இந்தியாஉலகம்பொருளாதாரம்

வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய தொழில் நுட்ப மையம்-புனேயில் 7000 கோடி முதலீடு

வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது துணை நிறுவனமான ஸ்கோடா கார் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய தொழில் நுட்ப மையத்தை நேற்று புனே நகரில் தொடங்கி வைத்தது.

செக் குடியரசு நாட்டின் பிரதமர் ஆண்ரேஜ் பாபிஸ் இந்த தொழில் நுட்ப மையத்தை திறந்து வைத்தார்.

வோக்ஸ்வேகன் கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவின் கார் சந்தையில்  5 விழுக்காடு அளவு விற்பனையை இலக்காக கொண்டு இந்தியா 2.0 என்ற திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.இத்திட்டத்தின் மூலம் இந்திய கார் சந்தைக்கான புதிய கார்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தாயாரிப்பதற்கான ஆரம்ம கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.இந்த திட்டத்தின் மொத்த முதலீடு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8000 கோடியாகும்.

புனேயில் நேற்று தொடங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையம் இந்தியா 2.0 கார் திட்டத்திற்கான ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி சேவைகளை வழங்கும்.இந்த மையத்தில் 250 பொறியாளர்கள் பணிபுரிவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தாயாரிக்கப்பட இருக்கும் கார்கள் 2020-2021 ஆண்டு வாக்கில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

 

 

(Visited 23 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close