தினம் ஒரு குறள்
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.
நெறிநூல்கள் பல கற்று, தான் கற்ற நூல்கள் தரும் அனுபவத்தைக் கொண்டு, மாற்று வேந்தர் மனதில் நிற்கும் வகை சொல்லி, அவர் தம் மிரட்டும் பார்வைக்கு அஞ்சாமல், காலத்திற்கு ஏற்ப காரியத்தில் குறியாக இருந்து தன் செயலின் வெற்றிக்கு உதவுவது அறிபவனே, தூதனாவான்.
அறிவும், அனுபவமும் தந்த பாடத்தில் இரண்டு வரிகளில் அயல்நாட்டு விவகாரங்களைக் கையாள வைத்த பெருமை, உத்தி, திறன் வேறெந்த நூலூக்காவது இருக்குமா என்பது சந்தேகமே!
(Visited 28 times, 1 visits today)
0