புத்தக விமர்சனம்

இரு புத்தகங்கள்  -இறக்கும் காலகட்டங்களின் நினைவு குறிப்புகள்

‘ஜெரிமி கோடர்ட்’ நான் வேலை செய்யும் தொழில் நிறுவனத்தின் அமெரிக்கா விற்பனை பிரிதிநிதி. 2013 ஆம் ஆண்டில் முதல் முறையாக அவரை சந்தித்தபோது தனது ரெட்டையர் பெண்களில் ஒருவர், இந்தியரை திருமணம் செய்திருப்பதாக சொன்னார்.

சுதிர் பால் கலாநிதி நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் என்றும் தந்து மகள் லூசியும் மருத்துவர் தான் என்கிற தகவல்கள் கிடைத்தன .அதன் பின் , பால் கலாநிதியின் புற்று நோயை பற்றிய செய்திகள் மற்ற சக அலுவலக நண்பர்கள் மூலம்  அறிந்து கொண்டேன்.புற்று நோய் ஸ்கிட்சையின் ஆரம்ப கட்டத்தில் ,பால் கலாநிதி லூசி தம்பதியினர் ஒரு குழந்தையை செயற்கை  கருவாக்கம் மூலம் பெற்று எடுத்தார்கள் என்கிற தகவல் மிகவும் ஆச்சரியமூட்டியது .


பால் கலாநிதியின் மறைவுக்கு பின் அவர் புற்று நோய் ஸ்கிட்ச்சையில் இருந்த காலகட்டங்களில் அவரால் எழுதப்பட்ட சுயசரிதை புத்தகம் 2016 ஆம்  ஆண்டு வெளியிடப்பட்டது.
அமேசான் கிண்டிலில் தரவிறக்கம் செய்து பல வாரங்களாக அந்த புத்தகத்தை படித்தேன். அதிக அளவிலான மருத்துவ சொல்லாடல்களையும், மருந்து ,சிகிட்சை முறைகளையும் அகராதி கொண்டே படித்து புரிந்து கொள்ள முடிந்தது.


“When Breath Becomes Air ” எந்த தலைப்பிடப்பட்ட அந்த புத்தகம் , தன் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் மருத்துவர் எவ்வாறு தன்னை பாதித்த புற்று நோயை எதிர்கொண்டார் , தனக்கு கிடைத்த எஞ்சிய நாட்களை எந்த வழியிலாவது அர்த்தமுள்ளதாக்கி கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகள் ,அவரது பன்முக தன்மை, குழந்தையை பெற்று கொள்ளும் தீர்மானம், தனக்கு சிகிட்சை  அளிக்கும் பெண் மருத்துவரிடம் நடத்தும்  சிகிட்சை  பற்றிய விவாதங்கள் என  நீண்டு கொண்டே செல்லும்.

https://www.youtube.com/watch?v=1Rg0TJPX_eM


படிக்கும்போதும், படித்து முடித்த பின்பும் தாங்க முடியாத  பெரும்சோகம் ஏற்பட்டுவிட்டது. படித்து முடித்த பின் பால் கலாநிதி தன் மகள் கேடியுடன் இருக்கும் அந்த வீடியோவை யூடிபில் பார்த்த பின் மீண்டும் பெரும் சோகமே ஆட்கொண்டது.


பால் கலாநிதியின் இந்த புத்தகம் பெரும் வரவேற்ப்பை பெற்றது.
ஜெரிமியை மீண்டும் கடந்த ஆண்டு சந்தித்தபோது தன் மகள் லூசி , தன்னை போல புற்று நோயால் மனைவியை இழந்த  ஒரு அமெரிக்கரை திருமணம் செய்துள்ளதாக கூறினார்.
கூகிளில் தேடியபோது ஆச்சரியமாக இருந்தது.


மார்பக புற்று நோயால்  பாதிக்கப்பட்ட நினா ரிக்ஸ் , தன் புற்று  நோய் கால கட்டத்தில் நடந்த நிகழ்வுகளை ‘The bright Hour”  என்ற புத்தகமாக எழுதுகிறார் . அந்த நேரத்தில் பால் கலாநிதியின் புத்தகம் பற்றியும் லூசியை பற்றியும் தன் கணவர்  ஜான் டுபர்ஸ்டீனுக்கு  அறிமுகப்படுத்துகிறார்.தன் மறைவுக்கு பின், ஜான் கண்டிப்பாக லூசியை தொடர்பு கொண்டு நட்புடன் இருக்க வலியுறுத்துகிறார் நினா .

https://www.youtube.com/watch?v=zyaQzzjUL_A

2018 ஆம் ஆண்டு,நினாவின் மறைவுக்கு பின் வெளியிடப்படும் The bright Hour புத்தகத்திற்கு அதை பத்திரிகைகளில்  அறிமுகப்படுத்தும் விதமாக லூசி ஒரு கட்டுரை எழுதுவதன் மூலமாக  ஜான் -லூசி இடையேயான நட்பு தொடங்குகிறது.

The bright Hour புத்தகத்தை நான் இன்னும் வாசிக்கவில்லை.


இருவரின் இரு புத்தகங்கள்,புற்று நோயால் இறக்கும் தருவாயில்,தங்கள் இறுதி நாட்களில்  எழுதப்பட்டு ,அவர்கள் இறந்த பின் வெளியாகி பெரிய வரவேற்ப்பை பெறுகிறது. தங்கள் துணையை இழந்தவர்கள் ,தங்கள் இழப்பை ,வலியை உணர்ந்தவர்கள் சேர்ந்து வாழ முடிவு செய்வது என  அவர்கள் வாழ்க்கை ஆச்சரியத்துடன் நம்பிக்கை அளிக்கிறது.

(Visited 198 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close