிக்கும் கோழிக்கோடு ஹீரோஸ் அணிக்கும் நடந்த இறுதிப் போட்டியில் 15-11, 15-12, 16 -14 என்ற நேர் செட்களில் கோழிக்கோடு ஹீரோஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை அணி. சென்னை அணிக்கு சாம்பியன் கோப்பையுடன் 50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. சென்னை அணியில் ருடி […]

2019 ஐபிஎல் 2 வாரங்களுக்கான அட்டவணை வெளியீடு: சிஎஸ் கே தான் முதல் போட்டியில் விளையாடுகிறது

2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. இது 12 வது ஐபிஎல் போட்டியாகும். சென்னையில் மார்ச் 23-ம் தேதி மாலை நடைபெறும் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகிறது. இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு […]