தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் – ஓர் அலசல்
குறிப்பு : அரசியல் விமர்சகர் திரு. ஸ்ரீராம் சேஷாத்ரி, ஆங்கிலத்தில் எழுதியதை நமது வாசகர்களுக்காக தமிழில் மொழி பெயர்த்துள்ள்ளேன் – கார்த்திக் |
தேர்தல் அணிகள்
இந்த தேர்தலில் ஒருபுறம் 12 கட்சி கூட்டணி மற்றும் சமீபத்திய சட்டசபை தேர்தலில் பெற்ற 42% ஓட்டுக்களுடனும் திமுக நிற்கிறது. அதற்கு எதிராக அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி உட்பட 9 கட்சிகளும் , பல இடங்களில் பலம் வாய்ந்த சுயேட்சைகளும் நிற்கின்றனர். அந்த வகையில் இது ஒரு சுவாரசியமான தேர்தலாகும்.
போட்டி கணக்குகள்
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகளை தக்கவைத்துக்கொள்ளும் என்று கணக்கிட்டால், அவர்களுக்கு 42% ஓட்டு சதவீதத்தில் மொத்த தொகுதிகளில் 90 இலிருந்து 100 சத சீட்டுகளையும் அந்த கூட்டணி கைப்பற்ற வேண்டும். இதற்கு முக்கிய காரணம், ஆளுங்கட்சிக்கே வாக்களித்தால் தங்கள் பகுதிக்கு வசதிகள் கிடைக்கும் என்று மக்கள் நினைக்கலாம்.
திமுகவிற்கு நேரெதிராக கூட்டணி ஏதுமின்றி தனியாக களம் காணுகிறது அதிமுக. பொதுவாய் அதிமுகவிற்கு என்று தனியாக 27 இல் இருந்து 30 சத ஓட்டுகள் உண்டு. பாஜகவும், பாமகவும் இல்லாத பட்சத்தில் அவர்கள் எத்தனை இடம் பிடிக்கிறார்கள் என்பதை பார்க்கவேண்டும்.
கடந்த சில தேர்தல்களில் தொடர்ந்து மூன்று சதவீத ஓட்டுகளை பெற்று வந்துள்ளது பாஜக. தனிப்பட்டமுறையில், அவர்கள் 40 சதவீத சீட்டுகளில் போட்டி இடுவார்கள் என்று எண்ணினேன். ஆனால் 12,000 சீட்டுகளில் அவர்கள் போட்ட்டியிடுகிறார்கள்.
பாமகவை பொறுத்தவரை மூன்றாவது பெரிய கட்சி என்பதை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். வட மாவட்டங்களில் அவர்களுடைய வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொண்டாலே அது அவர்களுக்கு சாதனையாகும்.
இனி, தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு கட்சிக்கும் எப்படி இருக்கும், அதை அவை எவ்விதம் பார்க்கும் என்பதை பார்ப்போம்.
திமுக
இந்த தேர்தலில் அதிக இடங்களை மட்டுமின்றி அதிக நகராட்சி மற்றும் மேயர் இடங்களையும் வெற்றிப் பெற போவது திமுகதான். இதை கணிக்க பெரிய அரசியல் அறிவு தேவை இல்லை. ஆனால் அவர்களின் வெற்றி எதை பொறுத்து எவ்விதம் பார்க்கப்படும் என்பதில்தான் சுவாரஸ்யம் அடங்கி உள்ளது.
திமுகவின் வசம் பெரிய கூட்டணி, பிளவு பட்ட எதிரணி மற்றும் 42 % ஓட்டு வங்கி என்று சாதகமான அம்சங்கள் நிறைந்துள்ளன. ஆனால் , அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை தந்துள்ளது என்பது யதார்த்தம். அதற்கு முக்கிய காரணங்கள்
- பெண்களுக்கு Rs. 1000 தராதது
- சிலிண்டருக்கு Rs. 100 ரூபாய் தள்ளுபடி தராதது.
- பெட்ரோல் & டீசல் விலை குறைப்பு செய்யாமல் விட்டது.
- நகை கடன் தள்ளுபடியில் விதிக்கப்பட்ட விதிமுறைகள்
- கல்விக் கடன் தள்ளுபடி
- நீட் தேர்வு நீக்கப்படும் என சொல்லி அதை செய்ய இயலாதது.
இது மட்டுமின்றி கடந்த எட்டு மாத ஆட்சியில் நடந்த குளறுபடிகள். அவை
- சென்னை வெள்ளத்தை சரியாக கையாளதது
- பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில் நடந்த குளறுபடி
- பல கோவில்களை இடித்தது
- லாவண்யா விவகாரத்தில், சரியாக கையாளாமல், மத மாற்ற விவகாரம் வெளிவந்ததால் , கிருத்துவர்களின் அதிருப்தி.
- கூட்டணியிலும், கட்சிக்குள்ளும் இருக்கும் அதிருப்தி வேட்பாளர்கள்
இத்தனை பிரச்சனைகளின் காரணமாய் , திமுக கூட்டணி 60% இடங்களில் வெற்றி பெற்றாலே பெரும் சாதனை. இது நடந்தால், ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே ஆட்சிக்கு எதிரான அலை உருவாவது முதல் முறையாக இருக்கும்.
அதிமுக
அதிமுகவை பொறுத்தவரை, 27% ஓட்டு வங்கியை தக்கவைத்தாலே 20% சதவீத இடங்களை பெறலாம். அதுவே அவர்களுக்கு சாதனைதான். குறிப்பை, கொங்கு பகுதியில், பாஜக தனித்து போட்டியிடுவதால், அங்கே தனக்குண்டான வாக்கு வங்கியை தக்க வைப்பதற்கு அது கடுமையாக போராட வேண்டி இருக்கும். எல்லாவற்றையும் தாண்டி , ஒன்றுபட்ட கட்சியாக அதிமுக போட்டியிடுவதே பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
பாஜக
இந்த தேர்தலில் பாஜக இழப்பதற்கு ஒன்றுமில்லை. குறைந்த அளவிலாலான சீட்டுக்களில் வென்றால் கூட அது மிகப் பெரிய வெற்றிதான் அவர்களுக்கு. அவர்களின் சராசரியான 3% ஓட்டுகளில் இருந்து 5% ஓட்டுகள் வாங்கினால் கூட அதுவும் வெற்றிதான். ஆனால் தற்போதைய கள நிலவரத்தை கணக்கில் கொள்கையில் திரு. அண்ணாமலையின் தலைமையில் கட்சிக்கு மிக அதிக அளவில் ஆதரவு கூடி இருக்கிறது. குறிப்பாக , கன்யாகுமரி மாவட்டம், சென்னையில் பல வார்டுகள், கொங்கு பகுதி முழுவதும் என பாஜக வெல்லக் கூடிய இடங்கள் அதிகம் உள்ளன. என்னைப் பொறுத்தவரை அவர்கள் 400 வார்டுகளில் வெல்லக்கூடும் என்று எண்ணுகிறேன். ஆனால் கள நிலவரத்தைப் பொறுத்து, அவர்கள் 8 இல் இருந்து 10 % ஓட்டுகளுடன் 1000 வார்டுகளில் வெற்றிப் பெற்றால், தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுப்பார்கள். அதுமட்டுமில்லாது, பல்வேறு மேயர் தேர்தல்களில் பாஜகதான் வெற்றி தோல்வியை உறுதி செய்யும் கட்சியாக இருக்கும்.
தனிப்பட்ட முறையில், திரு. சீமான் தலைமையிலான நாதக அனைவரும் உற்று நோக்கவேண்டிய கட்சி. சென்னையில் அவர்கள் 10 % ஓட்டு பெறுவார்களெனில் , முதல் முறை ஓட்டளிக்கும் இளைய தலைமுறை அவரை நோக்கி செல்லலாம். சென்னை, கடலூர் மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இவர்கள் வெற்றி பெறலாம்.
தேர்தல் நாள் & தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் தினம், அரசியல்பார்வையாளர்கள் &ஆய்வாளர்களுக்கு சுவாரஸ்யமான புள்ளி விவரங்களை தரும்.