டெல்லி: பாஜகவை எதிர்த்து டெல்லியில் ஆம் ஆத்மி விடுத்த அழைப்பை ஏற்று திமுகவிலிருந்து கனிமொழி, சரத்பவார், பாரூக் அப்துல்லா, கெஜ்ரிவால், மமதா பானர்ஜி உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய மமதா , நாட்டிற்காக என்னையும் எங்களது கட்சியையும் தியாகம் செய்யத் தயார் என்று பேசியவர் அதன் பின்பு சொன்ன வார்த்தைகள் எல்லாம் தான் அரசியல் ரீதியாக முக்கியமானது.
அவர் கூறியதாவது, ” நாங்கள் மாநிலத்தில் காங்கிரஸ், கம்யுனிஸ்ட், பாஜகவை எதிர்க்கிறோம். அங்கு காங்கிரஸ் எங்களுக்கு எதிராக செயல்பட்டு பாஜகவை வெற்றி பெற வைத்துவிடக்கூடாது. அப்படி வாக்குகள் சிதறாமல் இருந்தால், நாங்கள் 42/42 இடங்களையும் பிடிப்போம். காங்கிரஸ் பாஜகவை மாநில கட்சிகள் வலுவாக இருக்கும் மாநிலத்தில் வாக்குகளைப் பிரிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. குறிப்பாக டெல்லியில் ஆம் ஆத்மி, மகாராஸ்டிராவில் சரத்பவார், உபியில் பிஎஸ்பி எஸ்பி வாக்குகளைப் பிரிக்கும் வேலையை செய்தால் பாஜகவிற்கே பலன் அளிக்கும். காங்கிரஸ் தங்களது முழு பலத்தையும் மபி, சத்தீஸ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் காட்ட வேண்டும் . மாநில அளவில் நாங்கள் காங்கிரசை எதிர்க்கிறோம், ஆனால் தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கிறோம் என்றார்.”
இதற்குப் பொருள் என்ன? காங்கிரசை எங்களுடைய மாநிலங்களில் அரசியல் செய்யாமல் ஒதுங்கி இருந்து , எங்களை வெற்றி பெற உழையுங்கள் என்று ராகுல் முன்பாகவே சொல்லாமல் சொன்னார் மமதா. வாக்குகள் பிரிந்து பாஜக வெற்றி பெற்று விடக்கூடாது என்று சொல்லும் மமதா, காங்கிரசுக்கு சில இடங்களைக் கொடுத்து ஏன் தன்னுடைய வெற்றி இடங்களை இழக்க வேண்டும் என்று நினைப்பதால்தான் கூட்டணிக்குள் காங்கிரசைக் கொண்டு வரவில்லை. தேச நலனுக்காக தன்னையே தியாகம் செய்யத் தயார் என்பவர், தனது மாநிலத்தில் அதைச் செய்ய இயலாது என்கிறார் என்பதுதானே அதன் பொருள்.