மாசுக்களை பாதுகாப்பற்ற முறையில் வெளிப்படுத்தியதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோல்ஸ்வேகன் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் நாளை (ஜன.,18) மாலை 5 மணிக்குள் ரூ.100 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அபராதம் செலுத்த தவறினால் வோல்ஸ்வேன் நிறுவனத்தின் இந்திய மேலாண் இயக்குனர் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். அத்துடன் வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்கு இந்தியாவில் உள்ள அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
(Visited 23 times, 1 visits today)