சென்னை: அதிமுக – தேமுதிக இடையே லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளதாகவும் , மேலும் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பா.ஜ., பா.ம.க., புதியதமிழகம், புதியநீதிக்கட்சி, என்ஆர் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் நாளையோ நாளை மறுநாளோ இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக வலுவான கூட்டணியை அமைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும். அதிமுகவையும் பாஜகவையும் தமிழகத்தில் எந்தக் கட்சியும் அரவணைக்காது. இரு கட்சிகளும் தனித்து விடப்படும் என்ற நிலை இன்று முற்றிலும் மாறி உள்ளது. தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளிவந்தால் , எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என்பது தெரிய வரும்.
(Visited 20 times, 1 visits today)