கொல்கத்தா: திரிணமுல் காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் படுபாதாளத்திற்கு சென்று விடும். இதை ராகுலே ஏற்றுக்கொண்டார் என்று மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோமன்மித்ரா தெரிவித்து உள்ளார். இதனால் காங்கிரஸ் திரிணமுல் காங்கிரஸ் கூட்டணி கிடையாது என்பது தெளிவாகி விட்டது.
ராகுல் காந்தி மோடியை எதிர்க்கக் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன என்று ஒவ்வொரு பேட்டியிலும் பொது மேடைகளிலும் சொன்னாலும், காங்கிரசால் வெற்றி பெரும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடியவில்லை என்பதே கள நிலவரமாக உள்ளது.
காங்கிரஸ் சில மாநிலங்களில் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டது. சில மாநிலங்களில் பிற கட்சிகள் காங்கிரசை ஏற்றுக்கொள்ள வில்லை. டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க மாட்டோம் என்று இரு கட்சிகளும் பரஸ்பரம் தெரிவித்து விட்டன.
உபியில் பிஎஸ்பி எஸ்பி கூட்டணியில் காங்கிரஸ் கிடையாது என்று அக்கட்சிகள் தெரிவித்து விட்டன. ஆந்திராவிலும் தெலுகுதேசமும், காங்கிரசும் தனித்துப் போட்டி என்று அறிவித்து விட்டது. ஓடிசாவிலும் காங்கிரஸ் தனித்தே போட்டியிட வேண்டிய சூழல் உள்ளது.
தற்போதைய சூழலில் தேசியவாத காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மட்டுமே காங்கிரஸ் தலைமையை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்து உள்ளன. கூட்டணி இடங்களை உறுதி செய்தால் மட்டுமே இக்கூட்டனியும் நிலைக்குமா என்று பார்க்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில் ராகுல்காந்தி, எப்போதும் இல்லாத அளவிற்கு பாஜகவை எதிர்த்து கட்சிகள் ஒன்று கூடி உள்ளன என்கிறார். பாஜகவை மாநில கட்சிகளுடன் சேர்ந்து எதிர்க்காமல் பாஜகவே எப்படி வீழ்த்தும் காங்கிரஸ் என்பதைக் காட்டிலும் காங்கிரஸ் மேற்கூறிய மாநிலங்களில் குறிப்பிட்ட இடங்களையும் பிடிக்காது என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.