விராலிமலை : ஜனவரி 20 ம தேதி , விராலிமலையில் உலக சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுகிறது.
உலக சாதனைக்காக நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 2000 காளைகள், 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். முதல்வர் பழனிசாமி போட்டியைக் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
ஜல்லிக்ட்டைத் துவக்கி வைத்த முதல்வர் பழனிசாமி பேசியதாவது, தமிழர்கள் என்றால் வீரம் என்னும் அளவிற்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகள் வரிசையில் விராலிமலையும் இடம்பெறும் அளவிற்கு பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டு நடத்தப்படுகிறது. அலங்காநல்லூருக்கு இணையாக விராமலை ஜல்லிக்கட்டும் இடம்பெறும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் இப்போட்டி நடக்கிறது. முதல் முறையாக இப்போட்டியில் வீரர்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
உலக சாதனைக்காக நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண 30,000 பேர் அமரும் வகையில் வாகன இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கின்னஸ் சாதனை மதிப்பீட்டு குழு நிர்வாகிகளும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த 3 காளைகள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்கள் 3 பேருக்கு கார்கள், இருசக்கர வாகனங்கள், தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், பிரிட்ஜ், சைக்கிள் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட உள்ளன. பாதுகாப்பு பணிக்காக 1000 க்கும் அதிகமான காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.